என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஜாஜ் பல்சர்"

    • புதிதாக வரவிருக்கும் 125cc மோட்டார்சைக்கிள் எக்ஸிகியூட்டிவ் பிரிவில் இருப்பதாக கூறப்படுகிறது.
    • அனைத்து பிரிவுகளிலும், 125cc மோட்டார்சைக்கிள் பிரிவு நல்ல வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

    இந்த ஆண்டு இந்தியாவில் ஒரு புதிய 125சிசி பைக்கை அறிமுகம் செய்ய பஜாஜ் நிறுவனம் திட்டமிட்டு வருவதாக கூறப்பட்டது. எனினும், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் பஜாஜ் நிறுவனம் தனது புதிய மோட்டார்சைக்கிளை 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகம் செய்யலாம் என்று கூறப்படுகிறது.

    புதிதாக வரவிருக்கும் 125cc மோட்டார்சைக்கிள் எக்ஸிகியூட்டிவ் பிரிவில் இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது இது ஒரு ஆக்ரோஷமான விலைக் குறியீட்டைக் கொண்டிருக்கும். இருப்பினும், இந்த மோட்டார்சைக்கிளின் தயாரிப்பு நிலை குறித்து இன்னும் எந்த தகவலும் இல்லை. இந்த பைக் பல்சர் பிராண்டின் கீழ் அறிமுகம் செய்யப்படும்.

    தற்போதைய நிலவரப்படி, பல்சர் 125க்கும் பல்சர் NS125க்கும் இடையே ஒரு நல்ல விலை இடைவெளி உள்ளது. எனவே பஜாஜ் இந்த புதிய 125cc மோட்டார்சைக்கிள் மூலம் அந்த இடைவெளியை சரிசெய்ய விரும்புகிறது.

    அனைத்து பிரிவுகளிலும், 125cc மோட்டார்சைக்கிள் பிரிவு நல்ல வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதன் விளைவாக, பல வாகன உற்பத்தியாளர்கள் புதிய பைக்குகளை அறிமுகம் செய்து வருகின்றன. சமீபத்தில், ஹோண்டா CB 125 ஹார்னெட் மாடலை அறிமுகப்படுத்தியது. ஹீரோ நிறுவனம் கிளாமர் X 125 மாடலை அறிமுகப்படுத்தியது. இரண்டும் 125cc பிரீமியம் பிரிவில் மோதுகின்றன.

    • 2025 பஜாஜ் பல்சர் NS 400Z இப்போது தடையற்ற பரிமாற்றத்திற்காக விரைவாக மாறியுள்ளது.
    • பஜாஜ் நிறுவனம் 2025 பல்சர் NS 400Z மாடலில் இயந்திர மற்றும் மறுசீரமைப்புகளை சேர்த்துள்ளது.

    பஜாஜ் ஆட்டோ இந்தியா நிறுவனம் 2025 பஜாஜ் பல்சர் NS 400 Z பைக்கை ரூ.1.92 லட்சம் விலையில் (எக்ஸ்-ஷோரூம்) அறிமுகம் செய்துள்ளது. இது முந்தைய வேரியண்ட்களில் இருந்து பெரும்பாலான வடிவமைப்பு மற்றும் பிற அம்சங்களை கொண்டுள்ளது. இருப்பினும், புது அப்டேட்களுடன், பஜாஜ் நிறுவனம் 2025 பல்சர் NS 400Z மாடலில் இயந்திர மற்றும் மறுசீரமைப்புகளை சேர்த்துள்ளது.

    எஞ்சின் மற்றும் பவர்டிரெய்ன்:

    2025 பஜாஜ் பல்சர் NS 400Z மாடல் அதன் முந்தைய மாடலைப் போலவே அதே எஞ்சினைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. இது 373 சிசி ஒற்றை சிலிண்டர் லிக்விட்-கூல்டு எஞ்சினால் இயக்கப்படுகிறது. இருப்பினும், இந்த மாடல் சில இயந்திர மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. இது 40 hp பவரில் இருந்து 43 hp ஆக மின் உற்பத்தியை அதிகரிக்கிறது.



    அம்சங்கள்:

    2025 பஜாஜ் பல்சர் NS 400Z இப்போது தடையற்ற பரிமாற்றத்திற்காக விரைவாக மாறியுள்ளது. இதில் ரெட்ரோ-ஃபிட் செய்யப்பட்ட அகலமான 150-பிரிவு டயர் பொருத்தப்பட்டுள்ளது. இருப்பினும், பழைய பதிப்பைப் போலவே வாடிக்கையாளர்கள் 140-பிரிவு டயரையும் தேர்வு செய்யலாம். பஜாஜ் 2025 பல்சர் NS 400Z ஐ சின்டர்டு பிரேக் பேட்களுடன் (ரெட்ரோ-ஃபிட்) அறிமுகப்படுத்தியுள்ளது.

    விலை விவரங்கள்:

    2025 பஜாஜ் பல்சர் NS 400Z பைக் ரூ.1,92,328 (எக்ஸ்-ஷோரூம்) விலையில் கிடைக்கிறது. இது இந்திய சந்தையில் KTM 390 டியூக், TVS அபாச்சி RTR 310 மற்றும் டிரையம்ப் ஸ்பீட் 400 போன்ற பைக்குகளுக்கு போட்டியாக உள்ளது.

    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த பல்சர் 250 சீரிஸ் மாடல்கள் வினியோகம் துவங்கி நடைபெற்று வருகிறது.


    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது புதிய பல்சர் 250 சீரிஸ் மாடல்களின் வினியோகத்தை இந்தியாவில் துவங்கி இருக்கிறது. புதிய பல்சர் 250 முதல் யூனிட் நவம்பர் 15 ஆம் தேதி வினியோகம் செய்யப்பட்டது. புதிய பல்சர் என்250 மற்றும் எப்250 மாடல்கள் கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன. இவற்றின் விலை முறையே ரூ. 1.38 லட்சம் மற்றும் ரூ. 1.40 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. 

    புதிய பல்சர் மாடல்களில் ஒரே மாதிரியான அம்சங்களே வழங்கப்பட்டு இருக்கின்றன. இவற்றில் 249.07சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர்/ஆயில் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 24 பி.ஹெச்.பி. திறன், 21.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

     பஜாஜ் பல்சர் 250

    இந்திய சந்தையில் பஜாஜ் பல்சர் என்250 சுசுகி ஜிக்சர் 250 மற்றும் யமஹா எப்.இசட்.250 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. புதிய பஜாஜ் பல்சர் எப்250 மாடல் சுசுகி ஜிக்சர் 250 எஸ்.எப். மற்றும் யமஹா பேசர் 250 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
    பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பல்சர் 125 மோட்டார்சைக்கிள் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து இதன் இந்திய அறிமுகம் சார்ந்த விவரங்கள் வெளியாகியுள்ளது. #pulsar #motorcycle



    இந்தியாவில் மோட்டார் சைக்கிள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள பஜாஜ் நிறுவனத் தயாரிப்புகளில் மிகவும் பிரபலமானது பல்சர். இளைஞர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற சீறும் பைக் என்றும் இதை கூற முடியும். பல்சர் சீரிசில் பல மாடல்கள், மேம்படுத்தப்பட்ட ரகங்கள் வந்து கொண்டே இருக்கின்றன.

    சமீபத்தில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் பல்சர் என்.எஸ். 125 மாடலை போலந்தில் அறிமுகம் செய்தது. இந்த மாடல் 2019ம் ஆண்டின் துவக்கத்தில் இந்திய சந்தையிலும் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    புதிய பல்சர் மாடலில் ஃபியூயல் இன்ஜக்‌ஷன் தொழில்நுட்பம் பின்பற்றப்பட்டுள்ளது. இதில் இரட்டை இருக்கைகள் உள்ளன. இதில் சிங்கிள் சிலிண்டர் 4 வால்வு பியூயல் இன்ஜக்‌ஷன், ஏர் கூல்டு, DTSi 124.4 சி.சி. என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 12 பி.ஹெச்.பி. @8,500 ஆர்.பி.எம். மற்றும் 11 நியூட்டன் மீட்டர் (என்.எம்.) டார்க் திறனை 6000 ஆர்.பி. எம்.மில் வெளிப்படுத்தக் கூடியது.



    இதில் வழக்கமான டெலஸ்கோப்பிக் போர்க் உள்ளது. இதன் எடை 126.5 கிலோவாகும். இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் 170 மி.மீ. ஆகும். இதன் சக்கர அளவு 1,325 மி.மீ. ஆக உள்ளதாக போலந்தில் உள்ள பஜாஜ் நிறுவன விற்பனையகம் தெரிவித்துள்ளது.

    இந்தியாவில் இது அறிமுகமாகும்போது இதன் முந்தைய 135 எல்.எஸ். மாடலை விட இது சற்று விலை (ரூ. 62,528) அதிகமாக இருக்கும். போலந்தில் 7,999 போலிஷ் ஸ்லோடிக்கு விற்கப்படுகிறது. இது இந்திய மதிப்பில் ரூ. 1.59 லட்சமாகும். ஆனால் இந்தியாவில் இந்த அளவுக்கு அதிக விலையை பஜாஜ் நிர்ணயிக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இது அறிமுகம் ஆகும்போது ஏற்கனவே விற்பனையில் உள்ள பல்சர் 135 எல்.எஸ். மாடல் விற்பனையை நிறுவனம் நிறுத்திவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் பண்டிகை காலத்தை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. #bajajauto



    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு பண்டிகை கால சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. புதிய சலுகை 5-5-5 என அழைக்கப்படுகிறது. இதில் ஐந்து இலவச சேவைகள், ஐந்து ஆண்டுகளுக்கு இன்சூரன்ஸ் மற்றும் ஐந்து ஆண்டு வாரண்டி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    பஜாஜ் அறிவித்து இருக்கும் 5-5-5 சலுகை பிளாட்டினா, டிஸ்கவர், பல்சர் மற்றும் வி மோட்டார்சைக்கிள் மாடல்களை வாங்குவோருக்கு வழங்கப்படுகிறது. இதுதவிர பல்சர் மோட்டார்சைக்கிளை வாங்கும் வாடிக்கையாளர்கள் ரூ.9,800, வி மாடலை வாங்கும் போது ரூ.5,200, பஜாஜ் டிஸ்கவர் மாடலுக்கு ரூ.4,800 மற்றும் பிளாட்டினா வாங்கும் போது ரூ.4,100 வரை சேமிக்க முடியும்.

    பண்டிகை காலத்தில் வாகனங்களின் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டுகள் இன்சூரன்ஸ் சலுகை மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத், மேற்கு வங்கம் மற்றும் அசாம் உள்ளிட்ட பகுதிகளில் பல்சர் மாடல்களுக்கு வழங்கப்படுகிறது.



    மற்ற மாநிலங்களில் இன்சூரன்ஸ் சலுகை தேர்வு செய்யப்பட்ட பல்சர் மாடல்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. மூன்றாம் தரப்பு இன்சூரன்ஸ் ஐந்து ஆண்டுகளுக்கு கட்டாயம் என்ற விதிமுறை அமலான பின் இருசக்கர வாகனங்களின் விலை அதிகரித்து இருக்கிறது.

    அந்த வகையில் பஜாஜ் நிறுவனம் வாடிக்கையாளர்களை கவர புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. இதுபோன்ற சலுகைகளை கொண்டு விற்பனையை அதிகரிக்க பஜாஜ் திட்டமிட்டுள்ளது.

    இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில் பஜாஜ் ஆட்டோ மேம்படுத்தப்பட்ட மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்யும். மேம்படுத்தப்பட்ட பஜாஜ் டாமினர் 400 பல்வேறு அப்டேட்களை கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. இத்துடன் பல்சர் 220 மற்றும் பல்சர் 150 மாடல்களுக்கு ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ஏ.பி.எஸ்.) வசதியுடன் சோதனை செய்யப்படுகிறது.
    பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பல்சர் ரக மோட்டார்சைக்கிள்கள் விற்பனையில் ஒரு கோடி யூனிட்களை கடந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



    பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் மே மாத விற்பனையில் மட்டும் சுமார் 70,000-க்கும் அதிக யூனிட்களை கடந்திருந்த நிலையில், நாட்டில் பஜாஜ் பல்சர் விற்பனை ஒரு கோடி யூனிட்களை கடந்திருக்கிறது. சர்வதேச சந்தையில் டிசம்பர் 2017 வாக்கில் பல்சர் விற்பனை ஒரு கோடி யூனிட்களை கடந்தது குறிப்பிடத்தக்கது.

    புதிய மைல்கல் விற்பனையை கொண்டாடும் வகையில் பஜாஜ் ஆட்டோ வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறது. இந்த வீடியோவில் 'பல்சர் சிட்டி' என்ற இடத்தில் பல்சர் ரக மோட்டார்சைக்கிள்களில் வீரர்கள் சாகசம் செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. வீடியோவில் பல்சர் RS200, பல்சர் NS200, பல்சர் 180, பல்சர் 150UG5 உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கும் நிலையில் மற்ற மாடல்கள் இடம்பெறவில்லை.

    இந்தியாவின் பிரீமியம் மற்றும் என்ட்ரி-லெவல் ஸ்போர்ட்பைக் மாடலாக பஜாஜ் பல்சர் இருக்கின்றன. மே 2018 காலக்கட்டத்தில் மட்டும் பல்சர் மாடல்களின் விற்பனை 70,000 ஆக அதிகரித்தது. பல்சர் ரக மாடல்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக போதிய வரவேற்பு கிடைக்காத நிலையில் இத்தகைய விற்பனை நடைபெற்று இருக்கிறது. பல்சர் மாடல்களின் விற்பனை அதிகரிக்க முக்கிய காரணமாக பல்சர் 150 கிளாசிக் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது தான் என கூறப்படுகிறது.



    இந்தியாவில் பல்சர் சீரிஸ் மோட்டார்சைக்கிள்களில் மட்டும் எட்டு மாடல்களை பஜாஜ் விற்பனை செய்து வருகிறது. இவற்றில் பல்சர் 135LS, கிளாசிக் 150, ஸ்டான்டர்டு 150, ஸ்டான்டர்டு 180 மற்றும் பல்சர் 200F உள்ளிட்டவை அடங்கும். இத்துடன் லிக்விட்-கூல்டு NS160, ஃபிளாக்ஷிப் NS200 மற்றும் RS200 மாடல்கள் அடங்கும். 

    இவற்றின் விலை ரூ.64,589 (எக்ஸ்-ஷோரூம், மும்பை) பல்சர் 135LS, கிளாசிக் 150 வேரியன்ட் விலை ரூ.67,437 (எக்ஸ்-ஷோரூம், மும்பை), பல்சர் 150 மாடல் ரூ.6000 விலை அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடல் ஸ்டான்டர்டு மற்றும் ட்வின்-டிஸ்க் என இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கிறது.

    பல்சர் NS200 மாடலின் ஏபிஎஸ் இல்லா வேரியன்ட் விலை ரூ.98,000 (எக்ஸ்-ஷோரூம், மும்பை) பல்சர் RS200 விலை ரூ.1.24 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், மும்பை) துவங்குகிறது.
    பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் மே மாத விற்பனையில் பல்சர் மாடல்கள் அதீத வரவேற்பு பெற்றிருக்கிறன. இது குறித்த முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.




    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் மாதாந்திர விற்பனையில் பல்சர் மாடல்கள் சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கின்றன. பஜாஜ் பல்சர் மாடல்கள் இந்தியாவின் பிரீமியம் மற்றும் என்ட்ரி-லெவல் ஸ்போர்ட்பைக் மாடலாக இருக்கிறது. மே 2018 காலக்கட்டத்தில் மட்டும் பல்சர் மாடல்களின் விற்பனை 70,000 ஆக அதிகரித்திருக்கிறது.

    பல்சர் ரக மாடல்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக போதிய வரவேற்பு கிடைக்காத நிலையில் இத்தகைய விற்பனை நடைபெற்று இருக்கிறது. பல்சர் மாடல்களின் விற்பனை அதிகரிக்க முக்கிய காரணமாக பல்சர் 150 கிளாசிக் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது தான் என கூறப்படுகிறது. 

    மார்ச் 2018-இல் பஜாஜ் பல்சர் 150 மாடல் 52,759 யூனிட்கள் விற்பனையாகின. இது மே 2017-ஐ விட 46% அதிகம் ஆகும். இதுதவிர மற்ற மோட்டார்சைக்கிள் மாடல்கள் இருமடங்கு வளர்ச்சியை பதிவு செய்திருக்கின்றன.



    இந்தியாவில் பல்சர் சீரிஸ் மோட்டார்சைக்கிள்களில் மட்டும் எட்டு மாடல்களை பஜாஜ் விற்பனை செய்து வருகிறது. இவற்றில் பல்சர் 135LS, கிளாசிக் 150, ஸ்டான்டர்டு 150, ஸ்டான்டர்டு 180 மற்றும் பல்சர் 200F உள்ளிட்டவை அடங்கும். இத்துடன் லிக்விட்-கூல்டு NS160, ஃபிளாக்ஷிப் NS200 மற்றும் RS200 மாடல்கள் அடங்கும். 

    இவற்றின் விலை ரூ.64,589 (எக்ஸ்-ஷோரூம், மும்பை) பல்சர் 135LS, கிளாசிக் 150 வேரியன்ட் விலை ரூ.67,437 (எக்ஸ்-ஷோரூம், மும்பை), பல்சர் 150 மாடல் ரூ.6000 விலை அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடல் ஸ்டான்டர்டு மற்றும் ட்வின்-டிஸ்க் என இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கிறது.

    பல்சர் NS200 மாடலின் ஏபிஎஸ் இல்லா வேரியன்ட் விலை ரூ.98,000 (எக்ஸ்-ஷோரூம், மும்பை) பல்சர் RS200 விலை ரூ.1.24 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், மும்பை) துவங்குகிறது.
    ×