என் மலர்
நீங்கள் தேடியது "Offer"
- பி.எஸ்.என்.எல். நிறுவனம் சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் அசத்தலான சலுகையை அறிவித்து இருக்கிறது.
- இந்த சலுகை குறுகிய காலக்கட்டத்திற்கு மட்டுமே வழங்கப்பட உள்ளது.
இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் விளம்பர நோக்கில் சிறப்பு சலுகையை அறிவித்து இருக்கிறது. அதன்படி பி.எஸ்.என்.எல். பயனர்கள் ரூ. 150 டாப்-அப் செய்தால் ரூ. 150 மதிப்பிலான டாக்டைம் பெற முடியும். அதன்படி பயனர்கள் மேற்கொள்ளும் ரூ.150 ரிசார்ஜில் ஃபுல் டாக்டைம் பெறலாம்.
விளம்பர நோக்கில் அறிவிக்கப்பட்டு இருப்பதால், இந்த சலுகை மிக குறுகிய காலக்கட்டத்திற்கு மட்டுமே கிடைக்கும். இது பற்றி வெளியாகி இருக்கும் அறிவிக்கையின் படி ஃபுல் டாக்டைம் சலுகை ஆகஸ்ட் 15, 2022 துவங்கி ஆகஸ்ட் 21, 2022 வரை வழங்கப்படும். முன்னதாக பி.எஸ்.என்.எல். நிறுவனம் நீண்ட வேலிடிட்டி கொண்ட புது சலுகைகளை அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

ரூ. 2 ஆயிரத்து 022 விலையில் அறிவிக்கப்பட்ட பி.எஸ்.என்.எல். சலுகை 300 நாட்கள் வேலிடிட்டி கொண்டது ஆகும். இந்த பிரீபெயிட் சலுகை மாதம் 75 ஜிபி டேட்டா வழங்குகிறது. டேட்டா தீர்ந்த பின் மொபைல் டேட்டா வேகம் 40kbps ஆக குறைக்கப்பட்டு விடும். மேலும் இந்த டேட்டா பலன் முதல் 60 நாட்களுக்கு மட்டுமே வழங்கப்படும். இதன் பின் பயனர்கள் டேட்டா வவுச்சர்களுக்கு ரிசார்ஜ் செய்து மொபைல் டேட்டா பயன்படுத்த வேண்டும்.
இவை தவிர பி.எஸ்.என்.எல். ரூ. 3 ஆயிரத்து 299 விலை கொண்ட வருடாந்திர டேட்டா சலுகை மாதம் 2.5 ஜிபி டேட்டாவை 12 மாதங்களுக்கு வழங்குகிறது. மற்றொரு சலுகை ரூ. 2 ஆயிரத்து 299 விலையில் மாதம் 1.5 ஜிபி டேட்டாவை 12 மாதங்களுக்கு வழங்குகிறது. இவை மட்டுமின்றி பி.எஸ்.என்.எல். ரூ. 1,251 விலை வருடாந்திர சலுகையில் மாதம் 0.75 ஜிபி டேட்டா ஒரு வருட வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.
- ரேசன் கடைகளில் இ.சேவை மையங்களை நடத்த இயலாது: தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் அறிவித்தூர்.
- கடந்த 2010-ம் ஆண்டு, அரசு ஊழியர்களுக்கு இணையாக விகிதாச்சார அடிப்படையில் அகவிலைப்படியை அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி வழங்க உத்தரவிட்டார்.
கடலூர்:
சிதம்பரத்தில் அரசு பணியாளர்கள் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் ரேசன் கடை ஊழியர்களுக்கு, அரசு ஊழியர்களுக்கு இணையாக சலுகை, உரிமை வழங்க கடந்த 15 ஆண்டுகளாக முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கடந்த 2010-ம் ஆண்டு, அரசு ஊழியர்களுக்கு இணையாக விகிதாச்சார அடிப்படையில் அகவிலைப்படியை அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி வழங்க உத்தரவிட்டார். கடந்த 10 ஆண்டுகளாக அந்த அகவிலைப்படி பெற்று வந்தனர்.
கொரோனா காலத்தில் ரேசன் கடை பணியாளர்களுக்கு அகவிலைப்படி நிறுத்தப்பட்டது. தலைமை அலுவலக முற்றுகை உள்ளிட்ட பல போராட்டங்களை நடத்தியது.
கடந்த ஜூன் 7,8 மற்றும் 9ம் தேதிகளில் மாநிலம் முழுவதும் உள்ள ரேசன் கடை ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டனர். 90 சதவீத பணியாளர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். ஜூன் 10ம் தேதி 7 அம்ச கோரிக்கையுடன் காத்திருப்பு போராட்டடம் நடத்தினோம். அன்று முத-அமைச்சரை சந்திக்க இயலவில்லை.
தலைமை செயலகத்தில் மனு அளிக்கப்பட்டது. போராட்டத்தின் காரணமாக, முதல்-அமைச்சர் இந்த விஷயத்தில் தலையிட்டு நியாயமான கோரிக்கையை பரிசீலனை செய்து, ரேசன் கடை ஊழியர்களுக்கு 28 சதவீத அகவிலைப்படி வழங்க உத்தரவிட்டுள்ளார்.
அரசு பணியாளர்களில் மிகவும் பலவீனமான பகுதியினர் என சத்துணவு, துப்புரவு பணியாளர்கள் என 5 லட்சம் பேர் உள்ளனர். அத்தகைய ஊழியர்கள் எல்லா அரசு பணியாளர்கள் போல் வசதி வாய்ப்புகளுடன் வாழ்வது கிடையாது.
அத்தகைய பணியாளர்கள் மீதும் அரசு கவனம் செலுத்த வேண்டும். மக்களுக்கு விரும்பாத பொருட்களை தலையில் கட்டும் சூழல் இருப்பதால் சில சிக்கல்கள் வருகிறது. மக்களின் விருப்பத்தை ஆண்டு தோறும் கேட்டு, வழங்கினால் பிரச்னைகள் வராது. கருவிழி திரை மூலம் பொருட்கள் வழங்கும் முறைக்கு வரவேற்கிறோம். நுாறு சதவீத கணினி மயமாக்கம் தற்போது படிப்படியாக நிறைவேற்றப்பட்டது.
கணினி மயமாக்கத்தில் மில்லில் இருந்து பொருட்கள் குடோனுக்கும், குடோனில் இருந்து ரேசன் கடைக்கு வரும் வரை ஆய்வு செய்வதிற்கான வாய்ப்பே இல்லாத நிலை உள்ளது. தவறுகள் தொடங்கும் இடத்தில் ஆய்வு செய்தால், ஒட்டுமொத்தமாக தவறில்லாத நிர்வாகம் நடக்கும்.
கணினி மயமாக்கத்தில் சில குறைகள் உள்ளது. எல்லா கடைகளிலும் மோடம் இல்லை. பழைய பி.ஓ.எஸ்., மிஷின்கள் உள்ளது. தரமான பி.ஓ.எஸ்., மிஷின்கள் வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது தமிழ்நாடு நியாயவிலைக்கடை பணியாளர் சங்க மாநிலத் தலைவர் ஜெயச்சந்திரராஜா, மாநில துணைத் தலைவர் துரை.சேகர், அரசு பணியாளர் சங்க மாநிலத் தலைவர்சிவக்குமார், மாநில பொருளாளர் சரவணன், மாவட்ட துணைத் தலைவர் நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.








