search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bajaj auto"

    • இந்த மாடலில் 249சிசி, சிங்கில் சிலிண்டர், ஆயில் கூல்டு என்ஜின் உள்ளது.
    • பின்புறம் 140 செக்ஷன் அகலமான டயர் வழங்கப்பட்டு இருக்கிறது.

    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது பல்சர் N250 மோட்டார்சைக்கிளை அப்டேட் செய்துள்ளது. புதிய 2024 பல்சர் N250 மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 51 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய மாடலில் அதன் முந்தைய வெர்ஷனை விட மேம்பட்ட பாகங்கள் மற்றும் கூடுதல் அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

    அதன்படி 2024 பஜாஜ் பல்சர் N250 மாடலின் முன்புறம் 37mm அப்சைடு டவுன் ஃபோர்க்குகள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், ப்ளூடூத் கனெக்டிவிட்டி, மூன்று ஏ.பி.எஸ். மோட்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் பின்புறம் 140 செக்ஷன் அகலமான டயர் வழங்கப்பட்டு இருக்கிறது.


     

    இந்த மோட்டார்சைக்கிளின் மற்ற பாகங்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த மோட்டார்சைக்கிள் ரெட், வைட் மற்றும் பிளாக் என மூன்றுவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் ரெட் மற்றும் வைட் நிற வேரியண்டில் கோல்டு நிற ஃபோர்க்குகளும், பிளாக நிற வேரியண்டில் பிளாக் நிற ஃபோர்க்குகளும் வழங்கப்படுகின்றன.

    புதிய 2024 பஜாஜ் பல்சர் N250 மோட்டார்சைக்கிளில் 249சிசி, சிங்கில் சிலிண்டர், ஆயில் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 24.1 ஹெச்.பி. பவர், 21.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் அசிஸ்ட், ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்படுகிறது.

    • உற்பத்தி நிலையை எட்டியிருப்பதாக கூறப்படுகிறது.
    • உற்பத்தி விலையை கட்டுக்குள் வைக்க முடியும்.

    பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் முற்றிலும் புதிய சி.என்.ஜி. பைக் டெஸ்டிங் செய்யப்படும் போது எடுக்கப்பட்ட புதிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. டெஸ்டிங் புகைப்படங்கள் பலமுறை வெளியாகிவிட்ட நிலையில், இந்த மாடல் அதன் உற்பத்தி நிலையை எட்டியிருப்பதாக கூறப்படுகிறது.

    தற்போதைய ஸ்பை படங்களின் படி பஜாஜ் சி.என்.ஜி. பைக்கில் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப், பல்பு இன்டிகேட்டர்கள் வழங்கப்படுகின்றன. இவ்வாறு செய்யும் போது, பைக்கிற்கு நவீன அம்சம் வழங்குவது மற்றும் உற்பத்தி விலையை கட்டுக்குள் வைக்க முடியும்.

     


    ஹார்டுவேர் அம்சங்களை பொருத்தவரை டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், மோனோஷாக் யூனிட், முன்புறம் ஒற்றை டிஸ்க், பின்புறம் டிரம் பிரேக் வழங்கப்படும் என்று தெரிகிறது. மேலும் இந்த பைக்கில் சி.என்.ஜி. டேன்க் வைப்பதற்கான இடவசதி உள்ளது. இதற்காக மோட்டாரின் மேல் இடம் ஒதுக்கப்படுகிறது.

    புதிய சி.என்.ஜி. பைக் 100 முதல் 160 சிசி பிரிவில் நிலைநிறுத்தப்படும் என்று தெரிகிறது. இதுதவிர இந்த பைக்கில் ஹேண்டில் கார்டுகள், ஹெட்லைட் கவுல், என்ஜின் கிராஷ் கார்டு, கிராப் ரெயில் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. பஜாஜ் நிறுவனத்தின் புதிய சி.என்.ஜி. பைக் ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம்.

    • டெஸ்டிங் செய்யப்படும் மாடலில் டிஜிட்டல் டேஷ்போர்டு உள்ளது.
    • இந்த யூனிட்-இல் ப்ளூடூத் கனெக்டிவிட்டி வழங்கப்படலாம்.

    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது பல்சர் சீரிஸ் மாடல்களை முற்றிலுமாக மாற்றியமைத்து வருகிறது. அந்த வகையில் பல்சர் N250 மோட்டார்சைக்கிள் டெஸ்டிங் செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. டெஸ்டிங் செய்யப்படும் மாடலில் டிஜிட்டல் டேஷ்போர்டு உள்ளது.

    சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட பல்சர் N150 மற்றும் பல்சர் N160 மாடல்களிலும் இதே போன்ற டிஜிட்டல் யூனிட் வழங்கப்பட்டு இருந்தது. தற்போது இவை பல்சர் சீரிசின் பெரிய மாடல்களிலும் வழங்கப்படுவது உறுதியாகி இருக்கிறது. இந்த யூனிட்-இல் ப்ளூடூத் கனெக்டிவிட்டி வழங்கப்படும் என்று தெரிகிறது.

     


    முந்தைய ஸ்பை படங்களில் புதிய பல்சர் N250 மாடலில் யு.எஸ்.டி. ஃபோர்க் வழங்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இது பல்சர் NS160 மற்றும் பல்சர் NS200 மாடல்களில் உள்ளதை போன்றே இருக்கும் என்றும் N250 மாடலுக்கு ஏற்ற டியூனிங் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

    சமீபத்தில் அப்டேட் செய்யப்பட்ட மற்ற பஜாஜ் பல்சர் மோட்டார்சைக்கிள்களை போன்றே புதிய 250 சீரிஸ் மாடல்களிலும் மெக்கானிக்கல் மாற்றங்கள் செய்யப்படாது என்றே தெரிகிறது. புது அப்டேட்களுக்கு ஏற்ப புதிய பல்சர் 250 மாடல்களின் விலையும் சற்று அதிகமாக நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.

    • பஜாஜ் சி.என்.ஜி. பைக் அடுத்த ஆண்டு அறிமுகமாகும் என்று கூறப்பட்டது.
    • புதிய மாடல் அதிக யூனிட்கள் விற்பனையாகும் என எதிர்பார்க்கலாம்.

    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது முதல் சி.என்.ஜி. மோட்டார்சைக்கிளை அடுத்த காலாண்டிற்குள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக இந்த மோட்டார்சைக்கிளை 2025 வாக்கில் அறிமுகப்படுத்த பஜாஜ் நிறுவனம் திட்டமிட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

    இது தொடர்பாக தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி பஜாஜ் நிறுவனத்தின் சி.என்.ஜி. மோட்டார்சைக்கிள் ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. தற்போது வரை இந்த மாடல் பற்றிய இதர விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

    எனினும், இந்த மாடல் பல்வேறு பிரிவுகளில் நிலைநிறுத்தக்கூடிய வகையில், 100சிசி-யில் இருந்து 160சிசி வரையிலான திறன் கொண்டிருக்கும் என தெரிகிறது. நகர்ப்புறங்களில் பஜாஜ் நிறுவனம் அதிக வாடிக்கையாளர்களை பெறுவதில்லை. இதன் காரணமாக புதிய சி.என்.ஜி. மோட்டார்சைக்கிள் பஜாஜ் நிறுவனத்திற்கு நகர்ப்புற விற்பனையை அதிகப்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.

    • புதிய மாடலும் மெல்லிய தோற்றம் கொண்டிருக்கிறது.
    • இதன் டி.ஆர்.எல். டிசைன் மாற்றப்பட்டு இருக்கிறது.

    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது பல்சர் NS125 மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அப்டேட் செய்துள்ளது. புதிய NS125 மாடல், 2024 NS160 மற்றும் NS200 மாடல்களுக்கு வழங்கப்பட்ட அம்சங்களுடன் அறிமுகமாகி இருக்கிறது.

    வடிவமைப்பில் புதிய பஜாஜ் பல்சர் NS125 மாடல் மெல்லிய தோற்றம், மஸ்குலர் டிசைன் கொண்டிருக்கிறது. இதன் முன்புறம், ஃபியூவல் டேன்க், பக்கவாட்டு பேனல்கள் ஒரே மாதிரி காட்சியளிக்கின்றன. இதன் ஹெட்லைட் மாற்றப்பட்டு இருக்கிறது. 2024 பஜாஜ் பல்சர் NS125 மாடலில் தண்டர் வடிவம் கொண்ட எல்.இ.டி. டி.ஆர்.எல்.-கள் வழங்கப்படுகின்றன.

    புதிய பல்சர் NS125 மாடலிலும் 125சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 11.8 ஹெச்.பி. பவர், 11 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இத்துடன் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி வழங்கப்பட்டுள்ளது.

    இதில் எஸ்.எம்.எஸ்., கால் நோட்டிபிகேஷன், போன் பேட்டரி லெவல் மற்றும் இதர விவரங்கள் காண்பிக்கப்படுகின்றன. இத்துடன் யு.எஸ்.பி. போர்ட் மற்றும் ஏ.பி.எஸ். வழங்கப்பட்டு இருக்கிறது. சஸ்பென்ஷனுக்கு முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், பின்புறம் மோனோஷாக் யூனிட் உள்ளது. பிரேக்கிங்கிற்கு முன்புறம் ஒற்றை டிஸ்க், பின்புறம் டிரம் பிரேக் உள்ளது.

    2024 பஜாஜ் பல்சர் NS125 மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 04 ஆயிரத்து 922, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது முந்தைய வெர்ஷனை விட ரூ. 5 ஆயிரம் விலை அதிகம் ஆகும். இந்திய சந்தையில் புதிய பல்சர் NS125 பைக் ஹீரோ எக்ஸ்டிரீம் 125R மற்றும் டி.வி.எஸ். ரைடர் 125 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    • புதிய மாடலில் ப்ளூடூத் கனெக்டிவிட்டி வழங்கப்பட்டுள்ளது.
    • இதில் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, நோட்டிபிகேஷன் அலர்ட் வசதி உள்ளது.

    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் மேம்பட்ட பல்சர் NS160 மற்றும் பல்சர் NS200 மோட்டார்சைக்கிள் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது. இவற்றின் விலை முறையே ரூ. 1 லட்சத்து 46 ஆயிரம் மற்றும் ரூ. 1 லட்சத்து 55 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய மாடலில் நீண்ட காலம் எதிர்பார்க்கப்பட்ட புதிய எல்.சி.டி., ப்ளூடூத் கனெக்டிவிட்டி போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் முற்றிலும் புதிய எல்.இ.டி. ஹெட்லைட், டி.ஆர்.எல்.-கள் வழங்கப்பட்டுள்ளன.

     


    பஜாஜ் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த பல்சர் N150 மற்றும் N160 மாடல்களில் வழங்கப்பட்ட டிஜிட்டல் டேஷ்போர்டு புதிய NS மாடல்களிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி மற்றும் நோட்டிபிகேஷன் அலர்ட் வசதியும் உள்ளது.

    இந்திய சந்தையில் புதிய பல்சர் NS160 மாடல் டி.வி.எஸ். அபாச்சி RTR160 4V மற்றும் ஹீரோ எக்ஸ்டிரீம் 160R 4V மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. புதிய பல்சர் NS200 மாடல் டி.வி.எஸ். அபாச்சி RTR 200 4V மற்றும் ஹோண்டா ஹார்னெட் 2.0 மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    • டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் வழங்கப்படலாம்.
    • பல்சர் N150, N160 மாடல்கள் அறிமுகமாகின.

    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது புதிய பல்சர் மோட்டார்சைக்கிளுக்கான டீசரை வெளியிட்டுள்ளது. புதிய பல்சர் மாடல் மேம்பட்ட NS200-ஆக இருக்கலாம் என்று தெரிகிறது. இந்த மாடலில் புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் தான் பஜாஜ் நிறுவனம் பல்சர் N150 மற்றும் பல்சர் N160 மாடல்களை அறிமுகம் செய்தது.

    புதிய N சீரிஸ் மாடல்களில் முற்றிலும் புதிய கிளஸ்டர் மற்றும் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி வழங்கப்பட்டது. அந்த வகையில், புதிய NS200 மாடலிலும் இதே செட்டப் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் ஸ்பீடோமீட்டர், ஒடோமீட்டர், ட்ரிப்மீட்டர், கியர் பொசிஷன் இன்டிகேட்டர், எஸ்.எம்.எஸ். மற்றும் கால் நோட்டிஃபிகேஷன்களை கான்பிக்கிறது.

     


    டீசரில் புதிய பல்சர் NS200 மாடலின் பக்கவாட்டு ப்ரோஃபைல் எப்படி காட்சியளிக்கும் என தெரியவந்துள்ளது. அதன்படி புதிய மாடலில் அதிகளவு மாற்றங்கள் செய்யப்படாது என்றே தெரிகிறது. அந்த வகையில், மேம்பட்ட பல்சர் NS200 மாடலில் மஸ்குலர் டேன்க், ஸ்ப்லிட் சீட், இளைஞர்களை கவரும் வகையிலான ஸ்டைலிங் கொண்டிருக்கும்.

    புதிய மாடலிலும் 199.5சிசி சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது. இது 24.1 ஹெச்.பி. பவர், 18.74 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கும் என தெரிகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படலாம். இந்த மாடலின் முன்புறம் யு.எஸ்.டி. ஃபோர்க்குகள், பின்புறம் மோனோஷாக் வழங்கப்படலாம்.

    • டூயல் சேனல் ஏ.பி.எஸ். ஸ்டான்டர்டு அம்சமாக வழங்கப்பட்டுள்ளது.
    • டிஜிட்டல் எல்.சி.டி. யூனிட் மற்றும் ப்ளூடூத் கனெக்ட்விட்டி உள்ளது.

    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 2024 பல்சர் N150 மற்றும் பல்சர் N160 மோட்டார்சைக்கிள் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இரண்டு புதிய மாடல்களும் இரு வேரியண்ட்களில் கிடைக்கின்றன. புதிய பல்சர் N150 பேஸ் வேரியன்ட் விலை ரூ. 1 லட்சத்து 18 ஆயிரம் என்றும் N160 மாடல் விலை ரூ. 1 லட்சத்து 31 ஆயிரம் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    முந்தைய மாடல்களை போன்றே 2024 வெர்ஷனின் பேஸ் வேரியன்ட்களில் அனலாக் டிஜிட்டல் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாகவே பல்சர் N150 மாடலின் விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. பல்சர் N160 மாடலில் டூயல் சேனல் ஏ.பி.எஸ். ஸ்டான்டர்டு அம்சமாக வழங்கப்பட்டு இருப்பதால், இதன் விலை மட்டும் கூடுதலாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

     


    புதிய 2024 பல்சர் N150 மற்றும் பல்சர் N160 டாப் என்ட் மாடல்கள் விலை முறையே ரூ. 1 லட்சத்து 24 ஆயிரம் மற்றும் ரூ. 1 லட்சத்து 33 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இரு மாடல்களிலும் முற்றிலும் புதிய டிஜிட்டல் எல்.சி.டி. யூனிட் மற்றும் ப்ளூடூத் கனெக்ட்விட்டி வழங்கப்பட்டு இருக்கிறது.

    பஜாஜ் பல்சர் N150 மாடலின் டாப் என்ட் வெர்ஷனில் இருபுறமும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. எனினும், சிங்கில் சேனல் ஏ.பி.எஸ். மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. புதிய பஜாஜ் பல்சர் N150 மற்றும் N160 மாடல்களுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. வினியோகம் விரைவில் துவங்கும் என்று தெரிகிறது.

    • விறப்னையை அதிகப்படுத்த பஜாஜ் திட்டம்.
    • 373சிசி சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது.

    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது பிரிபலமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் செட்டாக் EV-யின் புது வேரியன்ட் மற்றும் பல்சர் NS400 மாடல்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராகேஷ் ஷர்மா தெரிவித்து இருக்கிறார்.

    இத்துடன் சி.என்.ஜி. திறன் கொண்ட மோட்டார்சைக்கிளை உருவாக்கும் பணிகளிலும் ஈடுபட்டு வருவதாக அவர் தெரிவித்தார். பஜாஜ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் பிரிவில் குறிப்பிடத்தக்க மாடலாக செட்டாக் இருந்து வருகிறது. மார்ச் மாதத்திற்குள் மாதாந்திர விறப்னையை 15 ஆயிரம் யூனிட்களாக அதிகப்படுத்த பஜாஜ் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.

     

    கோப்புப்படம்

    கோப்புப்படம்


    அடுத்த நிதியாண்டின் முதல் காலாண்டில் செட்டாக் EV ஸ்கூட்டரின் புதிய வேரியண்ட்-ஐ அறிமுகம் செய்யவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. புதிய மாடல் மூலம் வளர்ந்து வரும் இந்திய எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் சந்தையில் பஜாஜ் நிறுவனம் குறிப்பிடத்தக்க நிலையை அடைய உதவும் என தெரிகிறது.

    புதிய செட்டாக் மாடல் தற்போது விற்பனை செய்யப்படும் வேரியன்ட்-ஐ விட குறைந்த விலையில் விற்பனைக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்த வரிசையில், பல்சர் NS400 மாடல் பல்சர் சீரிசில் அதிகம் எதிர்பார்க்கப்படும் மாடலாக இருந்து வருகிறது. இதில் 373சிசி, லிக்விட் கூல்டு, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    இந்த என்ஜின் 40 ஹெச்.பி. பவர், 35 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்திய சந்தையில் புதிய பல்சர் NS400 மோட்டார்சைக்கிள் கே.டி.எம். டியூக் 390 மற்றும் ராயல் என்பீல்டு ஹிமாலயன் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது.

    • மணிக்கு அதிகபட்சம் 73 கிமீ வேகத்தில் செல்லும்.
    • இதில் 3.2 கிலோவாட் ஹவர் பேட்டரி உள்ளது.

    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் வகையில் 2024 செட்டாக் பிரீமியம் மற்றும் அர்பேன் வேரியண்ட்களை அறிமுகம் செய்திருக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 1 லட்சத்து 15 ஆயிரத்து 001 மற்றும் ரூ. 1 லட்சத்து 35 ஆயிரத்து 463 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    இரண்டு புதிய ஸ்கூட்டர்களிலும் டெக்பேக் பெயரில் அதிக அம்சங்கள் வழங்கப்படுகின்றன. எனினும், இதனை வாடிக்கையாளர்கள் விரும்பும் பட்சத்தில் தேர்வு செய்து கொள்ளும் வகையில் வழங்கப்படுகின்றன. புதிய ஸ்கூட்டர்களில் பிரீமியம் வேரியண்ட் 5-இன்ச் அளவில் டி.எஃப்.டி. ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது.


     

    இத்துடன் இந்த ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 73 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இதில் உள்ள 3.2 கிலோவாட் ஹவர் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 127 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. இது செட்டாக் ஸ்கூட்டரின் முந்தைய வேரியண்ட் வழங்கியதை விட அதிகம் ஆகும்.

    அதிக ரேன்ஜ் மட்டுமின்றி புதிய ஸ்கூட்டருடன் 800 வாட் சார்ஜர் வழங்கப்படுகிறது. இதை கொண்டு பிரீமியம் வேரியண்டை 30 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 15.6 கிலோமீட்டர்கள் வரை செல்ல முடியும். இதுதவிர செட்டாக் மாடலின் பூட் ஸ்பேஸ் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

    • இதில் அதிநவீன அம்சங்கள், புதிய டி.எஃப்.டி. டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது.
    • இரண்டு வேரியண்ட்களை வித்தியாசப்படுத்தும் வகையில் இது இருக்கும்.

    பஜாஜ் நிறுவனம் தனது செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அப்டேட் செய்துள்ளது. இந்த மாடல் பஜாஜ் செட்டாக் பிரீமியம் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய பஜாஜ் செட்டாக் பிரீமியம் ஜனவரி 5-ம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. இதில் அதிநவீன அம்சங்கள், புதிய டி.எஃப்.டி. டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது.

    தற்போது செட்டாக் மாடல் அர்பேன் மற்றும் பிரீமியம் என இரண்டு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இவை இரண்டும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான அம்சங்களை கொண்டிருக்கிறது. இதில் பிரீமியம் வேரியண்ட் அப்டேட் செய்யப்படும் நிலையில், இரண்டு வேரியண்ட்களையும் வித்தியாசப்படுத்தும் வகையில் இது இருக்கும்.

     


    புதிய செட்டாக் பிரீமியம் வேரியண்ட் அறிமுகம் பற்றிய தகவலை பஜாஜ் நிறுவனம் தனது சமூக வலைதள அக்கவுண்ட்களில் வெளியிட்டு உள்ளது. இத்துடன் ஸ்கூட்டரின் பாகங்கள் பற்றிய டீசர்களும் வெளியிடப்பட்டன. டிஸ்ப்ளேவின் படி இந்த மாடலில் ப்ளூடூத் கனெக்டிவிட்டி, டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் வழங்கப்படும் என தெரியவந்துள்ளது. இத்துடன் ரைடிங் மோட்களும் வழங்கப்படுகிறது.

    டீசர்களின் படி புதிய வேரியண்ட் தற்போது விற்பனை செய்யப்படும் மாடல்களை போன்றே காட்சியளிக்கின்றன. இதில் ஒற்றை பக்க முன்புற சஸ்பென்ஷன், ஸ்மார்ட் அலாய் வீல்கள் மற்றும் மெல்லிய வட்ட வடிவம் கொண்ட டிசைன் வழங்கப்படுகிறது. சீட், லைட்கள், ஃபுளோர்போர்டு மற்றும் ஸ்டோரேஜ் உள்ளிட்டவைகளில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. 

    • பஜாஜ் நிறுவனம் பல்சர் P150 மாடலின் விற்பனையை நிறுத்தியது.
    • பஜாஜ் கம்யுட்டர் பைக் CT 150X பெயரில் விற்பனைக்கு வரலாம்.

    பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் புதிய கம்யுட்டர் ரக மோட்டார்சைக்கிள் டெஸ்டிங் செய்யப்படுகிறது. இது பஜாஜ் நிறுவனத்தின் CT சீரிசில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. டெஸ்டிங் செய்யப்படும் யூனிட் முழுமையாக மறைக்கப்பட்டு இருக்கிறது. எனினும், இது CT பிராண்டிங்கில் வெளியாவதை உணர்த்தும் அம்சங்கள் ஆங்காங்கே காணப்படுகிறது.

    டெஸ்டிங் செய்யப்படும் மாடலில் அளவில் பெரிய வட்ட வடிவம் கொண்ட ஹெட்லைட், உயரமான மற்றும் அகலமான ஹேண்டில்பார் இடம்பெற்று இருக்கிறது. இத்துடன் ஹேண்ட் கார்டு, சம்ப் கார்டு மற்றும் பிரேஸ்டு ஹேண்டில் பார் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

    Photo Courtesy: bikewale

    Photo Courtesy: bikewale

    புதிய மாடல் CT 125X மாடலின் மேல் நிலைநிறுத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது. அந்த வகையில், இந்த மாடலில் 150சிசி திறன் கொண்ட என்ஜின் வழங்கப்படும் என்று தெரிகிறது. புதிய பஜாஜ் கம்யுட்டர் பைக் CT 150X பெயரில் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் தான் பஜாஜ் நிறுவனம் பல்சர் P150 மாடலின் விற்பனையை நிறுத்தியது.

    ×