என் மலர்tooltip icon

    பைக்

    ஒரே சமயத்தில் இரு மாடல்கள்... வினியோக அப்டேட் கொடுத்த ஹோண்டா
    X

    ஒரே சமயத்தில் இரு மாடல்கள்... வினியோக அப்டேட் கொடுத்த ஹோண்டா

    • எஞ்சின் வலுவான அடிப்பகுதியுடன், டார்க் நிறைந்த செயல்திறனை வழங்குகிறது.
    • வடிவமைப்பு ரிலாக்ஸ்டு எர்கானமிக்ஸ் மற்றும் 690 மிமீ குறைந்த இருக்கை உயரம் கொண்ட ரெட்ரோ-க்ரூஸரின் வடிவமைப்பாகும்.

    ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் இந்தியாவில் புதிதாக அறிமுகம் செய்த ரெபெல் 500 மற்றும் எக்ஸ்-ஏடிவி (X-ADV) ஆகியவற்றின் விநியோகங்களைத் தொடங்கியுள்ளது. இரண்டு மாடல்களும் ஹோண்டாவின் பிக்-விங் டாப்லைன் டீலர்ஷிப்களில் விற்பனைக்கு கிடைக்கின்றன.

    இந்தியாவில் உள்ள பிக்-விங் டீலர்ஷிப்களில் எக்ஸ்-ஏடிவி விற்பனைக்கு வந்தாலும், ரெபெல் 500 டெல்லி என்சிஆர், பெங்களூரு மற்றும் மும்பையில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கிறது. ஹோண்டா ரெபெல் 500 ரூ. 5.12 லட்சத்தில் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் மேட் பிளாக் மெட்டாலிக் என்ற ஒரே ஒரு நிறத்தில் மட்டுமே கிடைக்கிறது.

    ரெபெல் 500 பைக்கில் 471 சிசி லிக்விட்-கூல்டு பேரலல் ட்வின்-சிலிண்டர் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இது 8,500 ஆர்பிஎம்மில் 45.6 ஹெச்பி பவரையும், 6,000 ஆர்பிஎம்மில் 43.3 என்எம் பீக் டார்க்கையும் உருவாக்குகிறது. இந்த எஞ்சின் 6-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் வலுவான அடிப்பகுதியுடன், டார்க் நிறைந்த செயல்திறனை வழங்குகிறது. இந்த வடிவமைப்பு ரிலாக்ஸ்டு எர்கானமிக்ஸ் மற்றும் 690 மிமீ குறைந்த இருக்கை உயரம் கொண்ட ரெட்ரோ-க்ரூஸரின் வடிவமைப்பாகும்.



    மறுபுறம், ஹோண்டா எக்ஸ்-ஏடிவி ரூ. 11.91 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் கிடைக்கிறது. இதன் விலை மிகவும் அதிகமாக உள்ளது. ஹோண்டா எக்ஸ்-ஏடிவி 745 சிசி லிக்விட் கூல்டு பேரலல்-ட்வின் எஞ்சினைப் பெறுகிறது. இந்த யூனிட் 6,750 ஆர்பிஎம்மில் 57 hp பவரையும் 4,750 rpm இல் 69 என்எம் அதிகபட்ச டார்க்கை உற்பத்தி செய்கிறது.

    புதிய எக்ஸ்-ஏடிவி ஆனது யுஎஸ்பி டைப்-சி சார்ஜிங் போர்ட், 5-இன்ச் முழு-வண்ண TFT டிஸ்ப்ளே போன்ற அம்சங்களை கொண்டுள்ளது. மேலும், ஹோண்டா ரோட்சின்க் ஆப் கனெக்ட், ரைடர்களுக்கு அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் எச்சரிக்கைகளைப் பெறவும், டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் அணுகவும், வாய்ஸ் கண்ட்ரோல் வசதியையும் வழங்குகிறது.

    இது ரைடு-பை-வயர் தொழில்நுட்பம், நான்கு ரைடு மோட்கள்- ஸ்டாண்டர்ட், ஸ்போர்ட், ரெயின் மற்றும் கிராவெல் பெறுகிறது. மாறுபட்ட சாலை நிலைமைகளில் உகந்த இழுவைக்காக ஹோண்டா செலக்டபில் டார்க் கண்ட்ரோல் (HSTC) மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் சிஸ்டத்தையும் பெறுகிறது. ஹோண்டா நிறுவனம் தனது எக்ஸ்-ஏடிவி மாடலை- கிராஃபைட் பிளாக் மற்றும் பேர்ல் கிளேர் வைட் என இரண்டு வண்ணங்களில் வழங்குகிறது.

    Next Story
    ×