search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aadi Amavasi"

    • திரவுபதி அம்மன் கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.
    • சிவப்பு பட்டாடை அலங்காரத்தில் திரவுபதி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அக்ரஹாரம் திரவுபதி அம்மன் கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. சிவப்பு பட்டாடை அலங்காரத்தில் திரவுபதி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவிலில் உள்ள தருமராஜர் உள்ளிட்ட பஞ்சபாண்டவர், கிருஷ்ணபகவான் சுவாமிகளுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற்றனர். இதேபோல் வாழப்பாடி ஆத்துமேடு பெரியாண்டிச்சி அம்மன், வாழப்பாடி செல்வமுத்து மாரியம்மன், புதுப்பட்டி மாரியம்மன் கோவில்களிலும் ஆடி அமாவாசை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    • காகங்கள் வந்து சாப்பிட்டால் அது தங்கள் முன்னோர்களே வந்து சாப்பிட்டதாக பக்தர்கள் நினைப்பது ஐதீகம்.
    • கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் சார்பில், ஆங்காங்கே பாதுகாப்பு தடுப்பு கம்பிகளும் போடப்பட்டிருந்தது.

    பேரூர்,

    ஆடி அமாவாசையை முன்னிட்டு, பேரூர் நொய்யல் படித்துறையில் முன்னோர்களுக்கு பக்தர்கள் தர்ப்பணம் கொடு த்து வழிபாடு செய்தனர்.

    பக்தர்கள் இறந்துபோன தங்கள் முன்னோர்களின் பெயரைச் சொல்லி, எள், உருண்டை, பச்சரிசி சாதம், காய்கறிகள் உள்ளிட்டவற்றை படைத்து, அவர்களை நினைத்து மனமுருகி வழிபட்டனர். மேலும், அவர்களுக்கு பிடித்தமான உணவுகளை படைத்து, தீபாராதனை செய்து, முன்னோர்களை வழிபட்டனர். பின்னர் எள் உருண்டை மற்றும் பச்சரிசி சாதத்தை காகங்களுக்கு வைத்தனர். காகங்கள் வந்து சாப்பிட்டால் அது தங்கள் முன்னோர்களே வந்து சாப்பிட்டதாக பக்தர்கள் நினைப்பது ஐதீகம்.

    ஆடி மாதம் அமாவாசையை முன்னிட்டு இன்று மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்தும் படையல் இட்டும், நெய் தீபம் ஏற்றியும் வழிபட்டனர். குறிப்பாக இந்த ஆண்டு ஆடி மாதத்தில் வருகின்ற 2-வது அமாவாசையாகும்.கடந்த அமாவாசையோடு ஒப்பிடும்போது, இந்த அமாவாசைக்கு பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கோவை மாவட்ட சுற்று வட்டார மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் மக்கள் வந்து தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர். நொய்யல் ஆற்றில் நீர் வராததால், பேரூர் பேரூராட்சி சார்பில் ஆங்காங்கே தற்காலிக பைப் நீர் குழாய்களை அமைக்கப்பட்டிருந்தது.

    மேலும் தர்ப்பண வழிபாட்டுக்கு வரும் பொதுமக்கள் தாங்கள் கொடுக்கும் தர்ப்பண இலைகளை ஆங்காங்கே விட்டுச் செல்வதால் சுகாதார சீர்கேடும் ஏற்படும் வகையில் உள்ளது. இதைத் தடுக்கும் வகையில், பேரூர் பேரூராட்சி சார்பில் ஆங்காங்கே பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு குறித்து, பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்யப்பட்டது. மேலும், கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் சார்பில், ஆங்காங்கே பாதுகாப்பு தடுப்பு கம்பிகளும் போடப்பட்டிருந்தது.

    • தாலாட்டுப்பாடல்கள் பாடியவுடன் ஊஞ்சல் உற்சவம் முடிவடைந்தது.
    • பவானி அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் வைக்கப்பட்டது.

    விழுப்புரம்:

    மேல்மலையனூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடி அமாவாசை விழா நேற்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு கருவறையில் உள்ள அம்மனுக்கும் சிவபெருமானுக்கும் பால், தயிர், சந்தனம், மஞ்சள் விபூதி, குங்குமம், இளநீர் பஞ்சாமிர்தம், தேன், பன்னீர் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

    உற்சவ அம்மனுக்கு பலவித பூக்களைக் கொண்டு பவானி அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் வைக்கப்பட்டது. இரவு 10.30 மணிக்கு அங்கிருந்த உற்சவ அம்மனை பம்பை, மேள தாளம் முழங்க வடக்கு வாயில் வழியாக கொண்டு செல்லப்பட்டு ஊஞ்சல் மண்டபத்தில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் அமர்த்தினர். பின்பு பூசாரிகள் பக்திப் பாடல்களைப் பாடினர். இதைக்கண்ட பக்தர்கள் பலர் அருள் வந்து ஆடினர். ஊஞ்சலில் அம்மன் முன்னும் பின்னும் அசைந்தாடியபடி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இரவு 12 மணியளவில் தாலாட்டுப்பாடல்கள் பாடியவுடன் ஊஞ்சல் உற்சவம் முடிவடைந்தது. விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி கும்பிட்டனர்.

    விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், பெங்களூர், புதுச்சேரியிலிருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. விழாவுக்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழு தலைவர் சந்தானம், பூசாரி அறங்காவலர்கள் செந்தில்குமார் பூசாரி, தேவராஜ் பூசாரி, ராமலிங்கம் பூசாரி, செல்வம் பூசாரி, சரவணன் பூசாரி, சரவணன் பூசாரி, வடிவேல் பூசாரி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • நொய்யல் ஆற்றில் தண்ணீர் இல்லாததால் பிரத்யேகமாக அமைக்கப்பட்ட ஷவரில் நீராடி சென்றனர்
    • 2 அமாவாசை வருவதாலும் 2-வது அமாவாசை தான் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதாலும் இன்று பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட குறைவாகவே இருந்தது.

    கோவை,

    இன்று அம்மனுக்கு உகந்த ஆடி மாதம் பிறந்துள்ளது. இந்த வருட ஆடி மாதத்தில் 2 ஆடி அமாவாசை வருகிறது. இன்று மற்றும் அடுத்த மாதம் 16-ந் தேதி ஆடி அமாவாசை வருகிறது.

    ஆடி அமாவாசையான இன்று தினம் தமிழகம் முழுவதும் பல இடங்களிலும் பொதுமக்கள் தர்ப்பணம் கொடுத்தனர். கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் அருகே, நொய்யல் ஆற்றங்கரையில் உள்ள தர்ப்பண மண்டபத்திலும் இன்று காலை முதலே கோவை மட்டுமன்றி அண்டை மாவட்டங்களான திருப்பூர், நீலகிரி மற்றும் கேரளாவில் இருந்தும் பக்தர்கள் வந்தனர். அவர்கள் நேராக நொய்யல் படித்துறையில் உள்ள தர்ப்பண மண்டபத்திற்கு சென்றனர்.

    அங்கு தங்கள் முன்னோர்களின் பெயரை சொல்லி திதி கொடுத்தனர். தொடர்ந்து எள் உருண்டை, பச்சரி சாதம் உள்ளிட்டவற்றை படைத்து, அவர்களை நினைத்து மனம் உருகி வழிபட்டனர்.

    மேலும் அவர்களுக்கு பிடித்தமான உணவுகளை படைத்து, தீபாராதனை செய்து, முன்னோர்களை வழிபட்டனர். பின்னர் எள் உருண்டை மற்றும் பச்சரி சாதத்தை காகங்களுக்கு வைத்தனர். காகங்கள் வந்து சாப்பிட்டால் அது தங்கள் முன்னோர்களே வந்து சாப்பிட்டதாக பக்தர்கள் நினைப்பது ஐதீகம்.

    திதி கொடுக்க வரும் பக்தர்கள் பேரூர் நொய்யல் ஆற்றில் நீராடுவது வழக்கம். ஆனால் தற்போது ஆறு வறண்டு காட்சியளிக்கிறது. இதன் காரணமாக கோவில் நிர்வாகம் பேரூர் படித்துறையில் பிரத்யேகமாக ஷவர் அமைத்திருந்தது.

    இன்று திதி கொடுக்க வந்த பக்தர்கள் ஷவரில் குளித்து விட்டு சென்றனர். மேலும் ஆத்து விநாயகரை வணங்கி விட்டு, அங்கு நிற்கும் மாடுகளுக்கு அகத்திக்கீரையும் வாங்கி கொடுத்தனர். தொடர்ந்து பக்தர்கள் பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு சென்று, பட்டீஸ்வரர், பச்சை நாயகி அம்மனை மனம் உருகி தரிசனம் செய்தனர். பின்னர் சிறிது நேரம் அங்கு இருந்து விட்டு மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டு சென்றனர்.

    வழக்கமாக ஆடி மாதத்தில் வரும் அமாவாசையில் பேரூர் படித்துறையில் பக்தர்கள் நிற்க முடியாத அளவுக்கு கூட்டம் அலைமோதும். இந்த வருடம் 2 அமாவாசை வருவதாலும் 2-வது அமாவாசை தான் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதாலும் இன்று பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட குறைவாகவே இருந்தது.

    பக்தர்கள் வந்து திதி கொடுப்பதும், போவதுமாக இருந்தனர். இதனால் அங்கு எந்தவித போக்குவரத்து பாதிப்பும் ஏற்படவில்லை.

    கோவில் நிர்வாகம் கூட்டம் வந்தால் கட்டுப்படுத்துவதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு இருந்தது.

    • சேர்மன் அருணாசல சுவாமி கோவில் ஆடி அமாவாசை திருவிழா 30-ந்தேதி வரை 12 நாட்கள் நடக்கிறது.
    • 29-ந்தேதி காலை 4 மணிக்கு 2-ம் காலம் வெள்ளை சாத்தி தரிசனம், காலை 9 மணிக்கு பச்சை சாத்தி அபிசேகம், பகல் 1 மணிக்கு பச்சை சாத்தி தரிசனம் நடக்கிறது.

    ஏரல்:

    ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோவில் ஆடி அமாவாசை திருவிழா இன்று காலை 7.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து இரவு 8 மணிக்கு அருணாசல சுவாமி கோவிலை வலம் வருதல் நடைபெறுகிறது. திருவிழா 30-ந்தேதி வரை 12 நாட்கள் நடக்கிறது.

    வருகிற 28-ந்தேதி ஆடி அமாவாசை திருவிழா நடக்கிறது. அன்று பகல் 1 மணிக்கு மேல் சுவாமி உருகு பலகையில் கற்பூரவிலாசம் வரும் காட்சி, அபிசேக ஆராதனை, மாலை 5 மணிக்கு இலாமிச்சவேர் சப்பரத்தில் சேர்ம திருக்கோல பவனி, இரவு 11 மணிக்கு 1-ம் காலம் கற்பகப் பொன் சப்பரத்தில் எழுந்தருளல் நடக்கிறது.

    29-ந்தேதி காலை 4 மணிக்கு 2-ம் காலம் வெள்ளை சாத்தி தரிசனம், காலை 9 மணிக்கு பச்சை சாத்தி அபிசேகம், பகல் 1 மணிக்கு பச்சை சாத்தி தரிசனம், அதன்பின் ஏரல் நகர வீதி தரிசனம், ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கோவிலில் மாலை 6 மணிக்கு தாகசாந்தி, ஏரல் நகர் வீதிகளில் தரிசனம், 30-ந்தேதி 12-ம் திருவிழாவுடன் ஆடி அமாவாசை திருவிழா நிறைவுபெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை அக்தார் அ.ரா.க.அ. கருத்தப்பாண்டிய நாடார் செய்து வருகிறார்.

    ×