என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "honda"

    • எலிவேட் ADV மாடலில் 1.5 லிட்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
    • லேன்-கீப் அசிஸ்ட், அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல் மற்றும் பல வசதிகள் உள்ளன.

    ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் எலிவேட் மாடலின் புதிய டாப் எண்ட் மாடலை அறிமுகம் செய்துள்ளது. எலிவேட் ADV என்று அழைக்கப்படும் புதிய வேரியண்ட் ஸ்போர்ட் தோற்றத்தையும், தனித்துவமான காஸ்மெடிக் மாற்றங்களை கொண்டிருக்கிறது.

    இந்திய சந்தையில் புதிய எலிவேட் மாடலின் மேனுவல் டிரான்ஸ்மிஷன் விலை ரூ. 15.29 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என தொடங்குகிறது. இதன் CVT டூயல்-டோன் மாடன் விலை ரூ. 16.66 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    புதிய ADV மாடல் கிளாஸ் பிளாக் ஆல்பா-போல்ட் பிளஸ் முன்பக்க கிரில், ஆரஞ்சு நிறத்தில் அலங்கரிக்கப்பட்ட ஹூட் டெக்கல், ORVMகள் மற்றும் ஆரஞ்சு சிறப்பம்சங்களுடன் பிளாக் அலாய் வீல்கள் என பிரத்யேக ஸ்டைலிங் அப்டேட்களுடன் வருகிறது. இத்துடன் ADV பேட்ஜ்கள், ஆரஞ்சு ஃபாக் லைட் மற்றும் ஆரஞ்சு நிற அக்சென்ட்களுடன் கூடிய பின்புற பம்பர் ஸ்கிட் பிளேட் வழங்கப்படுகின்றன.

    எலிவேட் ADV மாடலில் 1.5 லிட்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 7-ஸ்பீடு CVT ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் பேடில் ஷிஃப்டர்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.



    பாதுகாப்பு அம்சங்களில், எலிவேட் ADV மாடலில் ஹோண்டா சென்சிங் ADAS பொருத்தப்பட்டுள்ளது. இதில் லேன்-கீப் அசிஸ்ட், அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல் மற்றும் பல வசதிகள் உள்ளன. நிலையான பாதுகாப்பு அம்சங்களில் ஆறு ஏர்பேக்குகள், லேன் வாட்ச் கேமரா, ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், வெஹிகில் ஸ்டேபிலிட்டி கண்ட்ரோல் மற்றும் ISOFIX மவுண்ட் ஆகியவை அடங்கும்.

    எலிவேட் ADV மாடல், மீடியோராய்டு கிரே மெட்டாலிக் மற்றும் லூனார் சில்வர் மெட்டாலிக் நிறங்களில், சிங்கில் டோன் மற்றும் டூயல்-டோன் நிறங்களில் கிடைக்கிறது.

    • ஹோண்டா ADV 350 மாடல் 330 சிசி SOHC 4-வால்வுகள் கொண்ட எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது.
    • பிரேக்கிங்கிற்கு முன்பக்கத்தில் 256mm டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 240mm டிஸ்க் வழங்கப்பட்டுள்ளது.

    ஹோண்டா நிறுவனம் ADV 350-இன் புதிய மாடலை ஐரோப்பாவில் வெளியிட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் முதன்முதலில் 2022 ஆம் ஆண்டு ஐரோப்பிய சந்தைக்கு வந்தது. புதிய அப்டேட் செய்த பிறகும் இந்த மாடலின் இயந்திர மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் அப்படியே உள்ளன. இருப்பினும், ADV 350 இப்போது மூன்று புதிய வண்ணங்கள் மற்றும் புதுப்பிக்கப்பட்ட கிராபிக்ஸ் உடன் வருகிறது.

    ஹோண்டா ADV 350 மாடல் 330 சிசி SOHC 4-வால்வுகள் கொண்ட எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இது 30 hp பவர் மற்றும் 31.5 Nm நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த ஸ்கூட்டரின் பவர் யூனிட் ஒரு அண்டர்போன் சேஸிக்குள் அமர்ந்திருக்கிறது. இது USD முன்பக்க ஃபோர்க்குகள் மற்றும் டூயல் ஷாக் அப்சார்பர்களை கொண்டிருக்கிறது.



    பிரேக்கிங்கிற்கு முன்பக்கத்தில் 256mm டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 240mm டிஸ்க் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் முன்புறத்தில் 15-இன்ச் சக்கரம் பின்புறம் 14-இன்ச் சக்கரத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. மேக்ஸி ஸ்கூட்டரில் 11.7 லிட்டர் ஃபியூவல் டேன்க் உள்ளது.

    அப்டேட் செய்யப்பட்ட ஹோண்டா ADV 350 பிரீ-லோடு அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஸ்பிரிங்ஸ், ஹோண்டா ரோட்-சின்க் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டியுடன் 5-இன்ச் TFT ஸ்கிரீன், மற்றும் ஆட்டோ-கேன்சலிங் இண்டிகேட்டர்கள் போன்ற அம்சங்களைப் பெற்றுள்ளது.

    • பைக் 217 கிலோ எடையைக் கொண்டுள்ளது. இது மிகவும் கனமாக உள்ளது.
    • இந்த பைக்கில் முழுமையாக LED விளக்குகள் வழங்கப்பட்டுள்ளன.

    ஹோண்டா நிறுவனம் ஒருவழியாக தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் மோட்டார்சைக்கிளை வெளியிட்டுள்ளது. புதிய எலெக்ட்ரிக் பைக் WN7 என்று அழைக்கப்படுகிறது. இந்த மோட்டார்சைக்கிள் சில மாதங்களில் விற்பனைக்கு வரும்.

    பெயரில் உள்ள 'W' என்பது கான்செப்ட்-ஐ குறிக்கிறது, மேலும் 'N' என்பது 'நேக்கட்' என்பதைக் குறிக்கிறது. 7 என்ற எண் அது சேர்ந்த திறனை குறிக்கிறது. இந்த பைக் ஒரு முறை சார்ஜ் செய்தால் சுமார் 130 கிலோமீட்டர்கள் வரை செல்லும். இதில் உள்ள ஃபாஸ்ட் சார்ஜிங் மூலம் பைக்கின் பேட்டரியை வெறும் 30 நிமிடங்களில் 20 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் ஏற்ற முடியும். 6kVA சார்ஜரின் உதவியுடன், இந்த எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை 3 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்ய முடியும்.

    பவர்டிரெயினைப் பொறுத்தவரை, இது 18kW லிக்விட்-கூல்டு மோட்டாரை பெறுகிறது. இது 600cc ICE மோட்டார்சைக்கிளின் சக்தியை வழங்க முடியும் என்று நிறுவனம் கூறுகிறது. இந்த பைக் 217 கிலோ எடையைக் கொண்டுள்ளது. இது மிகவும் கனமாக உள்ளது.

    ஹோண்டா இந்த பைக்கில் 5-இன்ச் ஃபுல் கலலர் TFT ஸ்கிரீனை பொருத்தியுள்ளது. இது ஒருங்கிணைந்த RoadSync இணைப்புடன் வருகிறது. இந்த பைக்கில் முழுமையாக LED விளக்குகள் வழங்கப்பட்டுள்ளன.

    ஹோண்டா WN7 முதலில் இங்கிலாந்தில் GBP 12,999 (இந்திய மதிப்பில் ரூ. 15.5 லட்சம்) விலையில் விற்பனைக்கு வருகிறது. இதைத் தொடர்ந்து மற்ற ஐரோப்பிய நாடுகளிலும் இந்த பைக் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

    • புதிய ஹோண்டா பைக்கில் 999cc இன்லைன் 4-சிலிண்டர் மோட்டார் உள்ளது.
    • இந்த யூனிட் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

    ஹோண்டாவின் முதன்மை ஸ்போர்ட் பைக் CBR1000RR-R இந்திய சந்தையில் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் டாப் எண்ட் வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கிறது. இதன் விலை ரூ. 28.99 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய மாடலின் விலையை விட சுமார் ரூ. 2.23 லட்சம் விலை அதிகம் ஆகும். இந்த பைக் புதுப்பிக்கப்பட்ட பாடிவொர்க் மற்றும் திருத்தப்பட்ட வன்பொருளைப் பெறுகிறது.

    இந்த பைக்கின் முன்பக்க அமைப்பு அதன் முந்தைய மாடலை போலவே உள்ளது. இந்த பைக்கின் ஃபேரிங்கில் புதிதாக ஏரோடைனமிக் விங்லெட்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை பைக் அதிவேகத்தில் செல்லும் போது டவுன்ஃபோர்ஸ் அதிகப்படுத்துகிறது.

    புதிய ஹோண்டா பைக்கில் 999cc இன்லைன் 4-சிலிண்டர் மோட்டார் உள்ளது. இது 14,000rpm-இல் 214.5bhp பவர் மற்றும் 12,000rpm இல் 113Nm டார்க் உருவாக்குகிறது. இந்த செயல்திறன் முந்தைய மாடலைப் போலவே உள்ளன. இந்த யூனிட் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பை-டைரக்ஷனல் குயிக்ஷிஃப்டர் மற்றும் அக்ரபோவிக் டைட்டானியம் எக்சாஸ்ட் உள்ளது.



    சஸ்பென்ஷனுக்கு ஒலின்ஸ் யுஎஸ்டி முன்புற ஃபோர்க்குகள் மற்றும் பின்புற மோனோஷாக் மூலம் இயக்கப்படுகிறது. இரண்டும் மின்னணு முறையில் சரிசெய்யக்கூடியவை. பிரேக்கிங்கிற்கு முன்புறத்தில் டூயல் 330mm டிஸ்க், பின்புறத்தில் 220mm ஒற்றை டிஸ்க் பெற்றிருக்கிறது.

    எலெக்ட்ரானிக்ஸ்-ஐ பொருத்தவரை 5 லெவல் பவர் மோட்கள், 9 லெவல் டிராக்ஷன் கண்ட்ரோல், 3-லெவல் எஞ்சின் பிரேக் கண்ட்ரோல், வீலி கண்ட்ரோல், ஏபிஎஸ் வழங்கப்பட்டுள்ளன.

    • ஹோண்டா CB125 ஹார்னெட் 123.94 cc, 4-ஸ்ட்ரோக், SI எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது.
    • ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R 5-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைந்து செயல்படும் 124.7cc எஞ்சினுடன் பொருத்தப்பட்டுள்ளது.

    ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் ஹோண்டா CB125 ஹார்னெட் மாடலை வெளியிட்டது. புதிய CB125 ஹார்னெட் விலை விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், இது ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R போன்றவற்றுடன் போட்டியிடும். இது இதேபோன்ற விலையை குறிக்கிறது.

    ஹோண்டா CB125 ஹார்னெட் Vs ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R: எஞ்சின்

    ஹோண்டா CB125 ஹார்னெட் 123.94 cc, 4-ஸ்ட்ரோக், SI எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இது 5-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது முறையே 7500 rpm இல் 11hp பவர் மற்றும் 6000 rpm இல் 11.2 Nm டார்க் வழங்கும் திறன் கொண்டது.

    ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R 5-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைந்து செயல்படும் 124.7cc எஞ்சினுடன் பொருத்தப்பட்டுள்ளது. இது 8,250rpm இல் 11.24 hp பவர் மற்றும் 6,500rpm இல் 10.5Nm டார்க் வெளியேற்றும் திறன் கொண்டது.

    ஹோண்டா CB125 ஹார்னெட் Vs ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R: அம்சங்கள்

    ஹோண்டா CB125 ஹார்னெட், LED DRLகள் மற்றும் உயரத்தில்-மவுண்ட் செய்யப்பட்ட LED டர்ன் இண்டிகேட்டர்களுடன் கூடிய சிக்னேச்சர் ட்வின்-LED ஹெட்லேம்ப், ப்ளூடூத் இணைப்பு மற்றும் ஹோண்டா ரோட்-சின்க் ஆப் வசதியுடன் கூடிய 4.2-இன்ச் TFT டிஸ்ப்ளே மற்றும் USB டைப்-சி சார்ஜிங் போர்ட் உள்ளிட்ட அனைத்து-LED லைட்டிங் அமைப்பு போன்ற அம்சங்களைப் பெறுகிறது. கூடுதல் பாதுகாப்பிற்காக இது எஞ்சின் ஸ்டாப் சுவிட்ச் & எஞ்சின் இன்ஹிபிட்டருடன் கூடிய சைட்-ஸ்டாண்ட் இண்டிகேட்டருடன் பொருத்தப்பட்டுள்ளது.

    ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R பைக்கில், எல்இடி ஹெட்லேம்ப், எல்இடி டெயில்லேம்ப் மற்றும் எல்இடி பிளிங்கர்கள் என பல அம்சங்கள் உள்ளன. ப்ளூடூத் இணைப்பு ஆப்ஷனுடன் கூடிய எளிய டிஜிட்டல் கிளஸ்டரைக் கொண்டுள்ளது மற்றும் பாதுகாப்பிற்காக இந்த பிரிவில் முதல் முறையாக சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் வழங்குகிறது.



    ஹோண்டா CB125 ஹார்னெட் Vs ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R: வன்பொருள்

    ஹோண்டா CB125 ஹார்னெட், பிரிவில் முதல் முறையாக கோல்டன் USD முன்புற ஃபோர்க்குகளையும், 5-ஸ்டெப் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய மோனோ-ஷாக் அப்சார்பரை பெறுகிறது. பிரேக்கிங்கிற்கு முன்புறத்தில் 240மில்லிமீட்டர் பெட்டல் டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 130மில்லிமீட்டர் டிரம் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R முன்பக்கத்தில் 37 மிமீ விட்டம் கொண்ட ஃபோர்க்குகளையும், பின்புறத்தில் ஹைட்ராலிக் மோனோஷாக் சஸ்பென்ஷனையும் கொண்டுள்ளது. நிலையான பிரேக்கிங்கிற்காக முன்புறத்தில் 240 மில்லிமீட்டர் டிரம் மற்றும் பின்புறத்தில் 130 மில்லிமீட்டர் டிரம் ஆகியவற்றைப் பெறுகிறது.

    ஹோண்டா CB125 ஹார்னெட் Vs ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R: விலை

    ஹோண்டா CB125 ஹார்னெட்டின் விலைகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை, அதற்காக ஆகஸ்ட் 1 ஆம் தேதி வரை காத்திருக்க வேண்டும். இருப்பினும், ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R மூன்று வேரியண்ட்களை கொண்டுள்ளது. இது ரூ.98,000 (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் கிடைக்கிறது.

    • ஹோண்டா ஆக்டிவா இ மாடலில் பேட்டரி மாற்றும் அமைப்பு மூலம் சார்ஜிங் வசதி உள்ளது.
    • ஐரோப்பிய சந்தையில் விற்கப்படும் ஹோண்டா CUV இந்தியாவில் கிடைக்கும் ஆக்டிவா இ மாடலை போலவே உள்ளது.

    ஹோண்டா நிறுவனம், பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 நிகழ்வில் ஆக்டிவா இ மாடலை ரூ. 1.17 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் அறிமுகம் செய்தது. இந்தியாவில் மின்சார இருசக்கர வாகன சந்தை வளர்ந்து வந்தாலும், நாட்டில் இன்னும் உள்கட்டமைப்பு பற்றாக்குறை உள்ளது. ஹோண்டா ஆக்டிவா இ மாடலில் பேட்டரி மாற்றும் அமைப்பு மூலம் சார்ஜிங் வசதி உள்ளது.

    தற்போது வெளியாகி இருக்கும் அறிக்கைகளின்படி, ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் ஆக்டிவா இ மாடலுக்கு சார்ஜிங் டாக் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. சார்ஜிங் டாக் மூலம் பயனர்கள் வீட்டிலேயே மின்சார ஸ்கூட்டரை சார்ஜ் செய்யலாம். ஹோண்டா நிறுவனம் ஏற்கனவே ஐரோப்பா போன்ற பிற நாடுகளில் இந்த அமைப்பை வழங்கி வரும் நிலையில், இந்த வசதி விரைவில் இந்தியாவிலும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தியாவில் ஏராளமான மின்சார இரு சக்கர வாகன ஆப்ஷன்கள் கிடைப்பதால், பயனர்கள் இப்போது ரேஞ்ச் மற்றும் பிற அம்சங்களில் கவனம் செலுத்துவதோடு மட்டுமல்லாமல், சார்ஜிங் மற்றும் சேவைக்கான செலவு போன்ற முக்கிய காரணிகளையும் கருத்தில் கொள்கிறார்கள்.

    ஐரோப்பிய சந்தையில் விற்கப்படும் ஹோண்டா CUV இந்தியாவில் கிடைக்கும் ஆக்டிவா இ மாடலை போலவே உள்ளது. இருப்பினும், CUV:e 270W டாக் சார்ஜரைப் பெறுகிறது. இதை கொண்டு பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய 6 மணி நேரம் ஆகும்.

    • எஞ்சின் வலுவான அடிப்பகுதியுடன், டார்க் நிறைந்த செயல்திறனை வழங்குகிறது.
    • வடிவமைப்பு ரிலாக்ஸ்டு எர்கானமிக்ஸ் மற்றும் 690 மிமீ குறைந்த இருக்கை உயரம் கொண்ட ரெட்ரோ-க்ரூஸரின் வடிவமைப்பாகும்.

    ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் இந்தியாவில் புதிதாக அறிமுகம் செய்த ரெபெல் 500 மற்றும் எக்ஸ்-ஏடிவி (X-ADV) ஆகியவற்றின் விநியோகங்களைத் தொடங்கியுள்ளது. இரண்டு மாடல்களும் ஹோண்டாவின் பிக்-விங் டாப்லைன் டீலர்ஷிப்களில் விற்பனைக்கு கிடைக்கின்றன.

    இந்தியாவில் உள்ள பிக்-விங் டீலர்ஷிப்களில் எக்ஸ்-ஏடிவி விற்பனைக்கு வந்தாலும், ரெபெல் 500 டெல்லி என்சிஆர், பெங்களூரு மற்றும் மும்பையில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கிறது. ஹோண்டா ரெபெல் 500 ரூ. 5.12 லட்சத்தில் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் மேட் பிளாக் மெட்டாலிக் என்ற ஒரே ஒரு நிறத்தில் மட்டுமே கிடைக்கிறது.

    ரெபெல் 500 பைக்கில் 471 சிசி லிக்விட்-கூல்டு பேரலல் ட்வின்-சிலிண்டர் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இது 8,500 ஆர்பிஎம்மில் 45.6 ஹெச்பி பவரையும், 6,000 ஆர்பிஎம்மில் 43.3 என்எம் பீக் டார்க்கையும் உருவாக்குகிறது. இந்த எஞ்சின் 6-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் வலுவான அடிப்பகுதியுடன், டார்க் நிறைந்த செயல்திறனை வழங்குகிறது. இந்த வடிவமைப்பு ரிலாக்ஸ்டு எர்கானமிக்ஸ் மற்றும் 690 மிமீ குறைந்த இருக்கை உயரம் கொண்ட ரெட்ரோ-க்ரூஸரின் வடிவமைப்பாகும்.



    மறுபுறம், ஹோண்டா எக்ஸ்-ஏடிவி ரூ. 11.91 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் கிடைக்கிறது. இதன் விலை மிகவும் அதிகமாக உள்ளது. ஹோண்டா எக்ஸ்-ஏடிவி 745 சிசி லிக்விட் கூல்டு பேரலல்-ட்வின் எஞ்சினைப் பெறுகிறது. இந்த யூனிட் 6,750 ஆர்பிஎம்மில் 57 hp பவரையும் 4,750 rpm இல் 69 என்எம் அதிகபட்ச டார்க்கை உற்பத்தி செய்கிறது.

    புதிய எக்ஸ்-ஏடிவி ஆனது யுஎஸ்பி டைப்-சி சார்ஜிங் போர்ட், 5-இன்ச் முழு-வண்ண TFT டிஸ்ப்ளே போன்ற அம்சங்களை கொண்டுள்ளது. மேலும், ஹோண்டா ரோட்சின்க் ஆப் கனெக்ட், ரைடர்களுக்கு அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் எச்சரிக்கைகளைப் பெறவும், டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் அணுகவும், வாய்ஸ் கண்ட்ரோல் வசதியையும் வழங்குகிறது.

    இது ரைடு-பை-வயர் தொழில்நுட்பம், நான்கு ரைடு மோட்கள்- ஸ்டாண்டர்ட், ஸ்போர்ட், ரெயின் மற்றும் கிராவெல் பெறுகிறது. மாறுபட்ட சாலை நிலைமைகளில் உகந்த இழுவைக்காக ஹோண்டா செலக்டபில் டார்க் கண்ட்ரோல் (HSTC) மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் சிஸ்டத்தையும் பெறுகிறது. ஹோண்டா நிறுவனம் தனது எக்ஸ்-ஏடிவி மாடலை- கிராஃபைட் பிளாக் மற்றும் பேர்ல் கிளேர் வைட் என இரண்டு வண்ணங்களில் வழங்குகிறது.

    • ஹோண்டா CB1000 ஹார்னெட் SP 5-இன்ச் வண்ண TFT டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது.
    • ஸ்டாண்டர்ட், ஸ்போர்ட், ரெயின் ஆகிய நான்கு ரைட் மோட்கள் மற்றும் இரண்டு கஸ்டமைஸ் செய்யக்கூடிய மோட்களை வழங்குகிறது.

    ஹோண்டா நிறுவனம் CB1000 ஹார்னெட் SP-ஐ கடந்த 23-ந்தேதி அறிமுகம் செய்தது. அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்தே CB1000 ஹார்னெட் SP, கவாசாகி Z900 போன்ற மாடலுடன் போட்டியிடுகிறது. அதன் விவங்களை பார்ப்போம்.

    ஹோண்டா CB1000 ஹார்னெட் SP Vs கவாசாகி Z900: பவர்டிரெய்ன்

    ஹோண்டா CB1000 ஹார்னெட் SP, 999 cc இன்லைன் 4, லிக்விட்-கூல்டு எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இது 155 hp பவர் மற்றும் 107 Nm டார்க்-ஐ வெளிப்படுத்துகிறது. இது 6-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

    கவாசாகி Z900 948 சிசி, இன்லைன் 4, லிக்விட்-கூல்டு எஞ்சினைக் கொண்டுள்ளது. இது 125 hp பவர் மற்றும் 98.6 Nm டார்க்-ஐ வெளிப்படுத்துகிறது. இந்த எஞ்சின் 6-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.



    ஹோண்டா CB1000 ஹார்னெட் SP Vs கவாசாகி Z900: அம்சங்கள்

    ஹோண்டா CB1000 ஹார்னெட் SP 5-இன்ச் வண்ண TFT டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இது ஹோண்டா ரோட்-சின்க் செயலி வழியாக ஸ்மார்ட்போன் இணைப்பை வழங்குகிறது. இது ஸ்டாண்டர்ட், ஸ்போர்ட், ரெயின் ஆகிய நான்கு ரைட் மோட்கள் மற்றும் இரண்டு கஸ்டமைஸ் செய்யக்கூடிய மோட்களை வழங்குகிறது. இந்த பைக்கில் முழு LED லைட்கள் மற்றும் டிராக்ஷன் கண்ட்ரோல் மற்றும் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய எஞ்சின் பிரேக்கிங் வசதிகளும் உள்ளன.

    இதேபோல், கவாசாகி Z900, கவாசாகி RIDEOLOGY செயலி மூலம் ஸ்மார்ட்போன் இணைப்புடன் கூடிய 5-இன்ச் TFT டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இது பல ரைட் மோட்கள், அட்ஜஸ்ட் செய்யக்கூடிய பவர் மோட்கள் மற்றும் பாதுகாப்பான சவாரிகளுக்கான டிராக்ஷன் கண்ட்ரோல் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஹோண்டாவைப் போலவே, இது முழு LED விளக்குகளையும் கொண்டுள்ளது மற்றும் புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த ரைடர்களுக்கு ஏற்ற தொழில்நுட்பத்தை வழங்குகிறது.

    ஹோண்டா CB1000 ஹார்னெட் SP Vs கவாசாகி Z900: பரிமாணங்கள்

    இரண்டு பைக்குகளும் 1,455 மிமீ வீல்பேஸைக் கொண்டுள்ளன. இதனால் அவை சாலையில் நிலையானதாக இருக்கும். ஹோண்டா CB1000 ஹார்னெட் SP இன் இருக்கை உயரம் 810 மிமீ ஆகும், இது கவாசாகி Z900-ஐ விட சற்று உயரமானது, 800 மிமீ அளவிடும். இரண்டு பைக்குகளும் சுமார் 212 கிலோ எடையும் 17 லிட்டர் பெட்ரோல் டேன்க் கொண்டுள்ளது.

    ஹோண்டா CB1000 ஹார்னெட் SP Vs கவாசாகி Z900: விலை

    ஹோண்டா ஹார்னெட் CB100 விலை ரூ.12.36 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்), கவாசாகி Z900 விலை ரூ.9.38 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்).

    • உலகளவில் 37 ஆலைகளிலிருந்து 50 கோடி இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்துள்ளது.
    • 50 கோடியாவது வாகனமாக 110cc ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் உற்பத்தி செய்யப்பட்டது.

    ஹோண்டா மோட்டார் நிறுவனம் 1949ம் ஆண்டு முதல் இருசக்கர வாகனங்களின் உலகளாவிய உற்பத்தியில் 50 கோடி (500 மில்லியன்) யூனிட்களை எட்டி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

    ஹோண்டா நிறுவனம், உலகளவில் 23 நாடுகளில் உள்ள 37 ஆலைகளிலிருந்து 50 கோடி இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்துள்ளது. இந்த மைல்கல் 2025 மே மாதத்தில் அறிவிக்கப்பட்டது.

    குஜராத்தில் உள்ள வித்தலாபூர் ஆலையில் இந்த 50 கோடியாவது வாகனமாக 110cc ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் உற்பத்தி செய்யப்பட்டது. இந்த சாதனைக்கு இந்தியாவின் பங்கு மிக முக்கியமானது.

    இந்தியாவில் ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா (HMSI) 7 கோடி (70 மில்லியன்) யூனிட்களை உற்பத்தி செய்து, உலகளவில் ஹோண்டாவின் மிகப்பெரிய உற்பத்தி மையமாக விளங்குகிறது.

    குஜராத்தில் உள்ள வித்தலாபூர் ஆலை உலகின் மிகப்பெரிய ஸ்கூட்டர் உற்பத்தி மையமாகவும், 2027ஆம் ஆண்டுக்குள் ஆண்டுக்கு 26.1 லட்சம் யூனிட்கள் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட உலகின் மிகப்பெரிய ஹோண்டா இருசக்கர வாகன ஆலையாகவும் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்காக ஹோண்டா ரூ.920 கோடி முதலீடு செய்து 4வது உற்பத்தி ஆலையை அமைக்கிறது. இது கூடுதலாக 6.5 லட்சம் யூனிட்களை உற்பத்தி செய்யும்.

    இந்தியாவில் 2001ம் ஆண்டு ஆக்டிவா ஸ்கூட்டருடன் தனது பயணத்தைத் தொடங்கிய ஹோண்டா, 6 கோடி உள்நாட்டு விற்பனையை எட்டியுள்ளது.

    இந்த சாதனை, இந்தியாவின் இருசக்கர வாகன சந்தையில் ஹோண்டாவின் ஆதிக்கத்தையும், உலகளாவிய உற்பத்தியில் இந்தியாவின் முக்கிய பங்கையும் வெளிப்படுத்துகிறது.

    • ஜூன் மாதத்தில் இந்த மாடல் பைக்கின் டெலிவரி தொடங்கும்
    • இந்த பைக்கில் 6-ஸ்பீடு கியர் பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

    ஹோண்டா மோட்டார் சைக்கிள் இந்திய நிறுவனம் ஹோண்டா CB 750 ஹார்னெட் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த மாடல் ரூ.8.59 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் ஹோண்டாவின் உரிமம் பெற்ற டீலர்ஷிப்களில் இந்த மாடல் கிடைக்கிறது.

    ஹோண்டா CB 750 ஹார்னெட் மாடல் ஒரு வலுவான 775cc, குளிர்விக்கப்பட்ட 2 சிலிண்டர் எஞ்சினுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 9500 rpm இல் அதிகபட்சமாக 90.5 bhp சக்தியையும் 7,250 rpm இல் 75 Nm உச்ச முறுக்குவிசையையும் உருவாக்குகிறது. இத்துடன் 6-ஸ்பீடு கியர் பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

    ஜூன் மாதத்தில் இந்த மாடல் பைக்கின் டெலிவரி தொடங்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

    • CB 1000 ஹார்னெட் SP உறுதியான ஸ்டீல் ஃபிரேம் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.
    • முன்புறத்தில் ஷோவா SFF-BP ஃபோர்க்குடன் பொருத்தப்பட்டுள்ளது.

    ஹோண்டா மோட்டார் சைக்கிள் இந்திய நிறுவனம் ஹோண்டா CB 1000 ஹார்னெட் SP மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த மாடல் ரூ. 12.35 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் ஹோண்டாவின் உரிமம் பெற்ற டீலர்ஷிப்களில் இந்த மாடல் கிடைக்கிறது.

    ஹோண்டா CB 1000 ஹார்னெட் SP மாடல் ஒரு வலுவான 999cc, இன்லைன்-நான்கு சிலிண்டர் எஞ்சினுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 11,000rpm இல் அதிகபட்சமாக 155bhp சக்தியையும் 9,000rpm இல் 107Nm உச்ச முறுக்குவிசையையும் உருவாக்குகிறது. இத்துடன் 6-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டுள்ளது.

    வடிவமைப்பு ரீதியாக இந்த மாடல் ஆக்ரோஷமாக காட்சியளிக்கிறது. ஹோண்டா CB 1000 ஹார்னெட் SP ரேசிங்கிற்கு உண்டான ஹெட்லைட் அமைப்பை பெற்றுள்ளது. ஒருங்கிணைந்த DRLகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் LED டர்ன் இண்டிகேட்டர்கள் ஹெட்லைட் அலகுக்கு மேலே வைக்கப்பட்டுள்ளன. டெயில் பகுதி கூர்மையாக உள்ளது.

    CB 1000 ஹார்னெட் SP உறுதியான ஸ்டீல் ஃபிரேம் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. இது முன்புறத்தில் ஷோவா SFF-BP ஃபோர்க்குடன் பொருத்தப்பட்டுள்ளது. பின்புறம் ஆலின்ஸ் TTX36 மோனோஷாக் கொண்டிருக்கிறது. இந்த பைக் ஸ்டைலான அலாய் வீல்களில் இயங்குகிறது. டியூப்லெஸ் டயர்களை கொண்டிருக்கிறது. பிரேக்கிங்கிற்கு முன்புறத்தில் இரட்டை டிஸ்க்குகள் மற்றும் பின்புறத்தில் ஒரு ஒற்றை டிஸ்க் வழங்கப்பட்டு இருக்கிறது.

    • ஹோண்டா X-ADV மாடலில் முன்புறம் 17 இன்ச், பின்புறம் 15 இன்ச் ஸ்போக் வீல் பொருத்தப்பட்டுள்ளன.
    • இரட்டை LED ஹெட்லைட்கள் மற்றும் DRL கொண்டிருக்கிறது.

    ஹோண்டா மோட்டார்சைக்கிள்ஸ் அண்ட் ஸ்கூட்டர்ஸ் இந்தியா நிறுவனம் தற்போது இந்தியாவில் X-ADV மேக்ஸி ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மேக்ஸி ஸ்கூட்டர் ஒரு அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளின் கரடுமுரடான உணர்வையும் மேக்ஸி-ஸ்கூட்டரின் நடைமுறைத் தன்மையையும் கலந்து வடிவமைக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.

    ஹோண்டா பிக்விங் டீலர்ஷிப்களில் X-ADV மேக்ஸி ஸ்கூட்டருக்கான முன்பதிவுகளையும் ஹோண்டா தொடங்கியுள்ளது. மேலும் ஜூன் மாதம் முதல் இந்த பைக்கிற்கான டெலிவரி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

    ஹோண்டா X-ADV: எஞ்சின் மற்றும் பவர்டிரெயின்

    ஹோண்டா X-ADV மாடலில் 745cc லிக்விட் கூல்டு SOHC 8-வால்வு பேரலல்-ட்வின் எஞ்சினைப் பெறுகிறது. மேலும் இது 6,750 RPM இல் 57 hp பவர் மற்றும் 4,750 RPM இல் 69 Nm டார்க்-ஐ உற்பத்தி செய்கிறது.

    ஹோண்டா X-ADV: வடிவமைப்பு மற்றும் வன்பொருள்

    அட்வென்ச்சர் மாடலுக்கு ஏற்ற வகையில் புதிய X-ADV இன் ஒட்டுமொத்த வடிவமைப்பில் ஹோண்டா கவனம் செலுத்தியுள்ளது. இது இரட்டை LED ஹெட்லைட்கள் மற்றும் DRL கொண்டிருக்கிறது.

    ஹோண்டா X-ADV மாடலில் முன்புறம் 17 இன்ச், பின்புறம் 15 இன்ச் ஸ்போக் வீல் பொருத்தப்பட்டுள்ளன. முன்புறத்தில் 41 மிமீ USD ஃபோர்க்குகளும், பின்புறத்தில் ஸ்பிரிங் ப்ரீலோட் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய மோனோஷாக் அசெம்பிளி கொண்ட சஸ்பென்ஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. பிரேக்கிங் அமைப்பில் முன்புறம் 296 மிமீ டிஸ்க்குகளுடன் கூடிய டூயல் ரேடியல் மவுண்ட் 4-பிஸ்டன் காலிப்பர்களும், பின்புறத்தில் 240 மிமீ டிஸ்க்குடன் கூடிய சிங்கிள்-பிஸ்டன் காலிபரும் அடங்கும்.



    ஹோண்டா X-ADV: அம்சங்கள்

    ஹோண்டா X-ADV-யில் USB டைப்-சி சார்ஜிங் போர்ட், 5-இன்ச் முழு-வண்ண TFT டிஸ்ப்ளே போன்ற அம்சங்கள் உள்ளன. மேலும், ஹோண்டா ரோட்-சின்க் செயலி இணைப்பு, ரைடர்கள் அழைப்புகள் மற்றும் SMS எச்சரிக்கைகளைப் பெறவும், டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், இசை மற்றும் குரல் கட்டளைகளைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

    இது ரைடு-பை-வயர் தொழில்நுட்பம், நான்கு ரைட் மோட்கள் - ஸ்டாண்டர்ட், ஸ்போர்ட், ரெயின் மற்றும் கிராவல் போன்றவைகளை பெறுகிறது. மாறுபட்ட சாலை நிலைகளில் உகந்த இழுவைக்காக ஹோண்டா செலக்டபிள் டார்க் கன்ட்ரோல் (HSTC) மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் அமைப்பையும் பெறுகிறது.

    ஹோண்டா X-ADV: விலை

    ஹோண்டா X-ADV இந்தியாவில் ரூ.11.90 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    ×