ஓடிடி சந்தா வழங்கும் வோடபோன் ஐடியாவின் புது சலுகை

புது சலுகை பல்வேறு பலன்களை வழங்குகிறது. இந்த சலுகை போஸ்ட்பெயிட் பயனர்களுக்காக வழங்கப்படுகிறது.
வி
வி
Published on

வோடபோன் ஐடியா நிறுவனம் தனது போஸ்ட்பெயிட் பயனர்களுக்காக புதிய சலுகையை அறிவித்து இருக்கிறது. இந்த சலுகை பயனர்களுக்கு சீரான கனெக்டிவிட்டி, ஓடிடி சந்தா என பல்வேறு பலன்களை வழங்குகிறது.

ரூ. 1201 விலையில் கிடைக்கும் வோடபோன் ரெட்எக்ஸ் சலுகையில் நெட்ப்ளிக்ஸ், அமேசான் பிரைம், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், சோனிலிவ் மற்றும் சன் நெக்ஸ்ட் என ஐந்து ஓடிடி தளங்களுக்கான சந்தா வழங்கப்படுகிறது.

இத்துடன் ஸ்விக்கி ஒன் சந்தா, ரூ. 2999 மதிப்புள்ள சர்வதேச ரோமிங் பேக், 12 மாதங்களுக்கு நார்டான் மொபைல் செக்யூரிட்டி சேவை மற்றும் வோடபோன் ஐடியாவின் பிரீமியம் வாடிக்கையாளர் சேவை மைய வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

புதிய ரெட்எக்ஸ் சலுகையை தேர்வு செய்வோர் ஆறு மாதங்களுக்குள் வேறு சலுகையை தேர்வு செய்யும் பட்சத்தில் ரூ. 3 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். எனினும், பயனர்கள் பழைய ரெட்எக்ஸ் சலுகையில் இருந்து புதிய சலுகையை பயன்படுத்த எவ்வித கூடுதல் கட்டணமும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com