என் மலர்

  செய்திகள்

  விற்பனையில் ஒரு கோடி மைல்கல் கடந்து அசத்தும் பஜாஜ் பல்சர்
  X

  விற்பனையில் ஒரு கோடி மைல்கல் கடந்து அசத்தும் பஜாஜ் பல்சர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பல்சர் ரக மோட்டார்சைக்கிள்கள் விற்பனையில் ஒரு கோடி யூனிட்களை கடந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் மே மாத விற்பனையில் மட்டும் சுமார் 70,000-க்கும் அதிக யூனிட்களை கடந்திருந்த நிலையில், நாட்டில் பஜாஜ் பல்சர் விற்பனை ஒரு கோடி யூனிட்களை கடந்திருக்கிறது. சர்வதேச சந்தையில் டிசம்பர் 2017 வாக்கில் பல்சர் விற்பனை ஒரு கோடி யூனிட்களை கடந்தது குறிப்பிடத்தக்கது.

  புதிய மைல்கல் விற்பனையை கொண்டாடும் வகையில் பஜாஜ் ஆட்டோ வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறது. இந்த வீடியோவில் 'பல்சர் சிட்டி' என்ற இடத்தில் பல்சர் ரக மோட்டார்சைக்கிள்களில் வீரர்கள் சாகசம் செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. வீடியோவில் பல்சர் RS200, பல்சர் NS200, பல்சர் 180, பல்சர் 150UG5 உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கும் நிலையில் மற்ற மாடல்கள் இடம்பெறவில்லை.

  இந்தியாவின் பிரீமியம் மற்றும் என்ட்ரி-லெவல் ஸ்போர்ட்பைக் மாடலாக பஜாஜ் பல்சர் இருக்கின்றன. மே 2018 காலக்கட்டத்தில் மட்டும் பல்சர் மாடல்களின் விற்பனை 70,000 ஆக அதிகரித்தது. பல்சர் ரக மாடல்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக போதிய வரவேற்பு கிடைக்காத நிலையில் இத்தகைய விற்பனை நடைபெற்று இருக்கிறது. பல்சர் மாடல்களின் விற்பனை அதிகரிக்க முக்கிய காரணமாக பல்சர் 150 கிளாசிக் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது தான் என கூறப்படுகிறது.  இந்தியாவில் பல்சர் சீரிஸ் மோட்டார்சைக்கிள்களில் மட்டும் எட்டு மாடல்களை பஜாஜ் விற்பனை செய்து வருகிறது. இவற்றில் பல்சர் 135LS, கிளாசிக் 150, ஸ்டான்டர்டு 150, ஸ்டான்டர்டு 180 மற்றும் பல்சர் 200F உள்ளிட்டவை அடங்கும். இத்துடன் லிக்விட்-கூல்டு NS160, ஃபிளாக்ஷிப் NS200 மற்றும் RS200 மாடல்கள் அடங்கும். 

  இவற்றின் விலை ரூ.64,589 (எக்ஸ்-ஷோரூம், மும்பை) பல்சர் 135LS, கிளாசிக் 150 வேரியன்ட் விலை ரூ.67,437 (எக்ஸ்-ஷோரூம், மும்பை), பல்சர் 150 மாடல் ரூ.6000 விலை அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடல் ஸ்டான்டர்டு மற்றும் ட்வின்-டிஸ்க் என இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கிறது.

  பல்சர் NS200 மாடலின் ஏபிஎஸ் இல்லா வேரியன்ட் விலை ரூ.98,000 (எக்ஸ்-ஷோரூம், மும்பை) பல்சர் RS200 விலை ரூ.1.24 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், மும்பை) துவங்குகிறது.
  Next Story
  ×