search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வி"

    இந்திய டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனங்கள் மீண்டும் சேவை கட்டணங்களை உயர்த்த திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


    இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களான ரிலைன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வி (வோடபோன் ஐடியா) சேவை கட்டணங்களை மீண்டும் உயர்த்த திட்டமிடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன் படி இந்த ஆண்டு தீபாவளி காலக்கட்டத்தில் டெலிகாம் நிறுவனங்கள் தங்களின் சேவை கட்டணங்களை உயர்த்தலாம் என கூறப்படுகிறது.

    நிறுவனங்கள் சார்பில் ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து கிடைக்கும் வருவாயை (ARPU) அதிகப்படுத்தும் முயற்சியாக ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வி போன்ற நிறுவனங்கள் தங்களது சலுகைகளின் விலையை 10 முதல் 12 சதவீதம் வரை உயர்த்த திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. 

     ஏர்டெல்

    விலை உயர்வு அமலுக்கு வந்தாலும், மூன்று நிறுவனங்கள் கூட்டாக சேர்ந்து சுமார் 35 முதல் 40 மில்லியன் பயனர்களை கூடுதலாக சேர்க்கும் என கணிக்கப்பட்டு உள்ளது. புது வாடிக்கையாளர்களில் பெரும்பாலானோர் ஊரக பகுதிகளை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

    இந்த விலை உயர்வை கொண்டு மூன்று முன்னணி நிறுவனங்களும் அடுத்த ஆண்டு இறுதியில் ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து பெறும் வருவாயை (ARPU) பத்து சதவீதம் வரை அதிகரித்துக் கொள்ள முடியும் என தனியார் ஆய்வு நிறுவனம் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

    பாரதி ஏர்டெல் நிறுவன தலைமை செயல் அதிகாரியும் நிர்வாக இயக்குனருமான கோபால் விட்டல், இந்த ஆண்டு டெலிகாம் சேவை கட்டணங்கள் மீண்டும் உயர்த்தப்படலாம் என ஏற்கனவே அறிவித்து இருந்தார். எனினும், வரும் மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு இந்த விலை உயர்வு அமலுக்கு வராது என அவர் தெரிவித்து இருந்தார்.
    வி (வோடபோன் ஐடியா) நிறுவனம் இந்திய வாடிக்கையாளர்களுக்கு புதிதாக சர்வதேச சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இவற்றின் விலை ரூ. 599 என துவங்குகிறது.


    சர்வதேச பயணம் தற்போது மிக எளிமையாகி விட்டது. இதன் காரணமாக பல இந்தியர்கள் வியாபாரம் மற்றும் ஓய்வு போன்ற காரணங்களுக்காக வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். இதை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் வி நிறுவனம் புதிய சர்வதேச ரோமிங் சலுகைகளை அறிவித்து இருக்கிறது.

    சர்வதேச பயணத்தை எளிமையாக்க, வி ரோமிங் சலுகைகள் உதவுகின்றன. சமீபத்தில் வி நிறுனம் பூ. 151 விலையில் பிரீபெயிட் சலுகையை அறிவித்து இருந்தது. இதில் மூன்று மாதங்களுக்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா வழங்கப்பட்டு இருந்தது. இதைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்ட ரூ. 82 சலுகையில் சோனி லிவ் சந்தா வழங்கப்பட்டது.
     
    வி போஸ்ட்பெயிட் பயனர்கள் ஐக்கிய அரபு அமீரகம், பிரிட்டன், அமரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேசியா, இத்தாலி, ஆஸ்திரேலியா, தாய்லாந்து, பிரேசில் மற்றும் இதர நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் போது வி அன்லிமிடெட் சர்வதேச ரோமிங் சலுகைகளில் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம். இவற்றின் விலை ரூ. 599 என துவங்கி, அதிகபட்சம் ரூ. 5 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 
    ×