என் மலர்

  நீங்கள் தேடியது "melmalayanur"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பவுர்ணமியையொட்டி மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
  மேல்மலையனூரில் உள்ள பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவிலில் பவுர்ணமியையொட்டி நேற்று முன்தினம் சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு கருவறையில் உள்ள அம்மனுக்கு பால், மஞ்சள், குங்குமம், தயிர், இளநீர், சந்தனம் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

  அதைத்தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் மேல்மலையனூர், அவலூர்பேட்டை, செஞ்சி, திண்டிவனம் பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

  இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பிரகாஷ், அறங்காவலர்கள் செல்வம், ஏழுமலை, ரமேஷ், கணேசன், சரவணன், மணி, சேகர், கண்காணிப்பாளர் வேலு, ஆய்வாளர் அன்பழகன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். வளத்தி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

  சங்கராபுரம் அருகே உள்ள அ.பாண்டலம் மகாநாட்டு மாரியம்மன் கோவிலில் பவுர்ணமி பூஜை நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
  விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் உள்ள பிரசித்திபெற்ற அங்காளம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசிப்பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து மறுநாள் மயானக்கொள்ளை விழாவும், 5-ம் நாள் தீமிதி விழாவும் நடைபெற்றது. விழாவில் தினசரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, பூதம், சிம்மம், அன்னம், யானை போன்ற வாகனங்களில் அம்மன் எழுந்தருளி வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் காலை அங்காளம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்து இரவு யானை வாகனத்தில் வீதிஉலா நடைபெற்றது.

  7-ம் நாள் விழாவான நேற்று, தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, கருவறையில் உள்ள அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் உற்சவ அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, உட்பிரகாரத்தில் வைக்கப்பட்டிருந்தார். விழாவையொட்டி பனை, காட்டுவாகை, புளி உள்ளிட்ட மரங்களை கொண்டு மேற்கு வாயிலின் எதிரே புதிதாக உருவாக்கப்பட்டிருந்த தேர் பூமாலைகள், வாழை குலைகளால் அலங்காரம் செய்யப்பட்டது.

  தொடர்ந்து மதியம் 2.30 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட தேர் கோவிலின் வடக்கு வாயில் முன்பு கொண்டு வந்து நிறுத்தப்பட்டு இருந்தது. இதையடுத்து, கோவில் உட்பிரகாரத்தில் இருந்து உற்சவ அம்மனை பம்பை- உடுக்கை, மேளதாளங்களுடன் அங்குள்ள ஊஞ்சல் மண்டபத்துக்கு பூசாரிகள் ஊர்வலமாக கொண்டு வந்தனர். பின்னர் உற்சவ அம்மனுக்கு மாலை அணிவித்தவுடன், தேரில் எழுந்தருளினார். பின்னர் முக்கியஸ்தர்களுக்கு கோவில் அறங்காவலர்கள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. அதைத்தொடந்து அம்மனுக்கும், தேருக்கும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

  இதையடுத்து அங்கு திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்றும் ஓம் சக்தி அங்காளம்மனே என்றும் பக்தி கோஷங்களை எழுப்பியபடி தேரை வடம் பிடித்து இழுத்தனர். பக்தர்கள் வெள்ளத்தில் தேர் அசைந்தாடி வந்த போது, பக்தர்கள் சிலர் தங்களது வயலில் விளைந்த மணிலா, நெல், காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவைகளை தேரின் மீது வீசி நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வந்திருந்த திருநங்கைகள் அம்மன் வேடம் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தேர் மாலை 6.30 மணிக்கு நிலையை வந்தடைந்தது. அதன்பிறகு நடைபெற்ற தீபாராதனை நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

  தேரில் எழுந்தருள்வதற்காக அங்காளம்மன் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டபோது எடுத்த படம்.

  தேரோட்டத்தின் போது பக்தர்கள் பலர் கரகம் எடுத்தும், தீச்சட்டி ஏந்தியும், அலகு குத்தியும் ஊர்வலமாக வந்தனர். அம்மன் வேடமணிந்து வந்தவர்கள் பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்கள். மேலும் மேல்மலையனூர் வள்ளலார் திருச்சபை சார்பில் நீர்மோர், கஞ்சி, கூழ் ஆகியன பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

  விழாவையொட்டி பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், வேலூர், திருவண்ணாமலை, சேலம், கடலூர், விழுப்புரம், திண்டிவனம் என்று பல்வேறு பகுதிகளில் இருந்தும், புதுச்சேரி, பெங்களூருவில் இருந்தும் மேல்மலையனூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் செந்தில்வேலவன், மாவட்ட தலைமை நீதிபதி சரோஜினிதேவி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முபாரக் அலிபேக், வெங்கடேசன், தாசில்தார் செந்தில்குமார், இந்தியன் வங்கி கிளை மேலாளர் பிரகாஷ் உள்பட லட்சக்கணக் கான பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டனர். சுகா தாரத்துறையினர் கோவில் வளாகம் மற்றும் தெருக்களில் கிடந்த குப்பை களை உடனுக் குடன் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

  விழாவில் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக் கும் வகையில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக் குமார் தலைமையில் 600-க்கும் மேற்பட்ட போலீசார் பாது காப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து போலீ சார் தீவிரமாக கண்காணித் தனர். தீயணைப்பு வீரர்களும் தயார் நிலையில் இருந்தனர்.

  விழாவுக்கான ஏற்பாடுகளை உதவி ஆணையர்கள் மேல் மலையனூர் பிரகாஷ், விழுப் புரம் ஜோதி, திருவண்ணாமலை மோகன சுந்தரம், கண் காணிப்பாளர் வேலு, ஆய் வாளர் அன்பழகன் மற்றும் அறங்காவலர்கள் குழுவினர், கோவில் பணியாளர்கள் செய்திருந் தனர். முன்னதாக தேரோட்டத் தை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்துக்கு நேற்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும். விழாவின் 8-ம் நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) காலை யில் யானை வாகனத்திலும், இரவு குதிரை வாகனத்திலும் அம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
  விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசிப்பெருவிழா 13 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான மாசிப்பெருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

  6-ந் தேதி மயானக்கொள்ளை திருவிழா நடைபெற்றது. இதையடுத்து 7-ந் தேதி தங்க பல்லக்கிலும், அன்று இரவு பெண் பூத வாகனத்திலும் அம்மன் வீதிஉலா நிகழ்ச்சி நடந்தது.

  விழாவின் 5-ம் நாளான நேற்று தீமிதி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி காலையில் கருவறையில் உள்ள அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகை பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் மேள, தாளம் முழங்க உற்சவ அம்மனை அக்னி குளத்திற்கு ஊர்வலமாக பல்லக்கில் தூக்கி சென்றனர். அங்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அம்மனை சிம்ம வாகனத்தில் அமர்த்தினர்.

  அதனை தொடர்ந்து அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்ட அம்மன் மாலை 4.30 மணி அளவில் கோவிலுக்கு எதிரே அக்னி குண்டத்தின் முன்பாக எழுந்தருளினார். பின்னர் சாமிக்கும் பூக்குழிக்கும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதன் பிறகு பூ உருண்டையை உருட்டி விட்டதும் தலைமை பூசாரி முதலில் அக்னி குண்டத்தில் இறங்கினார். அவர் இறங்கியதும் கோவில் மேலாளர் முனியப்பனை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பூக்குழியில் இறங்கி தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

  மேலும் பல பக்தர்கள் தங்களது உடலில் அலகு குத்தி லாரி, வேன் உள்ளிட்ட வாகனங்களை இழுத்தும், பறவை காவடி எடுத்தும் தரிசனம் செய்தனர். தொடர்ந்து அன்ன வாகனத்தில் சாமி வீதிஉலா நடைபெற்றது.

  இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர்கள் மேல்மலையனூர் பிரகாஷ், விழுப்புரம் ஜோதி, திருவண்ணாமலை மோகனசுந்தரம், அறங்காவலர்கள் கணேசன், ஏழுமலை, ரமேஷ், செல்வம், சரவணன், மணி, சேகர், கண்காணிப்பாளர் வேலு, ஆய்வாளர் அன்பழகன் மற்றும் கோவில் பணியாளர்கள், ஏழு வம்சாவழி பூசாரிகள், கொடுக்கன்குப்பம் கிராம மக்கள் ஆகியோர் செய்திருந்தனர். விழாவையொட்டி மேல்மலையனூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சாமளவண்ணன் தலைமையிலான வீரர்கள் தீயணைப்பு வாகனத்துடன் தயார் நிலையில் இருந்தனர். விழாவின் முக்கிய நிகழ்வாக நாளை (திங்கட்கிழமை) தேரோட்டம் நடைபெற உள்ளது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மேல்மலையனூர் அருகே 3-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  மேல்மலையனூர்:

  விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே உள்ள மேல்பட்டு கிராமத்தை சேர்ந்த 8 வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 3-ம்வகுப்பு படித்து வருகிறாள்.

  அதே பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் டியூசன் சென்டர் நடத்தி வந்தனர். அந்த டியூசன் சென்டரில் 3-ம் வகுப்பு மாணவி டியூசன் படித்து வந்தாள். சம்பவத்தன்று அந்த மாணவி டியூசன் சென்றாள். டியூசன் முடிந்து அவள் வீட்டுக்கு வந்தாள்.

  வீட்டில் பெற்றோர் யாரும் இல்லை. இதை அறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் நைசாக வீட்டுக்குள் புகுந்தார். பின்னர் அவர் கதவை பூட்டிக்கொண்டு அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தார்.

  பின்னர் இதை வெளியில் சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டி விட்டு சென்றுவிட்டார். அந்த சிறுமி வீட்டுக்கு வந்த தனது பெற்றோரிடம் அழுதுகொண்டு நடந்த விவரத்தை கூறினாள். இதை கேட்டதும் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

  பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட அந்த மாணவி திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளாள்.

  இந்த சம்பவம் தொடர்பாக அவலூர்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விழுப்புரம் மாவடடம் மேல்மலையனூரில் அமைந்துள்ள அங்காளம்மன் கோவிலில் கார்த்திகை மாத அமாவாசை விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
  விழுப்புரம் மாவடடம் மேல்மலையனூரில் அமைந்துள்ள அங்காளம்மன் கோவிலில் மாதந்தோறும் அமாவாசை விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி கார்த்திகை மாத அமாவாசை விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அதிகாலை கோவில் நடைதிறக்கப்பட்டு கருவறையில் உள்ள அம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், குங்குமம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தங்க கவச அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.

  உற்சவ அம்மனுக்கு அன்னபூரணி அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் வைக்கப்பட்டிருந்தது. இரவு 11.30 மணியளவில் அங்கிருந்த அம்மனை பம்பை, மேளதாளம் முழங்க வடக்கு வாயில் வழியாக கொண்டு சென்று ஊஞ்சல் மண்டபத்தில் ஊஞ்சலில் அமர்த்தினர். பின்பு பூசாரிகள் அம்மன் பக்திப் பாடல்கள் பாடியவுடன் ஊஞ்சலில் அமர்ந்திருந்த அம்மன் முன்னும் பின்னும் அசைந்தாடி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இரவு 12.30 மணிக்கு அம்மனுக்கு அர்ச்சனை செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.  நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

  விழாவை முன்னிட்டு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், சேலம், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரியில் இருந்தும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

  விழாவுக்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை உதவி ஆணையர் பிரகாஷ், அறங்காவலர் குழு தலைவர் கணேசன் பூசாரி, அறங்காவலர்கள் ஏழுமலை, ரமேஷ், செல்வம், சரவணன், மணி, சேகர், ஆய்வாளர் அன்பழகன், கண்காணிப்பாளர் வேலு மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மேல்மலையனூரில் அமாவாசை விழாவையொட்டி அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
  விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்திபெற்ற அங்காளம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் மாதந்தோறும் அமாவாசை விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி ஐப்பசி மாதத்திற்கான அமாவாசை விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு கருவறையில் உள்ள அம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், குங்குமம், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் தங்க கவச அலங்காரத்தில் அம்மன், பக்தர்களுக்கு காட்சி அளித்தார். உற்சவ அம்மனுக்கு லிங்க பூஜை செய்வது போன்று அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் வைக்கப்பட்டிருந்தது.

  இரவு 11.30 மணிக்கு அங்கிருந்த அம்மன் பம்பை, மேளதாளம் முழங்க வடக்கு வாயில் வழியாக கொண்டு செல்லப்பட்டு ஊஞ்சல் மண்டபத்தில் ஊஞ்சலில் அமர்த்தினர். பின்னர் பூசாரிகள் பக்தி பாடல்கள் பாடினர். முக்கிய பிரமுகர்கள் மட்டும், அம்மனை தாலாட்டினர். முன்னும், பின்னும் அசைந்தாடியபடி அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

  அப்போது அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீபம் ஏற்றியும், கற்பூரம் ஏற்றியும் அம்மனை வழிபட்டனர். இரவு 12.15 மணிக்கு அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அத்துடன் ஊஞ்சல் உற்சவம் முடிவடைந்தது.

  விழாவையொட்டி சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், சேலம், விழுப்புரம், புதுச்சேரி உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

  விழாவிற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை உதவி ஆணையர்கள் மேல்மலையனூர் பிரகாஷ், விழுப்புரம் ஜோதி, திருவண்ணாமலை மோகனசுந்தரம், அறங்காவலர் குழு தலைவர் கணேசன் பூசாரி, அறங்காவலர்கள் ஏழுமலை, ரமேஷ், செல்வம், சரவணன், மணி, சேகர், கண்காணிப்பாளர் வேலு, ஆய்வாளர் அன்பழகன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உலகில் உள்ள அங்காளபரமேஸ்வரி ஆலயங்களுக்கெல்லாம் மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் தான் தலைமையிடம் என்கிறது தலபுராணம்.


  அங்காள பரமேஸ்வரி அம்மன் சென்னையில் இருந்து திருவண்ணாமலை செல்லும் வழியில் செஞ்சியிலிருந்து வடப்புறம் 20 கிலோ மீட்டர் தொலைவில் மேல்மலையனூரில் கோவில் கொண்டு பக்தர்களுக்கு அருள் வழங்கி வருகிறாள். அவள் இந்த தலத்துக்கு வந்தது எப்படி தெரியுமா?  சிவனை பார்க்க கைலாசமலைக்கு பிரம்மன் வந்தார். தூரத்தில் பிரம்மனை பார்த்த சக்திதேவி, பிரம்மனின் ஐந்து தலையை பார்த்து சிவன் என்று நினைத்து வணங்கி கொண்டே வந்தார்.

  முகத்தை அருகில் பார்த்த பிறகுதான் தெரிந்தது பிரம்மன் என்று. “ஐந்து தலையை பார்த்த உடன் சிவன் என்று நினைத்துவிட்டீர்களா?. எனக்கும் ஐந்து தலை சிவனுக்கும் ஐந்து தலை.” என நகைத்தார் பிரம்மா. அம்பிகைக்கு கோபம் வந்தது. சிவபெருமானிடம் முறையிட்டாள் அன்னை. “ஓ ஐந்து தலை இருப்பதால்தான் அவருக்கு ஆணவமா?” என்ற பரமன் பிரம்மனின் ஒரு தலையை வெட்டி வீசினார்.

  தன் தலைவனின் ஒரு தலை பறிபோக காரணம் அம்பிகைதான் என்று கருதிய கலையரசியான சரஸ்வதி, பராசக்தி மேல் கோபம் கொண்டு, “சக்தி நீ அரண்மனையில் வாழ்ந்தாய். இனி நீ இடம் இல்லாமல் அலைந்து புற்றையே வீடாக கொண்டு வாழ்வாய்.” என்று சபித்தாள்.

  சரஸ்வதியின் சாபத்தால் பர்வத இராஜ புத்திரியாக திகழ்ந்த அன்னை பார்வதிதேவி பூலோகத்தில் தோன்றி, இருக்க இடம் இல்லாமல் எங்கு தங்குவது என்று தெரியாமல் அவதிப்பட்டாள். இப்படியே பல இடங்களுக்கு சென்று களைப்படைந்து நிற்கும் போது ஒர் இடத்தில் நறுமணம் வீசியது. அந்த திசையை நோக்கி நடந்தாள்.அந்த இடம் அழகான நந்தவனமாக இருந்தது. அவ்விடத்திலேயே அமர்ந்து தவம் செய்ய தொடங்கினாள்.

  இந்த காட்சியை கண்ட அங்கு காவலுக்கு இருந்த மீனவ இனத்தை சார்ந்தவன், “ ஏய் பெண்ணே இது இந்த நாட்டின் மலையரசனுக்கு உரிமையான இடம். இங்கு நீ தவம் செய்வது உனக்கு நல்லதல்ல. எங்கள் அரசர் தெய்வ நம்பிக்கை அற்றவர். நீ தவம் செய்யும் தகவல் அரசருக்கு தெரிந்தால் உன் உயிருக்கு? ஆபத்து நேரலாம். ஆகவே இங்கிருந்து போய் விடு.” என்று எச்சரித்தான்.

  “மகனே இந்த பூமியே என் சொந்த இடம் தானப்பா. இவ்விடத்தை உன் மலையரசனுடையது என்று நீ கூறுவது நகைப்புக்குரியதடா. நான் இங்குதான் தவம் செய்வேன்.” என்று சொன்னாள் பராசக்தி. அதற்கு அந்த காவலன், “ஏதோ உனக்கு நேரம் சரியில்லை என்று நினைக்கிறேன். அதான் பாவம் இங்கு வந்து மாட்டிக் கொண்டாய்.” என்றான். உடனே அன்னை புன்னகைத்தப்படி தன் உடலை புற்று மண்ணால் மூடினாள்.

  அந்த காட்சியை பார்த்தவன் பிரமித்து போனான். இந்த பெண், அன்னை பராசக்தி என்பதை உணர்ந்தான். அம்பிகை மீது பக்தி உண்டானது. மக்களிடம் சொன்னான். நந்தவனத்தில் திடீர் புற்று உருவானதை அறிந்த மக்கள் அதிசயித்தனர். புற்றை பலர் வந்து பார்த்தார்கள். இந்த தகவல் அரசருக்கு தெரிந்து, “எனக்கு சொந்தமான தோட்டத்தில் புற்று இருக்கிறதா? இதை உடனே இடித்து தள்ளுங்கள்.” என்று உத்தரவிட்டான்.

  புற்றை இடிப்பது பெறும் பாவம், அதை செய்யாதீர்கள் என்று எத்தனையோ பேர் கூறியும் கேட்கவில்லை அரசர்.  இறைவன் மேல் நம்பிக்கை இல்லாமல் தன் பூந்தோட்டத்தில் இருந்த புற்றை உடைக்க உத்தரவிட்டான். பணியாளர்கள் புற்றை உடைத்தார்கள். அப்போது அருகில் இருந்த மீனவ இனத்தை சார்ந்த அந்த காவலன், அந்த புற்று மண்ணை ஒரு கைப்பிடி எடுத்து வைத்து கொண்டான்.

  புற்றை உடைத்து விட்டு அந்த இடத்தை சுத்தம் செய்து சென்று விட்டார்கள் அரசரின் பணியாளர்கள். அவர்கள் போன பிறகு தன் கையில் இருந்த புற்று மண்ணை அந்த இடத்தில் மறுபடியும் வைத்து பூஜை செய்தான் மீனவன். புற்று மறுபடியும் வேகமாக உருவானது. இந்த செய்தியை கேள்விப்பட்ட அரசன், மறுபடியும் பணியாளர்களை அனுப்பினான். புற்றை உடைக்க புற்றின் அருகில் சென்றவுடன் அன்னைக்கு காவலாக வந்து நின்ற சிவபூதங்கள் அந்த பணியாளர்களை கொன்றார்கள். இதுகெல்லாம் காரணம் அந்த மீனவன் தானே என்று கோபம் கொண்ட அரசன், அந்த மீனவனை கொன்று விடுங்கள் என்று கையை நீட்டி காவலர்களுக்கு உத்தரவிட்டான்.

  உத்தரவிட்ட அந்த நொடி, அரசனின் கை உணர்ச்சி இன்றி அப்படியே தளர்ந்தது. கை வேலை செய்யவில்லை. இது தெய்வ மகிமைதான் என்று புரிந்துக் கொண்டான். தன் தவறுக்கு மனப்பூர்வமாக அன்னை ஆதிபராசக்தியிடம் மன்னிப்பு கேட்டான். தான் இங்கே இருப்பதை உலகிற்கு தெரியப்படுத்த மீனவனையும் அரசனையும் கருவியாக பயன்படுத்தினாள் அன்னை அங்காளபரமேஸ்வரி. அம்மன் அரசனை மன்னித்தாள். தன் தவறுக்கு பரிகாரமாக அந்த பூந்தோட்டத்தை அம்மனுக்கே காணிக்கையாக வழங்கினான் மன்னன்.

  சாபத்தின் பலனாகத்தான் மேல்மலையனூரில் அகோர உருவத்தில் அங்காளபரமேஸ்வரி என்ற நாமத்தடன் அமர்ந்தாள். சிலகாலம் கழித்து திருவண்ணாமலைக்கு சென்று அங்கு பிரம்மதீர்த்தத்தில் நீராடி சாபம் நீங்கி ஒரு மூதாட்டியின் வடிவம் பெற்று மீண்டும் மலையனூர் வந்து தங்கினார். அதன்பிறகு மலையனூரில் உள்ள மீனவர்கள் அங்காளம்மனுக்கு கோயில் கட்டினார்கள்.

  அம்மனுக்கு உதவியாக இருந்த மீனவ சமுதாயம்தான் இன்றுவரை அந்த கோயிலில் சேவை செய்கிறார்கள். உலகில் உள்ள அங்காளபரமேஸ்வரி ஆலயங்களுக்கெல்லாம் மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் தான் தலைமையிடம் என்கிறது தலபுராணம். இந்த ஆலயத்திற்கு சென்று வணங்கினால் செய்வினை பாதிப்பு, விரோதிகளால் உண்டான பிரச்சனைகள் விலகும்.

  இந்த அம்மனின் புற்று மண்ணை 48 நாள் நெற்றியில் இட்டு வந்தால் சகல நன்மைகளும் உண்டாகும். அன்னை அங்காள பரமேஸ்வரி துணை நிற்பாள்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கீழே உள்ளது அங்காளம்மனின் காயத்ரி மந்திரமாகும். மேல்மலையனூர் அங்காளம்மன் ஆலயத்தை சுற்றி வரும்போது இந்த காயத்ரி மந்திரத்தை ஜெபித்தப்படி வலம் வருவதல் வேண்டும்.
  ஓம் காளிகாயை வித்மஹே
  மாதாஸ்வ ரூபாயை தீமஹி,
  தன்னோ அங்காளி ப்ரசோதயாத்

  என்பது அங்காளம்மனின் காயத்ரி மந்திரமாகும். மேல்மலையனூர் அங்காளம்மன் ஆலயத்தை சுற்றி வரும்போது இந்த காயத்ரி மந்திர த்தை ஜெபித்தப்படி வலம் வருவதல் வேண்டும்.

  இப்படி வழிபாடு செய்பவர்களுக்கு அங்காளம்மன் இரட்டிப்பு பலன்களை வாரி, வாரி வழங்குவாள் என்பது ஐதீகமாகும்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மேல்மலையனூர் தலத்தில் மூன்று வகை பிரசாதங்களை பக்தர்கள் பெற முடியும். அதன் பின்னணியில் வரலாறு உள்ளது. அது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
  மேல்மலையனூர் தலத்தில் மூன்று வகை பிரசாதங்களை பக்தர்கள் பெற முடியும். அதன் பின்னணியில் வரலாறு உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

  தட்சனின் யாகத்தை அழிக்க புறப்பட்ட தாட்சாயினி, அகோரமாக பெரிய உருவம் எடுத்து தீயில் விழுந்து யாகத்தை அழித்தாள். அவளது உருவமற்ற அவதாரமே அங்காளி என்று அழைக்கப்படுகிறது. அதுதான் மருவி அங்காள பரமேஸ்வரி என்றானது.

  அங்காளம்மன் யாகக் குண்டத்தில் விழுந்து சாம்பலான இடமாக இத்தலம் கருதப்படுகிறது. இதை பிரதிபலிக்கும் வகையில் இங்கு பக்தர்களுக்கு சாம்பலை பிரசாதமாக கொடுக்கிறார்கள்.

  தாட்சாயினி தன்னை அழித்துக் கொண்ட தகவல் அறிந்ததும் சிவன், அவளை தூக்கி ஆவேசமாக ஆடினார். அப்போது தாட்சாயினியின் கை துண்டாகி இத்தலத்தில் விழுந்தது. எனவே இத்தலம் தண்ட காருண்யம் என்ற சக்தி பீடமாக மாறியது. இதை பிரதிபலிக்கும் வகையில் இத்தலத்தில் குங்குமம் பிரசாதம் கொடுக்கிறார்கள்.

  அன்னை பராசக்தி சிவ சுயம்புவாக புற்று வடிவில் அங்காள பரமேஸ்வரியாக மேல் மலையனூரில் அவதாரம் எடுத்தார். இதனால் அந்த புற்று மகத்துவம் மிகுந்ததாக மாறியது. அந்த புற்று மண்ணை பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கிறார்கள். நோய் தீர்க்கும் அற்புதங்களை செய்வதால் மேல்மலையனூர் தலத்துக்கு வரும் பக்தர்கள் மற்ற பிரசாதங்களை விட புற்றுமண் பிரசாதத்தை மிகவும் விரும்பி வேண்டி கேட்டு, வாங்கிச் செல்வதை காணலாம்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அமாவாசை அன்று அங்காளம்மனிடம், மக்கள் விரதம் இருந்து தங்களின் குறைகளை வேண்டிக் கொண்டால் அதன்படி, வேண்டியது வேண்டியபடி அவர்களின் வேண்டுகோள்படி நிறைவுபெறுகிறது.
  ஆற்றல் மிக்க அண்ட சக்திகள் மூன்று. அவை சூரியன், சந்திரன், பூமி ஆகும். மனித இயக்க ஆற்றல் சக்தியாக தெய்வ தேவதையாக ஏற்றுக் கொள்ளும்போது உருவக உருவங்களை உள்ளடக்கிய ஆண் பெண் என்ற இயக்க சக்தியே பிண்ட சக்தியாகும்.

  அண்ட சக்திகள் ஒன்று இணையும் நேரம் அமாவாசை. பிண்ட சக்திகளாக மனிதனை தோற்றுவித்த ஆவி ஆன்மாவான மூதாதையர்களுக்கு வணக்கத்திற்குரியதாக ஏற்றுக் கொள்ளும் நாள் அமாவாசை.

  இந்த நாட்களில் தான் அங்காளி என்ற சிற்சக்தி மயானங்கள் தோறும் ஆவி, ஆன்மா என்ற பிண்ட சக்திகளுக்கு மயானங்களில் சூரையிடும் நாள் அமாவாசை இரவு பன்னிரண்டு மணி நேரம்.

  இந்த நேரங்களில் அங்காளம்மன் திருக்கோயிலில் அமர்த்தப்பட்டு ஊஞ்சலில் வைக்கப்பட்டு அருளாசி வழங்கிடும் அருள்மிகு அங்காளம்மனிடம், மக்கள் விரதம் இருந்து தங்களின் குறைகளை வேண்டிக் கொண்டால் அதன்படி, வேண்டியது வேண்டியபடி அவர்களின் வேண்டுகோள்படி நிறைவுபெறுகிறது.

  ஆற்றல்மிகு இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானசக்தி என்ற ஆற்றல்களான விழைவாற்றல், செயல் ஆற்றல், அறிவு ஆற்றல், இவைகளின் உருவ சக்திகளான, லட்சுமி, சரஸ்வதி, பார்வதி இவர்களின் இயக்கமாக கல்வி, செல்வம், வீரம் என்று சொல்லும் மூன்று ஆற்றல்களும் மூன்று அமாவாசை தோறும் தொடர்ந்து வந்தால் அவர்களுக்கு நிறைவாக நிறையும் என்பதாக கருதியே தொடர்ந்து அமாவாசை தோறும் விரதம் இருந்து அங்காளம்மன் திருக்கோயிலுக்கு பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

  கந்தாயப்பலன் என்பது, தொடர்ந்து வரும் மூன்று அமாவாசையைக் குறிப்பது. சித்த பிரமை பிடித்த சிவபெருமானுக்கு பிரம்மஹத்தி நீங்கியது 4வது கந்தாயத்தின் கடைசி அமாவாசையான மாசி மாதத்தில் என்பதும், மும்மூர்த்திகளில் முதல் மூர்த்திக்கே பிரமஹத்தி பிடித்ததைப்போன்று மானிடர்களாகிய மனிதர்களை ஏன் பிரமஹத்தி பிடித்திருக்காது? என்பதாக கருதியே ஆன்ம பிணிகளாக பிணிகள், பீடைகள், சகடைகள், தோசங்கள், பில்லி வைப்பு, சூன்யம், காட்டேரி சேட்டைகள், வறுமை, துன்பம், துயரம் பிரம்மஹத்தி என்ற ஆன்ம பிணிநோய்கள் விலக தொடர்ந்து மூன்று அமாவாசை தோறும் வருகை தந்தால் பிரமஹத்தி என்பது விலகும் என்பது உண்மை.

  கந்தாயங்கள் மொத்தம் நான்கு. இதையே ஒரு எலுமிச்சை பழமாக கருதி நான்கு பிளப்பாக செய்து அதில் கற்பூரம் ஏற்றி, ஆன்ம பிணிகள் பீடிக்கும் மெய், வாய், கண், மூக்கு, செவி அடங்கிய தலையை சுற்றி கைகால் முதல் தலையில் இருந்து பாதம் வரை ஏற்றி இறக்கி, ஆண்கள் வலது பக்கமும், பெண்கள் இடது பக்கமும் உடைத்து அவர்களுக்கு ஏற்பட்டுள்ள திருட்டியை கழித்து செல்வது வாடிக்கை வழக்கம்.

  இதுதொன்று தொட்டு வந்துள்ள பழமை பிரார்த்தனையாகும். அங்காளம்மன் என்ற இந்த தொண்மை தெய்வத்துக்கும் இதே போன்றே இன்றும் செய்வது மரபு. ஆதியில் அமாவாசை கருவா என்றும், பவுர்ணமியை விளக்கண்ணி என்றும் பழமை திருவிழாவாக கொண்டாடி உள்ளனர். அவ்வாறே பழமை திரு விழா வாக அங்காளம்மன் ஊஞ்சல் திரு விழா ஒவ்வொரு மாதமும் அமாவாசை தோறும் கொண்டாடுகின்றனர்.

  அமாவாசை தோறும் இந்த திருக்கோயிலுக்கு வந்தால், அவர்களை பிடித்துள்ள பிணிகள், பீடைகள், சகடைகள், தோசங்கள், பில்லி வைப்பு, சூன்யம் போன்ற ஆன்ம நோய்கள் குணமாவதால் அமாவாசை தோறும் அன்பர்கள் இந்த திருக்கோயிலுக்கு வருகின்றனர் என்பது உண்மை.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print