என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முத்துப்பேட்டையில்  அம்மன் கழுத்தில் கிடந்த தங்க நகை கொள்ளை
    X

    முத்துப்பேட்டையில் அம்மன் கழுத்தில் கிடந்த தங்க நகை கொள்ளை

    • சம்பவத்தன்று பூசாரி சாரதா தேவி வழக்கம்போல் பூஜையை முடித்துவிட்டு கோவிலை பூட்டி விட்டு சென்றார்.
    • மர்ம நபர்கள் கோவிலின் மேல்கூரை வழியாக புகுந்து இந்த துணிகர செயலை செய்துள்ளனர்.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த இடும்பாவனம் மேலவாடியக்காடு கிராமத்தில் பிரசித்திபெற்ற ஸ்ரீஅமிர்த வள்ளியம்மன் கோவில் உள்ளது.

    சம்பவத்தன்று பூசாரி சாரதா தேவி வழக்கம்போல் பூஜையை முடித்துவிட்டு கோவிலை பூட்டி விட்டு சென்றார்.

    இந்நிலையில் மீண்டும் கோவிலை திறக்க வந்தவர் அங்கு கருவறை கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அங்கு அம்மன் கழுத்தில் இருந்த 1½ பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    மேலும் மர்ம நபர்கள் கோவிலின் மேல்கூரை வழியாக புகுந்து இந்த துணிகர செயலை செய்துள்ளனர்.இது குறித்து கோவில் நிர்வாகி குணசேகரன் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தம், சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வராஜ், பசீர், தலைமை காவலர் ராமலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×