என் மலர்
நீங்கள் தேடியது "Honda Motors"
- ஜூன் மாதத்தில் இந்த மாடல் பைக்கின் டெலிவரி தொடங்கும்
- இந்த பைக்கில் 6-ஸ்பீடு கியர் பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
ஹோண்டா மோட்டார் சைக்கிள் இந்திய நிறுவனம் ஹோண்டா CB 750 ஹார்னெட் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த மாடல் ரூ.8.59 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் ஹோண்டாவின் உரிமம் பெற்ற டீலர்ஷிப்களில் இந்த மாடல் கிடைக்கிறது.
ஹோண்டா CB 750 ஹார்னெட் மாடல் ஒரு வலுவான 775cc, குளிர்விக்கப்பட்ட 2 சிலிண்டர் எஞ்சினுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 9500 rpm இல் அதிகபட்சமாக 90.5 bhp சக்தியையும் 7,250 rpm இல் 75 Nm உச்ச முறுக்குவிசையையும் உருவாக்குகிறது. இத்துடன் 6-ஸ்பீடு கியர் பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
ஜூன் மாதத்தில் இந்த மாடல் பைக்கின் டெலிவரி தொடங்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
- CB 1000 ஹார்னெட் SP உறுதியான ஸ்டீல் ஃபிரேம் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.
- முன்புறத்தில் ஷோவா SFF-BP ஃபோர்க்குடன் பொருத்தப்பட்டுள்ளது.
ஹோண்டா மோட்டார் சைக்கிள் இந்திய நிறுவனம் ஹோண்டா CB 1000 ஹார்னெட் SP மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த மாடல் ரூ. 12.35 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் ஹோண்டாவின் உரிமம் பெற்ற டீலர்ஷிப்களில் இந்த மாடல் கிடைக்கிறது.
ஹோண்டா CB 1000 ஹார்னெட் SP மாடல் ஒரு வலுவான 999cc, இன்லைன்-நான்கு சிலிண்டர் எஞ்சினுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 11,000rpm இல் அதிகபட்சமாக 155bhp சக்தியையும் 9,000rpm இல் 107Nm உச்ச முறுக்குவிசையையும் உருவாக்குகிறது. இத்துடன் 6-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டுள்ளது.
வடிவமைப்பு ரீதியாக இந்த மாடல் ஆக்ரோஷமாக காட்சியளிக்கிறது. ஹோண்டா CB 1000 ஹார்னெட் SP ரேசிங்கிற்கு உண்டான ஹெட்லைட் அமைப்பை பெற்றுள்ளது. ஒருங்கிணைந்த DRLகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் LED டர்ன் இண்டிகேட்டர்கள் ஹெட்லைட் அலகுக்கு மேலே வைக்கப்பட்டுள்ளன. டெயில் பகுதி கூர்மையாக உள்ளது.
CB 1000 ஹார்னெட் SP உறுதியான ஸ்டீல் ஃபிரேம் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. இது முன்புறத்தில் ஷோவா SFF-BP ஃபோர்க்குடன் பொருத்தப்பட்டுள்ளது. பின்புறம் ஆலின்ஸ் TTX36 மோனோஷாக் கொண்டிருக்கிறது. இந்த பைக் ஸ்டைலான அலாய் வீல்களில் இயங்குகிறது. டியூப்லெஸ் டயர்களை கொண்டிருக்கிறது. பிரேக்கிங்கிற்கு முன்புறத்தில் இரட்டை டிஸ்க்குகள் மற்றும் பின்புறத்தில் ஒரு ஒற்றை டிஸ்க் வழங்கப்பட்டு இருக்கிறது.


ஜப்பான் நாட்டில் அதிக எண்ணிக்கையில் உற்பத்தி செய்யப்பட இருக்கும் முதல் ஹைப்ரிட் ஸ்கூட்டராக ஹோன்டா PCX 125 இருக்கும் என கூறப்படுகிறது. முதற்கட்டமாக ஜப்பான் நாட்டில் மட்டும் PCX 125 ஸ்கூட்டர் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
எனினும் இந்த ஸ்கூட்டர் உலகின் மற்ற நாடுகளிலும் விற்பனை செய்யப்படும் என கூறப்படுகிறது. இதுவரை ஹோன்டா PCX 125 இந்திய வெளியீடு குறித்து எவ்வித தகவலும் இல்லை. ஹோன்டா PCX 125 ஹைப்ரிட் மாடலில் 125சிசி, சிங்கிள்-சிலிண்டர் மற்றும் 48 வோல்ட் லி்தியம்-அன் பேட்டரி வழங்கப்படுகிறது.

ஹோன்டா PCX 125 ஹைப்ரிட் ஸ்கூட்டர் D மற்றும் S என இருவித டிரைவிங் மோட்களை கொண்டிருக்கும் - இதன் S மோட் தேவையான சமயத்தில் கூடுதல் செயல்திறன் வழங்கும். PCX 125 மாடலில் ஹோன்டா ஸ்மார்ட் கீ சிஸ்டம் கொண்டிருக்கும் என்பதால் இன்ஜினை ஸ்டார்ட் செய்ய சாவி தேவைப்படாது என கூறப்படுகிறது.






