மாலத்தீவு பயணத்தை ரத்து செய்றீங்களா..? அப்போ இந்த சலுகை உங்களுக்கு தான்

ரத்து செய்யப்பட்ட மாலத்தீவு பயணங்களுக்கு ஒரு தட்டு சோலே பத்தூர் சிற்றுண்டி.சலுகையின் மூலம் லட்சத்தீவின் சுற்றுலா பயணத்தை மேம்படுத்த விரும்புகிறோம்.
மாலத்தீவு பயணத்தை ரத்து செய்றீங்களா..? அப்போ இந்த சலுகை உங்களுக்கு தான்
Published on

பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணத்தை மாலத்தீவு அமைச்சர்கள் விமர்சித்ததையடுத்து அந்த அமைச்சர்களுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.

மத்திய அமைச்சரகள் தொடங்கி அரசியல் கட்சியினர், கிரிக்கெட் வீரர்கள், நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பலரும் இந்த விவகாரத்தில் மாலத்தீவை கண்டித்ததோடு லட்சத்தீவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.

இந்நிலையில் டெல்லி, நொய்டா மற்றும் காசியாபாத்தில் உள்ள பாதுரா என்ற உணவகம் ஒரு சலுகையை அறிவித்துள்ளது. அதாவது ஒவ்வொரு லட்சத்தீவு முன்பதிவு அல்லது ரத்து செய்யப்பட்ட மாலத்தீவு பயணங்களுக்கு ஒரு தட்டு சோலே பத்தூர் எனப்படும் ஒரு வகையான காலை சிற்றுண்டி தருவதாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த கடையின் உரிமையாளர் கூறுகையில், "இந்த சலுகையின் மூலம் லட்சத்தீவின் சுற்றுலா பயணத்தை மேம்படுத்த விரும்புகிறோம். இந்த அறிவிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த மாதம் முழுவதும் இந்த சலுகையை நீடிக்க விரும்புகிறோம்" என்றார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com