என் மலர்
நீங்கள் தேடியது "ரீசார்ஜ் கட்டணம்"
- கடந்த ஜூன் மாதம் கட்டண உயர்வுக்குப் பின் 2-வது காலாண்டில் ரூ. 3,593 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.
- ஏர்டெல் நிறுவன வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி.
இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களான ஜியோ, வோடஃபோன் ஐடியா மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை கடந்த ஜூன் மாதம் அதிரடியாக உயர்த்தின. இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தன. இதனிடையே பிஎஸ்என்எல் ரீசார்ஜ் கட்டணத்தை குறைத்து புதிய பிளானை வெளியிட்டது. இதனால் பலரும் பிஎஸ்என்எல்-க்கு மாறினர்.
இந்த நிலையில், ரீசார்ஜ் கட்டணத்தை மீண்டும் உயர்த்த ஏர்டெல் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஜூன் மாதம் கட்டண உயர்வுக்குப் பின் 2-வது காலாண்டில் ரூ. 3,593 கோடி நிகர லாபம் ஈட்டிய நிலையில் ஏர்டெல் நிறுவனம் மீண்டும் கட்டணத்தை உயர்த்த உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தகவலால் அதிர்ச்சி அடைந்துள்ள ஏர்டெல் நிறுவன வாடிக்கையாளர்கள் அடுத்த எந்த மொபைல் நிறுவனத்திற்கு மாறலாம் என யோசிக்க தொடங்கி உள்ளனர்.
- நாட்டில் 117 கோடி மொபைல் இணைப்புகளும், 93 கோடி இணைய இணைப்புகளும் உள்ளன.
- பிஎஸ்என்எல் ரீசார்ஜ் கட்டணங்களை குறைத்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் 1ஜிபி டேட்டாவின் விலையை, ஸ்ட்ரீட் கஃபேயின் விலைப்பட்டியலோடு ஒப்பிட்ட புகைப்படத்தை மத்திய தொலைத்தொடர்புத்துறை பகிர்ந்துள்ளது. இது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
காபி, டீ, லஸ்ஸி மற்றும் டோஸ்ட் ஆகியவற்றுடன் இந்தியாவில் 1 ஜிபி டேட்டாவின் விலையை ஒப்பிடும் ஒரு தெருவோர கஃபேயின் படத்தை தொலைத்தொடர்புத்துறை தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது. அதில், "இந்தியாவில் 1 ஜிபி டேட்டா ஒரு கப் காபியை விட மலிவானது" என்று எழுதப்பட்டுள்ளது.
சமீபத்தில், மக்களவையில் பேசிய தொலைத்தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, நாட்டில் 117 கோடி மொபைல் இணைப்புகளும், 93 கோடி இணைய இணைப்புகளும் உள்ளன. ஒவ்வொரு நிமிடத்திற்கும் அழைப்பின் விலை 53 பைசா என்று கூறிய அவர், நாட்டில் உள்ள அனைத்து கட்டணங்களும் உலகிலேயே மிகக் குறைந்த கட்டணங்களில் ஒன்று. ஒரு ஜிபி டேட்டாவின் விலை ரூ.9.12க்கு உலகிலேயே மலிவான டேட்டா விலையை இந்தியா வழங்குகிறது என்று கூறியிருந்தார்.
ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட தனியார் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் தங்களது செல்போன் ரீசார்ஜ் சேவை கட்டணத்தை அதிரடியாக உயர்த்திய நிலையில், பிஎஸ்என்எல் ரீசார்ஜ் கட்டணங்களை குறைத்தது குறிப்பிடத்தக்கது.
- பிஎஸ்என்எல் ரூ.249க்கு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
- இந்தியாவில் உள்ள எந்த நெட்வொர்க்கிற்கும் வரம்பற்ற இலவச அழைப்பு.
ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட தனியார் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் தங்களது செல்போன் ரீசார்ஜ் சேவை கட்டணத்தை அதிரடியாக உயர்த்திய நிலையில், பிஎஸ்என்எல் ரீசார்ஜ் கட்டணத்தை குறைத்து புதிய பிளானை வெளியிட்டுள்ளது.
அதன்படி, பிஎஸ்என்எல் ரூ.249க்கு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இது, ஜியோ, ஏர்டெல் போன்ற தனியார் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் கட்டண உயர்வுக்கு மத்தியில், பிஎஸ்என்எல் விலையை குறைத்துள்ளது வாடிக்கையாளர்களுக்கு நிவாரணமாக உள்ளது.
அதன் நீட்டிக்கப்பட்ட வேலிடிட்டி, வரம்பற்ற அழைப்பு மற்றும் தாராளமான டேட்டா அலவன்ஸ் ஆகியவற்றுடன், அதிக மதிப்பு மற்றும் குறைந்த செலவை எதிர்பார்க்கும் பயனர்களை ஈர்க்கும் வகையில் இந்த திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
தனியார் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் அதிகாரப்பூர்வமாக தங்கள் கட்டணங்களின் விலையை சுமார் 26 சதவீதம் உயர்த்தியுள்ளது. இது வரும் ஜூலை 3, 4ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
ஜியோ மற்றும் ஏர்டெல்: விலை உயர்வுகள் ஜூலை 3, 2024 முதல் அமலுக்கு வருகிறது.
வோடபோன் ஐடியா: புதிய விலைகள் ஜூலை 4, 2024 முதல் அமலுக்கு வருகிறது.
பிஎஸ்என்எல் திட்டத்தின் சலுகை பற்றிய விவரங்கள் இதோ:
புதிய திட்டம் 45 நாட்களுக்கு நீடிக்கும். இது வழக்கமான திட்டங்களை விட நீண்டது.
இந்தியாவில் உள்ள எந்த நெட்வொர்க்கிற்கும் வரம்பற்ற இலவச அழைப்பு.
மொத்தம் 90ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு 2ஜிபிக்கு சமம்.
ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்.
இத்தகைய விரிவான திட்டத்தை குறைந்த விலையில் வழங்குவதற்கான பிஎஸ்என்எல்-ன் நடவடிக்கை சிறந்த மதிப்பை வழங்கும் அதே வேளையில், பயனர்கள் மீதான நிதிச்சுமையை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட் பெய்டு ரீசார்ஜ் கட்டணங்களை 10% முதல் 21% வரை உயர்த்தியுள்ளது.
- இந்த விலை உயர்வு ஜூலை 4ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இந்தியாவில் ஜூலை மாதம் முதல் டெலிகாம் சேவை கட்டணங்கள் உயரத்தப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த வகையில் ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களை தொடர்ந்து வோடபோன் ஐடியா நிறுவனமும் தனது செல்போன் ரீசார்ஜ் கட்டணத்தை அதிரடியாக உயர்த்தியுள்ளது.
வோடபோன் ஐடியா நிறுவனம் ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட் பெய்டு ரீசார்ஜ் கட்டணங்களை 10% முதல் 21% வரை உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு ஜூலை 4ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
அந்த வகையில் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட சலுகையின் விலை ரூ. 299 -ல் இருந்து (தினம் 1.5 GB) ரூ. 349 -ஆக உயர்கிறது.
365 நாள்களுக்கு ரூ.2,899 (தினம் 1.5 GB) என்ற வருடாந்திரக் கட்டணம் ரூ.3,449 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
- நேற்று ஜியோ நிறுவனம் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்திய நிலையில் ஏர்டெல் நிறுவனமும் கட்டணத்தை உயர்த்தி உள்ளது.
- அடுத்த வாரம் முதல், ஏர்டெல் நிறுவனம் திருத்தப்பட்ட புதிய பிரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை அதன் இணையதளத்தில் காண்பிக்கும்.
இந்தியாவில் ஜூலை மாதம் முதல் டெலிகாம் சேவை கட்டணங்கள் உயரத்தப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த வகையில் நேற்று ஜியோ நிறுவனம் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தியது. இதனை தொடர்ந்து தற்போது ஏர்டெல் நிறுவனமும் தனது ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
ஏர்டெல் பிரீபெயிட் மாதாந்திர சலுகை, இரண்டு மாதங்கள், மூன்று மாதங்கள் மற்றும் ஓராண்டு வேலிடிட்டி வழஹ்கும் பிரீபெயிட் சலுகைகளின் கட்டணங்களை ஏர்டெல் உயர்த்துகிறது. அடுத்த வாரம் புதிய விலை நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள் மற்றும் போஸ்ட்பெய்டு திட்டங்களுக்கான புதிய கட்டணங்கள் ஜூலை 3 முதல் நடைமுறைக்கு வரும் என்று ஏர்டெல் தெரிவித்து இருக்கிறது. அடுத்த வாரம் முதல், ஏர்டெல் நிறுவனம் திருத்தப்பட்ட புதிய பிரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை அதன் இணையதளத்தில் காண்பிக்கும்.
இதேபோல், போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்கள் புதிய திட்டங்களின்படி மாதாந்திர கட்டணம் அதிகரிப்பதைக் காண முடியும் என்று ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட சலுகையின் விலை ரூ. 179-ல் இருந்து ரூ. 199-ஆக உயர்கிறது. 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட சலுகையின் விலை ரூ. 455-ல் இருந்து ரூ. 509 ஆக உயர்கிறது. அதிகபட்சமாக ஒரு வருட வேலிடிட்டி கொண்ட சலுகையின் விலை ரூ. 2999-ல் இருந்து ரூ. 3599-ஆக உயர்ந்துள்ளது.
அதன் விவரம் பின்வருமாறு:-
பழைய விலை | புதிய விலை | டேட்டா | செல்லுபடியாகும் காலம் (நாட்கள்) |
179 | 199 | 2ஜிபி | 28 |
455 | 509 | 6ஜிபி | 84 |
1799 | 1999 | 24 ஜிபி | 365 |
265 | 299 | ஒரு நாளைக்கு 1ஜிபி | 28 |
299 | 349 | ஒரு நாளைக்கு 1.5 ஜிபி | 28 |
359 | 409 | ஒரு நாளைக்கு 2.5 ஜிபி | 28 |
399 | 449 | ஒரு நாளைக்கு 3 ஜிபி | 28 |
479 | 579 | ஒரு நாளைக்கு 1.5 ஜிபி | 56 |
549 | 649 | ஒரு நாளைக்கு 2 ஜிபி | 56 |
719 | 859 | ஒரு நாளைக்கு 1.5 ஜிபி | 84 |
839 | 979 | ஒரு நாளைக்கு 2 ஜிபி | 84 |
2999 | 3599 | ஒரு நாளைக்கு 2ஜிபி | 365 |
- செல்போன் ரீசார்ஜ் கட்டணம் 12-25% வரை உயர்த்தப்பட்டுள்ளது.
- ஜூலை 3ம் தேதி முதல் புதிய கட்டணங்கள் நடைமுறைக்கு வருகின்றன.
நாடு முழுவதும் செல்போன் கட்டணத்தை அதிரடியாக உயர்த்தி அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஜியோ நிறுவனம்.
மாதாந்திர ப்ளான், இரு மாதம், மும்மாதம் மற்றும் ஓராண்டு ப்ளான்களின் கட்டணங்களை உயர்த்தி ரிலையன்ஸ் ஜியோ அறிவித்துள்ளது.
ஜியோ நிறுவனம் 19 பிளான்களுக்கு கட்டண உயர்வை அறிவித்துள்ளது. அவற்றில் 17 ப்ரீபெய்ட் திட்டங்கள் மற்றும் இரண்டு போஸ்ட்பெய்ட் திட்டங்கள்.
அதன்படி, செல்போன் ரீசார்ஜ் கட்டணம் 12-25% வரை உயர்த்தப்பட்டுள்ளது.
ரூ.155ஆக இருந்த மாதாந்திர கட்டணத்தை ரூ.189ஆகவும், 28 நாள்களுக்கு ரூ.299 (2GB) என்ற மாதாந்திரக் கட்டணம் ரூ.349ஆகவும், ரூ.399 என்ற மாதாந்திரக் கட்டணம் ரூ.449ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
ஜியோவின் வரம்பற்ற 5ஜி திட்டம், வரும் ஜூலை 3ம் தேதி முதல் புதிய கட்டணங்கள் நடைமுறைக்கு வருகின்றன எனவும் ஜியோ அறிவித்துள்ளது.