ஏரலில் இலவச கண் பரிசோதனை முகாம்

ஏரல் தூய தெரசாள் நடுநிலைப் பள்ளியில் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.முகாமில் 9 பேரை சிகிச்கைக்காக அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முகாம் நடைபெற்றபோது எடுத்தபடம்.
முகாம் நடைபெற்றபோது எடுத்தபடம்.
Published on

சாயர்புரம்:

ஏரல் அருகே உள்ள சிறுத்தொண்ட நல்லூர் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி கிளை மற்றும் தூத்துக்குடி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய கண் பரிசோதனை முகாம் ஏரலில் தூய தெரசாள் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது

டி.எம்.பி. பவுன்டேசன் சவுந்திர பாண்டியன் தலைமை தாங்கினார். தெரசாள் ஆலய பங்கு தந்தை ராஜா முன்னிலை வகித்தார். முகாமில் 193 பயனாளிகள் கலந்து கொண்டனர். இதில் 9 பேரை சிகிச்கைக்காக தூத்துக்குடி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

டி.எம்.பி. வங்கி மேலாளர் பால்ராஜ் , பாக்கர் அலி, பேரூராட்சி தலைவர் சர்மிளா மணிவண்ணன், பள்ளி ஆசிரியர் வின்சென்ட் வெள்ளையா, ஏரல் உதவும் கரங்கள் தலைவர் அருணாசலம், அரவிந்த் கண் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் டி.எம்.பி. வங்கி ஊழியர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் ‌கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com