என் மலர்
பைக்

அட்வென்ச்சர் ஸ்கூட்டரை சத்தமின்றி அப்டேட் செய்த ஹோண்டா
- ஹோண்டா ADV 350 மாடல் 330 சிசி SOHC 4-வால்வுகள் கொண்ட எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது.
- பிரேக்கிங்கிற்கு முன்பக்கத்தில் 256mm டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 240mm டிஸ்க் வழங்கப்பட்டுள்ளது.
ஹோண்டா நிறுவனம் ADV 350-இன் புதிய மாடலை ஐரோப்பாவில் வெளியிட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் முதன்முதலில் 2022 ஆம் ஆண்டு ஐரோப்பிய சந்தைக்கு வந்தது. புதிய அப்டேட் செய்த பிறகும் இந்த மாடலின் இயந்திர மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் அப்படியே உள்ளன. இருப்பினும், ADV 350 இப்போது மூன்று புதிய வண்ணங்கள் மற்றும் புதுப்பிக்கப்பட்ட கிராபிக்ஸ் உடன் வருகிறது.
ஹோண்டா ADV 350 மாடல் 330 சிசி SOHC 4-வால்வுகள் கொண்ட எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இது 30 hp பவர் மற்றும் 31.5 Nm நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த ஸ்கூட்டரின் பவர் யூனிட் ஒரு அண்டர்போன் சேஸிக்குள் அமர்ந்திருக்கிறது. இது USD முன்பக்க ஃபோர்க்குகள் மற்றும் டூயல் ஷாக் அப்சார்பர்களை கொண்டிருக்கிறது.
பிரேக்கிங்கிற்கு முன்பக்கத்தில் 256mm டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 240mm டிஸ்க் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் முன்புறத்தில் 15-இன்ச் சக்கரம் பின்புறம் 14-இன்ச் சக்கரத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. மேக்ஸி ஸ்கூட்டரில் 11.7 லிட்டர் ஃபியூவல் டேன்க் உள்ளது.
அப்டேட் செய்யப்பட்ட ஹோண்டா ADV 350 பிரீ-லோடு அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஸ்பிரிங்ஸ், ஹோண்டா ரோட்-சின்க் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டியுடன் 5-இன்ச் TFT ஸ்கிரீன், மற்றும் ஆட்டோ-கேன்சலிங் இண்டிகேட்டர்கள் போன்ற அம்சங்களைப் பெற்றுள்ளது.






