சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ்

குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் ஆகாஷ் பெற்றுக்கொண்டார்10 பயனாளிகளுக்கு 47 ஆயிரத்து 500 மதிப்பிலான இலவச இஸ்திரி பெட்டிகளையும் மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வழங்கினார்.
கலெக்டர் ஆகாஷ் பெண் ஒருவருக்கு நலத்திட்ட உதவி வழங்கிய காட்சி
கலெக்டர் ஆகாஷ் பெண் ஒருவருக்கு நலத்திட்ட உதவி வழங்கிய காட்சி
Published on

தென்காசி:

தென்காசி மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் ஆகாஷ் பெற்றுக்கொண்டார். கூட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் 10 பயனாளிகளுக்கு ரூ.55 ஆயிரம் மதிப்பிலான இலவச தையல் இயந்திரங்களையும் மற்றும் 10 பயனாளிகளுக்கு 47 ஆயிரத்து 500 மதிப்பிலான இலவச இஸ்திரி பெட்டிகளையும் மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வழங்கினார்.

இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக் கோருதல், பட்டாமாறுதல், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 415 மனுக்கள் பெறப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com