search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "4th offense"

    • மேலும் அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன.
    • மேலும் 2 முறை திருட்டு முயற்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.

    கடலூர்:

    கடலூர் அருகே எஸ்.குமராபுரத்தில் பிரசித்தி பெற்ற 41 அடி காரிய சித்தி ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. நேற்று வழக்கம்போல் இரவு பூஜை முடித்துவிட்டு கோவிலை பூட்டிவிட்டு சென்றனர். இன்று காலை கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இதில் கோவில் வளாகத்தில் இருந்த சாமி அறை மற்றும் மற்றொரு அறை பூட்டு உடைக்கப்பட்டு அறை கதவு திறந்திருந்தது. மேலும் அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன. இதனைத் தொடர்ந்து நெல்லிக்குப்பம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சந்திரவேல் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதில் ஒரு கிலோ வெள்ளி பூஜை பொருட்கள் மற்றும் சாமி நெற்றியில் இருந்த 1 1/2 பவுன் தங்க நகை மற்றும் 15 ஆயிரம் ரொக்க பணம் திருடி சென்றது தெரிய வந்தது. இதன் மதிப்பு சுமார் 1 1/2 லட்சமாகும்.

    ஆனால் சாமி சிலைகளை மர்ம நபர்கள் திருடி செல்லாமல் சென்றனர். மேலும் தடவியல் நிபுணர் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்து சென்றனர். மேலும் போலீஸ் மோப்பநாய் கோவிலுக்கு வரவழைத்து மோப்பம் பிடித்து அந்த பகுதியில் உள்ள சுடுகாடு வரை சென்று நின்றது. இந்த நிலையில் கோவிலில் கடந்த 3 முறை மர்ம நபர்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதில், ஒரு முறை ஆஞ்சநேயரிடம் இருந்த வெள்ளி பூணூலை திருடி சென்றனர். மேலும் 2 முறை திருட்டு முயற்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.  தற்போது நேற்று நள்ளிரவு 4-வது முறையாக மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்டதில் கோவிலில் இருந்த வெள்ளி பொருட்கள், தங்க நகைகள் மற்றும் பணம் ஆகியவற்றை திருடி சென்றது பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இக்கோவில் சாலை ஓரத்தில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள நிலையில் திருடு சம்பவம் நடந்தது அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    ×