search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹோன்டா ஜாஸ் ஃபேஸ்லிஃப்ட் இந்திய விலை மற்றும் அம்சங்கள்
    X

    ஹோன்டா ஜாஸ் ஃபேஸ்லிஃப்ட் இந்திய விலை மற்றும் அம்சங்கள்

    இந்தியாவில் ஹோன்டா ஜாஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய 2018 ஜாஸ் விலை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #Honda #Jazz



    இந்தியாவில் 2018 ஹோன்டா ஜாஸ் ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய 2018 ஜாஸ் வெளிப்புறம் மற்றும் மெக்கானிக்கல் அம்சங்களில் எவ்வித மாற்றங்களும் செய்யப்படவில்லை. எனினும் தற்போதைய மாடலை விட 2018 ஜாஸ் மாடலில் சில உபகரணங்கள் மற்றும் அம்சங்கள் கூடுதலாக வழங்கப்படுகின்றது.

    என்ட்ரி-லெவல் எஸ் ட்ரிம் வேரியன்ட் டூயல் ஏர்பேக், ஏ.பி.எஸ். (ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம்), 4-ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம், ஸ்டீரிங் மவுன்ட் கன்ட்ரோல்கள், ORVM, எல்இடி டெயில் லேம்ப், பின்புறம் டீஃபாகர், சென்ட்ரல் ஆம்ரெஸ்ட், பின்புறம் பார்க்கிங் சென்சார்கள், ஸ்பீட் சென்சிங் டோர் லாக் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    மிட்-ரேன்ஜ் வி வேரியன்ட் மாடலில் 15-இன்ச் அலாய் வீல்கள், 5-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேடிக் கிளைமேட் கன்ட்ரோல், கீலெஸ் என்ட்ரி, ஃபாக் லேம்ப்கள், பின்புறம் வைப்பர் மற்றும் பெய்க் இன்டீரியர்கள் வழங்கப்பட்டுள்ளது.



    டாப்-என்ட் VX வேரியன்ட் 7 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆன்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே மற்றும் நேவிகேஷன், மின்னணு முறையில் மாற்றக்கூடிய ORVM-கள், இன்டகிரேட் செய்யப்பட்ட இன்டிகேட்டர்கள், லெதர் ராப் செய்யப்பட்ட ஸ்டீரிங் வீல் மற்றும் கியர் நாப் வழங்கப்பட்டுள்ளது.

    ஹோன்டா ஜாஸ் 2018 மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் 89 பி.ஹெச்.பி. பவர், 110 என்.எம். டார்கியூ செயல்திறன் வழங்குகிறது. இதன் 1.5 லிட்டர் i-DTEC டீசல் இன்ஜின் 98 பி.ஹெச்.பி. பவர், 200 என்.எம். டார்கியூ செயல்திறன் வழங்குகிறது. இந்த இன்ஜின்கில் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் பெட்ரோல் வேரியன்ட்-இல் CVT ஆப்ஷன் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இதன் டீசல் இன்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    இந்தியாவில் ஹோன்டா ஜாஸ் 2018 மாடலின் விலை ரூ.7.35 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) முதல் துவங்குகிறது. புதிய 2018 ஹோன்டா ஜாஸ் ஐந்து வித வேரியன்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  #Honda #Jazz
    Next Story
    ×