search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "minority"

    • தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • பா.ஜ.க. அரசை விரைவில் அகற்ற உறுதியேற்க வேண்டும் உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பினர்.

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகம் திருவள்ளுவர் சிலை அருகில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மதுரை மாநகர் மாவட்டக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத்தலைவர் கே.அலாவுதீன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் லூர்து, மாவட்டக்குழு உறுப்பினர் முகமது அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைேமயர் நாகராஜன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.

    யூனியன் முஸ்லீம் லீக் மண்டல பொறுப்பாளர் அவ்தா காதர், சமய உரையாடல் குழு செயலர் பெனடிக் பர்ணபாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநிலக்குழு உறுப்பினர் விஜயராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த வேண்டும். அங்குள்ள மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நிறுத்தப்பட்ட சிறுபான்மையினருக்கான கல்வி உதவித்தொகையை மீண்டும் வழங்க வேண்டும். பா.ஜ.க. அரசை விரைவில் அகற்ற உறுதியேற்க வேண்டும் உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பினர்.

    • பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் கடன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
    • கூட்டுறவு வங்கி கோரும் மற்ற ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

    திருப்பூர் :

    தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களான தனிநபர் கடன், சுயஉதவிக்குழுக்களுக்கான சிறுதொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன், கல்விக்கடன் திட்டம் ஆகியவை செயல்படுத்தப்படுகிறது.

    திருப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் கிறிஸ்தவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி, ஜெயின் ஆகிய சிறுபான்மையினர்கள் கடன் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து உரிய சான்றுகளுடன் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் தங்களின் மதத்திற்கான சான்று, ஆதார் அட்டை, வருமான சான்று, ரேஷன் கார்டு, இருப்பிடச்சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம், திட்ட அறிக்கை, ஓட்டுனர் உரிமம், கூட்டுறவு வங்கி கோரும் மற்ற ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

    கல்விக்கடனுக்கு விண்ணப்பிக்கும்போது பள்ளி மாற்றுசான்றிதழ், உண்மை சான்றிதழ், கல்விக்கட்டணங்கள் செலுத்திய ரசீது, மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் நகல்களை சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை 0421 2999130 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    • குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் ஆகாஷ் பெற்றுக்கொண்டார்
    • 10 பயனாளிகளுக்கு 47 ஆயிரத்து 500 மதிப்பிலான இலவச இஸ்திரி பெட்டிகளையும் மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வழங்கினார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் ஆகாஷ் பெற்றுக்கொண்டார். கூட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் 10 பயனாளிகளுக்கு ரூ.55 ஆயிரம் மதிப்பிலான இலவச தையல் இயந்திரங்களையும் மற்றும் 10 பயனாளிகளுக்கு 47 ஆயிரத்து 500 மதிப்பிலான இலவச இஸ்திரி பெட்டிகளையும் மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வழங்கினார்.

    இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக் கோருதல், பட்டாமாறுதல், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 415 மனுக்கள் பெறப்பட்டது.

    அ.ம.மு.க.வில் பெரும்பான்மை, சிறுபான்மை என்ற பிரிவினை கிடையாது என்று டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார். #TTVDhinakaran

    வேலூர்:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் நேற்று வேலூர் மண்டி தெருவில் திறந்தவெளி ஜீப்பில் பிரசாரம் செய்தார். அவர் பேசியதாவது:-

    மோடி ஆட்சிக்கு முடிவு கட்டும் நேரம் வந்துவிட்டது. அதோடு தமிழகத்தை வஞ்சிக்கும் துரோகிகளின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர 18 சட்டமன்ற இடைத்தேர்தலும் வந்துள்ளது. இது ஒரு மினி சட்டமன்ற தேர்தல். ஏனென்றால் இந்த 18 தொகுதிகளிலும் வெல்ல முடியவில்லை என்றால் மோடி என்ன?, அவர்களுக்கெல்லாம் டாடி வந்தால் கூட இவர்களை காப்பாற்ற முடியாது. இவர்களுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று தான் ஆர்.கே.நகர் மக்கள் என்னை வெற்றி பெற வைத்தார்கள்.

    துரோகிகளுடன் இணைந்து தற்போது இரட்டை இலையை தூக்கி கொண்டு வருகிறார்கள். இரட்டை இலைக்கு பின்னால் மோடி இருக்கிறார் என்று யாரும் மறந்து விடக்கூடாது. இந்த அமைச்சர்களுக்கு பின்னாலும் மோடி தான் இருக்கிறார். ஜெயலலிதாவின் கட்சி இது.


    ஆனால் இந்த படுபாவிகள் ஆட்சியையே மோடியிடம் அடகு வைத்து விட்டார்கள். ஜெயலலிதா கட்சி தொடங்கியதில் இருந்து கடைசி காலம் வரை அனுமதிக்கபடாதவர்கள் இன்று இரட்டை இலையை தூக்கிக் கொண்டு வந்து நம்மிடம் வாக்கு கேட்கிறார்கள். அவர்களுக்கு நீங்கள் முடிவு கட்ட வேண்டும்.

    மற்றொரு வேட்பாளரை அவரது தந்தை தத்து கொடுத்துள்ளதாக கூறுகிறார்கள். அவர் யார் என்று உங்களுக்கு தெரியும். ஆட்சியில் இல்லாத போதே பிரியாணி கடைகள், பியூட்டி பார்லர், டீ கடைகள் அடித்து நொறுக்குகிறார்கள். கடந்த 7 ஆண்டுகளாக மக்கள் இவர்களை ஆட்சி கட்டிலில் அனுமதிக்கவில்லை.

    தற்போது அவர்கள் ராகுலுக்கு ஆதரவாக நிற்கிறார்கள். ஒருவேளை நீங்கள் அவர்களுக்கு வாக்களித்தீர்கள் என்றால் அடுத்த நிமிடமே அவர்கள் மோடியின் பக்கம் சென்று விடுவார்கள்.

    ஏனென்றால் அவர்களின் வரலாறு அப்படி. கட்சி மாறுபவர்கள் அவர்கள். ஆட்சி அதிகாரத்துக்காக என்ன வேண்டும் என்றாலும் கூறுவார்கள். தமிழை வைத்து பிழைப்பு நடத்துவார்கள். இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டபோது வாய் மூடி நின்றவர்கள் அவர்கள்.

    வேலூர் மக்கள் அரசியல் அறிவு கொண்டவர்கள். தேசிய கட்சிகளால் தமிழகத்துக்கு என்ன பலன் கிடைத்து விடப்போகிறது. பாலாறு, காவிரி, மீத்தேன், நீட் போன்ற பல்வேறு பிரச்சினைகளை தமிழகத்துக்குள் வர அவர்கள் கதவை திறந்து விடுவார்கள்.

    தத்து கொடுத்து விட்டார்கள் என நினைத்து நீங்கள் ஏமாந்து வாக்களித்தால் உங்களது சொத்துகள் அனைத்தும் பறிக்கப்படும். அவர்களுக்கு அதிகாரம் கிடைத்தால் நாடு சுருட்டப்படும். தமிழகத்தை விற்று விடுவார்கள். தமிழகத்தில் மக்கள் ஆட்சி மலர எங்களுக்கு பரிசு பெட்டகம் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.

    சின்னம் கிடைப்பதற்காக நாங்கள் துரோகிகளிடம் போராடி நீதிமன்றம் சென்று சின்னம் பெற்றுள்ளோம். கூட்டணி கட்சியினரும் நம்முடைய வெற்றி சின்னமான பரிசு பெட்டகம் சின்னத்தில் தான் போட்டியிடுகிறார்கள். நம்மிடம் பெரும்பான்மை, சிறுபான்மை என்கிற பிரிவினை கிடையாது.

    இவ்வாறு அவர் பேசினார்.  #TTVDhinakaran

    நமது நாட்டில் சிறுபான்மையினத்தவர்கள் யார்? என்பதை மூன்று மாதங்களுக்குள் தெளிவுப்படுத்துமாறு தேசிய சிறுபான்மையின நல ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியுள்ளது. #SCasksNCM #NCMtodefine #defineMinority
    புதுடெல்லி:

    பா.ஜ.க.வை சேர்ந்த அஷ்வினி உபாத்யாய் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். நமது நாட்டில் இந்து மக்கள் பெரும்பான்மையாக அதிக அளவில் வாழ்ந்து வருவதால் இதர மதத்தினரை சிறுபான்மையினத்தவர்களாக கருதி பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

    ஆனால், நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள சில மாநிலங்களில் கிறிஸ்தவ மக்கள் 80 முதல் 90 சதவீதம் அளவுக்கு வாழ்ந்து வருகின்றனர். இங்கு இந்துக்கள் வெறும் 2 முதல் 8 சதவீதம் மட்டுமே உள்ளனர்.

    எனினும், இங்கெல்லாம் 2 முதல் 8 சதவீதம் அளவில் உள்ள இந்துக்களுக்கு சலுகைகள் கிடைப்பதில்லை. பெரும்பான்மையினத்தவர்கள் என்ற முறையில் இவர்களுக்கான சலுகைகள் புறக்கணிக்கப்படுகிறது.
    சிறுபான்மையினத்தவர்கள் என்று முத்திரை குத்தப்பட்டுள்ள 80 முதல் 90 சதவீதம் மக்கள் அனைத்து சலுகைகளையும் அனுபவித்து வருகின்றனர்.

    எனவே, மாநில வாரியாக சிறுபான்மையினத்தவர்கள் யார்? என்பதை அடையாளம் காணும் வழிகாட்டி நெறிமுறைகளை உருவாக்குமாறு மத்திய அரசுக்கு இந்த நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என இவ்வழக்கின் மனுதாரரான அஷ்வினி உபாத்யாய் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வின் முன்னர் இன்று விசாரணைக்கு வந்தது.

    மனுதாரரான அஷ்வினி உபாத்யாய் இதே கருத்தை முன்வைத்து தேசிய சிறுபான்மையின நல ஆணையத்தை அணுகுமாறு அறிவுறுத்திய நீதிபதிகள், இவ்விவகாரம் தொடர்பாக இன்னும் மூன்று மாதங்களுக்குள் முடிவெடித்து அறிவிக்குமாறு தேசிய சிறுபான்மையின நல ஆணையத்தை கேட்டுக் கொண்டுள்ளனர்.

    இவ்வழக்கு மூன்று மாதங்களுக்கு பின்னர் மீண்டும் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. #SCasksNCM  #NCMtodefine #defineMinority
    ×