என் மலர்
நீங்கள் தேடியது "Vodafone Idea"
- 28 நாட்கள் வேலிடிட்டி உடன் கூடிய ரூ.409 பேக்கில் இதுவரை ஒரு நாளைக்கு 2.5ஜிபி இலவச டேட்டா வழங்கப்பட்டு வந்தது.
- ரூ.475 பேக்கில் 28 நாட்களுக்கு தினசரி 3 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்பட்டு வந்தது.
இந்தியாவில் உள்ள முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான வோடபோன் ஐடியா, தற்போது அதன் பயனர்களுக்காக தங்களின் ரீசார்ஜ் பேக்குகளை கூடுதல் சலுகையுடன் புதுப்பித்து உள்ளது. ரூ. 500-க்கு கீழ் உள்ள ஒரு மாத வேலிடிட்டி உடன் கூடிய ரூ.409 மற்றும் ரூ.475 ஆகிய இரு பேக்குகள் தான் தற்போது கூடுதல் சலுகைகளுடன் புதுப்பிக்கப்பட்டு உள்ளன.
அதன்படி 28 நாட்கள் வேலிடிட்டி உடன் கூடிய ரூ.409 பேக்கில் இதுவரை ஒரு நாளைக்கு 2.5ஜிபி இலவச டேட்டா வழங்கப்பட்டு வந்தது. தற்போது அதனை 3.5ஜிபி டேட்டாவாக அதிகரித்துள்ளனர். மற்றபடி ஏற்கனவே இருந்தது போலவே இலவச வாய்ஸ் கால், எஸ்.எம்.எஸ், போன்ற சலுகைகளும் இதில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதேபோல் ரூ.475 பேக்கில் 28 நாட்களுக்கு தினசரி 3 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. தற்போது அது 4 ஜிபி டேட்டாவாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. மற்றபடி ஏற்கனவே இருந்தபடி வீக் எண்ட் டேட்டா ரோல் ஓவர், இலவச காலிங், மெசேஜ் போன்ற அம்சங்களும் இதில் இடம்பெற்று உள்ளன.
- பயனர்கள் மத்தியில் வி செயலியை பிரபலப்படுத்தவே அந்நிறுவனம் இவ்வாறு செய்துள்ளது.
- இந்த புதிய சலுகை மூலம் இலவசமாக ரூ. 50 கேஷ்பேக்கும், 30 ரிவார்ட் காயினும் வழங்கப்படுகிறது.
தொலைத்தொடர்பு நிறுவனமான வோடபோன் ஐடியா, தற்போது தனது பயனர்களுக்கு புது சலுகை ஒன்றை அறிவித்து உள்ளது. அதன்படி அந்நிறுவனத்தின் செயலியான வி ஆப் மூலம் பயனர்கள் ரூ.50 கேஷ்பேக் இலவசமாக பெற முடியும்.
அது எப்படி என்று தற்போது பார்க்கலாம்.

பயனர்கள் தாங்கள் பயன்படுத்தும் வோடபோன் ஐடியா நிறுவன மொபைல் நம்பருக்கு ரிசார்ஜ் செய்ய வி செயலியை புதிதாக டவுன்லோட் செய்து பயன்படுத்த வேண்டும். அதன்மூலம் ரீசார்ஜ் செய்தால் ரூ.50 கேஷ்பேக்கும், 30 ரிவார்ட் காயின்களும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
பயனர்கள் மத்தியில் வி செயலியை பிரபலப்படுத்தவும், அதன்மூலம் வரும் வருவாயை அதிகரிக்கவும் வோடபோன் ஐடியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
- வோடபோன் ஐடியா நிறுவனத்தின் வி செயலியில் 20 மொழி பாடல்கள் உள்ளன.
- காலர் டியூன் சந்தாதாரர்கள் வி ஆப் மியூசிக்கை எந்த விதமான கூடுதல் கட்டணமும் இன்றி பயன்படுத்திக் கொள்ளலாம்.
வோடபோன் ஐடியா (வி) நிறுவனத்தின் சந்தாதாரர்கள் போன் செய்யும் போது வழக்கமாக வரும் 'ட்ரிங் ட்ரிங்' ஒலிக்கு மாற்றாக தாங்கள் விரும்பும் பாடல்களை தேர்வு செய்து, அவற்றை இன்கமிங் அழைப்புகளுக்கு செட் செய்யும் வசதியை பெற்று உள்ளனர். இதன்மூலம் பயனர்கள் அவர்களுக்கு விருப்பமான பாடல்களை தேர்வு செய்து வைத்துக் கொள்ளலாம்.
வி செயலியில் விளம்பர தொந்தரவு இன்றி சமீபத்திய ஹிட் பாடல்களில் துவங்கி ஏராளமான பாடல்கள் ஹெச்.டி. தரத்தில் வழங்கப்படுகிறது. இதில் 20 மொழி பாடல்கள் உள்ளன. பத்து பிரிவுகளில் வரிசைப்படுத்தப்பட்டு இருக்கும் இந்த பாடல்களை பயனர்கள் தேர்வு செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

காலர் டியூன் சந்தாதாரர்கள் வி ஆப் மியூசிக்கை எந்த விதமான கூடுதல் கட்டணமும் இன்றி பயன்படுத்திக் கொள்ளலாம். புதிய பாடல்களை காலர் டியூனாக வைக்க பயனர்கள் மாதாந்திர அடிப்படையில் சந்தா கட்டி பயன்படுத்தலாம்.
அப்படி காலர் டியூனுக்கான மாதாந்திர சந்தா விலை ரூ. 49-இல் இருந்து துவங்குகிறது. இது மூன்று மாதத்திற்கு ரூ. 99, ஒரு வருடத்துக்கு ரூ. 249 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. காலர் டியூன் சேவையில், இலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்து கொள்ளும் வசதியும் கூடுதலாக வழங்கப்படுகிறது.
- நகர்ப்புறங்களில் வயர்லெஸ் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 62.4 கோடியாகக் குறைந்துள்ளது.
- அதே நேரத்தில் கிராமப்புறங்களில் வயர்லெஸ் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 51.8 கோடியாக அதிகரித்துள்ளது.
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய், வெளியிட்டுள்ள அறிக்கையின் படி. கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 16.82 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. இதற்கு அடுத்தபடியாக ஏர்டெல் நிறுவனம் புதிதாக 8.1 லட்சம் வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது.
அதேபோல் மற்றொரு முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான வோடபோன் ஐடியா ஏப்ரல் மாதத்தில் மட்டும் 15.68 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளதாக டிராய்யின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதன்மூலம் இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக ரிலையன்ஸ் ஜியோ உருவெடுத்துள்ளது. 35.5 சதவீத மார்க்கெட் ஷேர் உடன் ரிலையன்ஸ் ஜியோ முதல் இடத்திலும், 31.61 சதவீத மார்க்கெட் ஷேர் உடன் ஏர்டெல் இரண்டாம் இடத்திலும், 22.68 சதவீதத்துடன் வோடபோன் ஐடியா மூன்றாவது இடத்திலும் உள்ளது.

ஏப்ரல் 2022 இறுதியில் இந்திய வயர்லெஸ் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 114.3 கோடியாக அதிகரித்துள்ளது. நகர்ப்புறங்களில் வயர்லெஸ் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 62.4 கோடியாகக் குறைந்துள்ளது. அதே நேரத்தில் கிராமப்புறங்களில் வயர்லெஸ் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 51.8 கோடியாக அதிகரித்துள்ளது.
புதிதாக 16.82 லட்சம் பயனர்களை பெற்றுள்ள ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், 40.5 கோடி மொபைல் சந்தாதாரர்களுடன் இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் முன்னணியில் உள்ளது. புதிதாக 8.1 லட்சம் பயனர்களை பெற்றுள்ள ஏர்டெல் நிறுவனம் 36.11 கோடி சந்தாதாரர்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. மறுபுறம் 15.68 லட்சம் பயனர்களை இழந்துள்ள வோடபோன் ஐடியா நிறுவனத்தின் மொத்த சந்தாதாரர் எண்ணிக்கை 25.9 கோடியாக குறைந்துள்ளது.
பிராட்பேண்ட் சேவைகளைப் பொருத்தவரை ரிலையன்ஸ் ஜியோ ஏப்ரல் மாதத்தில் 3.31 லட்சம் புதிய சந்தாதாரர்களைப் பெற்றுள்ளது. ஏர்டெல் நிறுவனம் 71 ஆயிரத்து 297 பிராட்பேண்ட் பயனர்களை பெற்றுள்ளது. பிராட்பேண்ட் சந்தாதாரர்களில் ரிலையன்ஸ் ஜியோவின் சந்தைப் பங்கு 25.85 சதவீதமாகவும், ஏர்டெல் 23.54 சதவீதமாகவும் உள்ளது. ஏப்ரல் 2022 இறுதியில் இந்திய வயர்லைன் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 2.51 கோடி அதிகரித்துள்ளது.




