என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    ரீசார்ஜ் கட்டணங்களை மீண்டும் உயர்த்த முடிவு? - வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
    X

    ரீசார்ஜ் கட்டணங்களை மீண்டும் உயர்த்த முடிவு? - வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

    • அடிப்படை ரீசார்ஜ் பிளான்களுக்கு 10 சதவீதமாகவும், மற்ற பிளான்களுக்கு 20 சதவீதமாகவும் கட்டண உயர்வு இருக்கலாம்.
    • டிசம்பர் மாதத்தில் கட்டண உயர்வு அமலுக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தியாவின் தனியார் தகவல் தொலைதொடர்பு நிறுவனங்களாக ஜியோ, ஏர்டெல், வி.ஐ. உள்ளன. இந்தநிலையில் அடுத்த மாதமான டிசம்பாில் அனைத்து தனியார் நிறுவனங்களும் தங்களுடைய செல்போன் சேவைக்கான ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    கடந்தாண்டு ஜூலையில் விலை உயர்த்தப்பட்டிருந்தநிலையில் 10 முதல் 12 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்த நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. அடிப்படை ரீசார்ஜ் பிளான்களுக்கு 10 சதவீதமாகவும், மற்ற பிளான்களுக்கு 20 சதவீதமாகவும் கட்டண உயர்வு இருக்கலாம்.



    மொபைல் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்த காரணம்: 5G சேவைகளுக்கான பராமரிப்பு செலவுகள் அதிகரித்துள்ளதால், நிறுவனங்கள் தங்கள் வருவாயை ஈடுகட்ட இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

    அமல்படுத்தப்படும் தேதி: டிசம்பர் மாதத்தில் கட்டண உயர்வு அமலுக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஏற்கனவே வாடிக்கையாளர்கள் கட்டண உயர்வு குறித்து கவலை தெரிவித்த நிலையில், இது அவர்களுக்கு மேலும் ஒரு சுமையாக இருக்கும்.

    Next Story
    ×