search icon
என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    வி
    X
    வி

    ரூ. 198 விலையில் சூப்பர் சலுகை அறிவித்த வோடபோன் ஐடியா

    • வோடபோன் ஐடியா நிறுவனம் இரண்டு புதிய பிரீபெயிட் சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
    • சமீபத்தில் வோடபோன் ஐடியா ரூ. 24 மற்றும் ரூ. 49 விலை கொண்ட சூப்பர் ஹவர் டேட்டா பேக் சலுகைகளை அறிவித்தது.

    வோடபோன் ஐடியா நிறுவனம் இந்திய சந்தையில் இரண்டு புதிய பிரீபெயிட் சலுகைகளை அறிவித்து இருக்கிறது. ரூ. 198 மற்றும் ரூ. 204 விலையில் கிடைக்கும் இரு சலுகைகளும் காம்போ / வேலிடிட்டி பிரிவில் நிலை நிறுத்தப்பட்டு உள்ளன. இரு சலுகைகளிலும் டாக்டைம் மற்றும் டேட்டா பலன்கள் வழங்கப்படுகின்றன.

    ரூ. 198 சலுகையில் ரூ. 198 மதிப்புள்ள டாக்டைம், அழைப்புகளை மேற்கொள்ள நொடிக்கு 2.5 பைசா வீதம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இத்துடன் 50 எம்பி வரையிலான டேட்டா வழங்கப்படுகிறது. இந்த சலுகையின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். இதே போன்று ரூ. 204 விலையில் கிடைக்கும் மற்றொரு ரிசார்ஜ் சலுகையில் இதே போன்ற பலன்கள் ஒரு மாத கால வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.

    தற்போதைக்கு இந்த சலுகைகள் மும்பை, குஜராத் மற்றும் டெல்லி பகுதிகளில் மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே உள்ள ரிசார்ஜ் சலுகை வேலிடிட்டி நிறைவு பெறுவதற்குள் ரிசார்ஜ் செய்யவில்லை எனில், இன்கமிங் அழைப்புகள் நிறுத்தப்படும். இதனை தவிர்க்க ஏதேனும் சலுகையில் ரிசார்ஜ் செய்வது அவசியம் ஆகும்.

    அதிக பலன்கள் இல்லை என்ற போதிலும் இந்த சலுகைகள் சிம் கார்டை ஆக்டிவேடட் நிலையில் வைத்திருக்க உதவும். மேலும் இன்கமிங் அழைப்புகளை தொடர்ந்து பெற முடியும். சமீபத்தில் தான் வோடபோன் ஐடியா நிறுவனம் ரூ. 24 மற்றும் ரூ. 49 விலை கொண்ட சூப்பர் ஹவர் டேட்டா பேக் சலுகைகளை அறிவித்து இருந்தது.

    Next Story
    ×