இந்த பட்ஜெட்டில் நெட்ப்ளிக்ஸ் நாங்க மட்டும் தான் கொடுக்குறோம்.. வோடபோன் ஐடியா அசத்தல்

பயனர்களுக்கு நெட்ப்ளிக்ஸ் சந்தா வழங்கப்படுகிறது. புதிய சலுகைகளில் தினமும் 2.5 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது.
இந்த பட்ஜெட்டில் நெட்ப்ளிக்ஸ் நாங்க மட்டும் தான் கொடுக்குறோம்.. வோடபோன் ஐடியா அசத்தல்
Published on

வோடபோன் ஐடியா நிறுவனம் நெட்ப்ளிக்ஸ் உடன் இணைந்து புதிய பிரீபெயிட் சலுகைகளை வழங்குகிறது. முன்னதாக வி பிரீபெயிட் சலுகைகளில் வி மூவிஸ் & டி.வி., 13 ஓ.டி.டி. சந்தா, 400-க்கும் அதிக லைவ் டி.வி. சேனல்கள் உள்ளிட்டவைகளை பயன்படுத்தும் வசதியை வழங்கி வந்தது.

தற்போது நெட்ப்ளிக்ஸ் கூட்டணியை தொடர்ந்து வி பிரீபெயிட் பயனர்கள் தங்களது மொபைல், டி.வி. மற்றும் டேப்லெட் போன்ற சாதனங்களில் நெட்ப்ளிக்ஸ் பயன்படுத்தலாம். ரூ. 1000-க்கும் குறைந்த விலையில் நெட்ப்ளிக்ஸ் சந்தாவை வழங்கும் ஒரே டெலிகாம் நிறுவனமாக வி இருக்கிறது.

அந்த வகையில் வி ரூ. 998 மற்றும் ரூ. 1399 பிரீபெயிட் சலுகைகளில் நெட்ப்ளிக்ஸ் பேசிக் சந்தா வழங்கப்படுகிறது. இந்த சலுகைகளில் முறையே 70 நாட்கள் மற்றும் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளன. இவற்றில் முறையே தினமும் 1.5 ஜி.பி. மற்றும் 2.5 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது.

இத்துடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். போன்ற பலன்கள் வழங்கப்படுகிறது. மும்பை மற்றும் குஜராத்தில் வசிக்கும் பயனர்கள் 70 நாட்கள் வேலிடிட்டி கொண்ட சலுகையை ரூ. 1099 விலையில் வாங்க வேண்டும். 

X

Maalai Malar
www.maalaimalar.com