ஒரே ரிசார்ஜ்.. ஒரு வருட ஒ.டி.டி. சந்தா இலவசம் - வோடபோன் ஐடியா அசத்தல்

சந்தாவின் கீழ் இலவசமாகவே பயன்படுத்த முடியும். பிரீபெயிம் சலுகையை பெற விரும்புவோர் ரூ. 999 செலுத்த வேண்டும்.
ஒரே ரிசார்ஜ்.. ஒரு வருட ஒ.டி.டி. சந்தா இலவசம் - வோடபோன் ஐடியா அசத்தல்
Published on

ஒ.டி.டி. சந்தாவுடன் கூடிய பிரீபெயிட் சலுகைகளை வோடபோன் ஐடியா நிறுவனம் வழங்கி வருகிறது. அந்த வகையில், சோனி லிவ் உடன் வி நிறுவனம் இணைந்து இருக்கிறது. இதன் மூலம் பயனர்கள் விளையாட்டு, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்களை கண்டுகளிக்க முடியும்.

வி நிறுவனம் கூட்டணி அமைத்து இருப்பதன் மூலம் பயனர்கள் சோனிலிவ் மொபைல் சந்தாவின் கீழ் இவற்றை இலவசமாகவே பயன்படுத்த முடியும். இதே சேவைகளை ஒரு வருடத்திற்கு பெற விரும்புவோர் ரூ. 599 மற்றும் பிரீபெயிம் சலுகையை பெற விரும்புவோர் ரூ. 999 செலுத்த வேண்டும்.

கோப்புப்படம் 
கோப்புப்படம் 

கோப்புப்படம் 

அந்த வகையில் இந்த பலன்களுக்கு தனியே செலவழிக்க விரும்பாதவர்கள் வி நிறுவனத்தின் ரூ. 698 சலுகையை பயன்படுத்திக் கொள்ளலாம். வி ரூ. 698 சலுகையில் 10 ஜி.பி. வரையிலான டேட்டா, 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. டேட்டா பலன்களை பயன்படுத்துவதற்கு பயனர்கள் வேறு ஏதேனும் பிரீபெயிட் சலுகையை ரிசார்ஜ் செய்திருப்பது அவசியம் ஆகும்.

ஏற்கனவே குறிப்பிட்டதை போன்றே இந்த சலுகையுடன் ஒரு வருடத்திற்கான சோனிலிவ் மொபைல் சந்தா வழங்கப்படுகிறது. இதில் ஒ.டி.டி. சந்தா மட்டுமின்றி 28 நாட்களுக்கு 10 ஜி.பி. வரையிலான டேட்டாவும் வழங்கப்படுகிறது. இதை கொண்டு நிகழ்ச்சிகளை அதிக தரத்தில் கண்டுகளிக்க முடியும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com