search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "free electricity"

    • சில மாநிலங்களில் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
    • தேர்தல் வரவிருக்கும் நேரத்தில் கூட, இது ஒவ்வொருவருடைய பாதுகாப்பாக இருக்கும்.

    பீகார் மாநிலத்தில் பா.ஜனதா கூட்டணி ஆட்சி அமைத்து ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார் ஆட்சி செய்து வருகிறார். தற்போது பீகார் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது.

    சட்டமன்றத்தில் பேசும்போது இலவச மின்சாரம் வழங்கமாட்டோம் என நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து நிதிஷ் குமார் கூறியதாவது:-

    மின்சாரம் இலவசமாக வழங்கப்படமாட்டாது என்பதை நான் தொடக்கத்தில் இருந்தே தெரிவித்து வருகிறேன். நாங்கள் எவ்வளவு குறைந்த விலைக்கு வழங்க முடியுமோ, அந்த அளவிற்கு வழங்குவோம். இது தொடர்ந்து பாதுகாப்பாக இருக்கும்.

    சில மாநிலங்களில் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், நாங்கள் இலவசமாக வழங்கமாட்டோம். தேர்தல் வரவிருக்கும் நேரத்தில் கூட, இது ஒவ்வொருவருடைய பாதுகாப்பாக இருக்கும். ஆகவே, இலவசமாக வழங்கப்படமாட்டாது" என்றார்.

    பீகார் எரிசக்தி மந்திரி பிஜேந்திர யாதவ் கூறுகையில் "மற்ற மாநிலங்களை காட்டிலும் பீகாரில் மின்சார கட்டணம் அதிகமாக வசூலிக்கப்பட்டால், நிச்சயமாக நாங்கள் அதைவிட குறைவான விலைவில் வழங்குவோம். எவ்வளவு காலம் இந்த இலவச மின்சாரம் மூலம் இழப்பை சந்திக்க முடியும்?. பணம் எங்கிருந்து வரும்?. 14 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மானியம் வழங்குகிறோம். புறநகர் பகுதிகளில் அதிக அளவில் வழங்குகிறோம். தற்போது இதைவிட அதிக வாய்ப்பு தேவைப்படுகிறா?" என்றார்.

    • சேவா சிந்து செல்போன் செயலி மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
    • பெங்களூரு ஒன், கிராம ஒன் உள்ளிட்ட மையங்களில் விண்ணப்பிக்கலாம்.

    பெங்களூரு

    கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததை தொடர்ந்து வீடுகளுக்கு 200 யூனிட் இலவசம் மின்சாரம் வழங்கப்படும் என்று முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்திருந்தார். இந்த 200 யூனிட் இலவச மின்சாரத்தை பெறுவதற்கு சில கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. மேலும் வாடகை வீடுகளில் வசிப்பவருக்கும், புதிதாக வீடு கட்டுபவருக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதே நேரத்தில் 200 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவோர் முழு கட்டணத்தையும் செலுத்த வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு கடந்த 15-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. சில தொழில்நுட்ப பிரச்சினைகள் காரணமாக தள்ளிவைக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் இன்று முதல் 200 யூனிட் இலவச மின்சாரம் பெற தகுதியானவர்கள் சேவா சிந்து செல்போன் செயலி மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் பெங்களூரு ஒன், கிராம ஒன் உள்ளிட்ட மையங்களில் விண்ணப்பிக்கலாம் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது. வாடகை வீடுகளில் வசிப்பவர்கள் தங்களது மின் கட்டண தகவல் விபரம் மற்றும் வாடகை வீட்டில் இருப்பதற்கான ஆவணங்களையும் தாக்கல் செய்ய வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.

    • ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் வகையில் கீழ்க்கண்ட கட்டண உயர்வு முறையை அறிவித்தது.
    • வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கு மட்டுமே யூனிட் ஒன்றிக்கு 13 பைசா முதல் 21 பைசா வரை மிகக் குறைந்த அளவில் மின்கட்டணம் உயரும்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    கடந்தகால ஆட்சியில் இருந்த திறனற்ற மேலாண்மையால், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் ஒட்டுமொத்த நிதி நிலை மோசமாக பாதிப்படைந்து இருந்தது. மேலும், ஒன்றிய அரசின் 9 நவம்பர் 2021 ஆணையின்படி மின் எரிபொருள் மற்றும் கொள்முதல் விலை உயர்வினை உடனுக்குடன் நுகர்வோரிடமிருந்து வசூல் செய்வது கட்டாய மாக்கப்பட்டது. மேலும், 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஒன்றிய அரசு இட்ட ஆணையின்படி, இந்த விலை உயர்வினை மின் கட்டணத்தை உயர்த்தி நுகர்வோர்களிடமிருந்து மாதந்தோறும் பெற வேண்டும்.

    இந்த விலை உயர்வினால் ஏற்படக்கூடிய சுமையைக். குறைக்கும் வகையில், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் 09.09.2022 அன்று 2022-23 முதல் 2026-27 வரை 5 ஆண்டுகளுக்கான கட்டண உயர்வை பல்லாண்டு மின் கட்டண வகையில் வழங்கியது. மேற்படி உத்தரவில் 2022-23 ஆண்டுக்கான உயர்த்தப்பட்ட கட்டணத்தை அறிவித்தது. அடுத்து வரும் 4 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் வகையில் கீழ்க்கண்ட கட்டண உயர்வு முறையை அறிவித்தது. அதன்படி, ஆண்டுதோறும், ஏப்ரல் மாதத்திற்கான நுகர்வோர் விலை குறியீட்டு எண்ணை முந்தைய ஆண்டின் ஏப்ரல் மாதத்தின் விலைக் குறியீட்டு எண்ணுடன் ஒப்பீடு செய்து, கணக்கிடப்படும் நுகர்வோர் பணவீக்க உயர்வு அல்லது 6 சதவீதம் இவற்றில் எது குறைவோ அந்த அளவில் மின்கட்டண உயர்வை நடைமுறைபடுத்த வேண்டும்.

    இதன்படி, 2023 ஜூலை மாதத்தைப் பொறுத்த வரையில், 2022 ஏப்ரல் மற்றும் 2023 ஏப்ரல் ஆகியவற்றின் நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்களின்படி கணக்கிட்டால், 4.7 சதவீதம் மின்கட்டணம் உயர்த்தப்பட வேண்டும். இந்த நடைமுறையை ஆய்வு செய்த முதலமைச்சர் மாண்பமை ஆணையத்தின் உத்தரவை செயல்படுத்தும் போது பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள். இதன்படி கட்டண உயர்வு விகிதம் மறுஆய்வு செய்யப் பட்டு, சென்ற ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், 2022 ஏப்ரல் மாதத்தின் விலைக் குறியீட்டு எண்ணிற்கு பதிலாக சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் விலை குறியீட்டு எண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதனால் கட்டண உயர்வின் அளவு 4.7 சதவீத்திலிருந்து 2.18 சதவீதம் ஆக குறைக்கப்பட்டது. இந்த குறைந்த உயர்விலிருந்தும் பொது மக்களை பாதுகாக்கும் நோக்கோடு, வீட்டு இணைப்பு நுகர்வோருக்கு ஏற்படும் 2.18 சதவீத உயர்வையும் தமிழ்நாடு அரசே ஏற்று, மின் வாரியத்திற்கு மானியமாக வழங்கிட முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்கள். இந்த முடிவால்

    அ) வீட்டு இணைப்புகளுக்கு எவ்வித கட்டண உயர்வும் இருக்காது.

    ஆ) வேளாண் இணைப்புகள், குடிசை இணைப்புகள், வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம், கைத்தறி, விசைத்தறிகள் போன்றவைகளுக்கு அளிக்கப்படும் இலவச மின்சாரச் சலுகைகள் தொடர்ந்து வழங்கப்படும்.

    (இ) வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கு மட்டுமே யூனிட் ஒன்றிக்கு 13 பைசா முதல் 21 பைசா வரை மிகக் குறைந்த அளவில் மின்கட்டணம் உயரும்.

    இந்த ஆண்டு நமது நாட்டின் பிற மாநிலங்களில் வீட்டு இணைப்புகள் உள்ளிட்ட அனைத்து மின்இணைப்புகளுக்கும் மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த உயர்வுகளோடு ஒப்பிடும் போது-மகாராஷ்டிரா (62 பைசா/யூனிட்), கர்நாடகா(70 பைசா/யூனிட்), அரியானா (72 பைசா/யூனிட்), மத்திய பிரதேசம் (33 பைசா/யூனிட்), பீகார் (147 பைசா/யூனிட்)-தமிழ்நாட்டில் வீட்டு மின்இணைப்புகளுக்கு மின்கட்டணங்கள் எவ்விதமும் உயர்த்தப்படாதது மட்டுமன்றி, வணிக மற்றும் தொழில் மின்இணைப்புகளுக்கும் மிகக்குறைந்த அளவிலேயே கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 100 யூட்டுகள் வரை பயன்படுத்துவோர் இனி கட்டணம் செலுத்த தேவையில்லை என அறிவிப்பு.
    • அரசின் இந்த அறிவிப்பு தேர்தலை குறிவைத்தது என பாஜக விமர்சனம் செய்துள்ளது.

    ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.

    தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை தக்க வைக்கவும், பாஜக ஆட்சியை பிடிக்கவும் வியூகம் வகுத்து வருகிறது.

    இந்நிலையில், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் முதல் 100 யூனிட்டுக்கு இனி கட்டணம் செலுத்த வேண்டாம் என அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து அசேக் கெலாட் அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், " பணவீக்க நிவாரண முகாம்களை பார்வையிட்டேன். பின்னர் பொதுமக்களிடம் பேசிய பிறகு, மின்கட்டணத்தில் சிலாப் வாரியான விலக்குகளில் சிறிது மாற்றம் செய்ய வேண்டும் என்று கருத்து தெரிவிக்கப்பட்டது. பொதுமக்களிடமிருந்தும் கருத்துகள் பெறப்பட்டன. அதன் அடிப்படையில் பெரிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, 100 யூனிட்டுகள் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும். 100 யூட்டுகள் பயன்படுத்துவோர் இனி கட்டணம் செலுத்த தேவையில்லை. 200 யூனிட்டுகள் வரை நிலையான கட்டணம் வசூலிக்கப்படும் மற்றும் தாமத கூடுதல் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    ஆனால், அரசின் இந்த அறிவிப்பு தேர்தலை குறிவைத்தது என பாஜக விமர்சனம் செய்துள்ளது.

    • டவுன், தச்சநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட பித்தளை தொழிற்கூடங்கள் செயல்பட்டு வருகிறது.
    • நாங்குநேரி சுங்கச்சாவடியில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படாமல் இருந்தது.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கை மனு கொடுத்தனர்.

    கோவில் பூசாரிகள்

    மேலபாட்டம் அருகே உள்ள கொட்டாரம் பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரது தலைமையில் கிராம கோவில் பூசாரிகள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 2001-ம் ஆண்டு கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்த போது பூசாரிகளுக்கு நலவாரியம் அமைக்கப்படும் என தெரிவித்தார். தற்போது தி.மு.க. ஆட்சியில் கோவில் பூசாரி களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் ஊதியம் வழங்கப்படுகிறது. அதனை ரூ.10 ஆயிரமாக உயர்த்த வேண்டும்.

    கிராம கோவில்களுக்கு மின்கட்டணம் அதிகமாக உள்ளது. எனவே அங்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும். கோவில்களில் குட முழுக்கு திருவிழா க்களை பாரம்பரிய முறை யில் நடத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு

    மேல குன்னத்தூரை சேர்ந்த பொதுமக்கள் மாவீரன் சுந்தரலிங்கனார் இயக்க நிறுவனர் மாரியப்பபாண்டியன் தலைமையில் கொடுத்த மனுவில், பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் செல்போன் டவர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே இதனை வேறு இடத்தில் அமைக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

    அகில பாரத இந்து மகாசபா மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நிர்வாகிகள் உடையார், கார்த்திக் நாராயணன் உள்ளிட்டோர் கொடுத்த மனுவில், கடந்த 14-ந் தேதி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் எங்களது கட்சி அலுவலகத்திற்கு வந்து நிர்வாகிகள் துரைபாண்டி, செல்வம், செந்தில்குமார் ஆகியோரை சட்ட விரோதமாக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று அவர்கள் மீது பொய் வழக்கு போட்டுள்ளார். எனவே அதனை ரத்து செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

    ஊதிய உயர்வு

    பித்தளை பாத்திர உற்பத்தியாளர் சங்க தலைவர் ராஜன் தலைமையில் கொடுத்த மனுவில், பழையபேட்டை, டவுன், தச்சநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட பித்தளை தொழிற்கூடங்கள் செயல்பட்டு வருகிறது.

    இங்கு 100 -க்கும் மேற்பட்டோர் பணி யாற்றி வருகிறார்கள். இங்கிருந்துதான் டவுனில் உள்ள பாத்திர கடைகளுக்கு பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறது. இந்த தொழிலாளர்களுக்கு விலைவாசிக்கேற்ப ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

    கல்குவாரிக்கு எதிர்ப்பு

    பூலித்தேவர் மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் வேல்முருகன் தலைமையில் நாங்குநேரி ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் அசோக்குமார் மற்றும் மங்கல்ராஜ், எழிலரசு, பட்டுவேல் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்டோர் பேரணியாக வந்து கொடுத்த மனுவில், பரப்பாடி அருகே கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதுடன் விஜயநாராயணம் கப்பற்படை தளத்திற்கு பாதுகாப்பு அச்சுறுத்தலும், தினையூரணியில் 105 அடி தேவாலய கோபுரத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

    மேலும் கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்திற்கும் இடைஞ்சல் ஏற்பட்டுள்ளது. எனவே கல்குவாரியை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

    நாங்குநேரி சுங்கச்சாவடி

    நேதாஜி சுபாஷ் சேனா நிறுவன தலைவர் மகாராஜன் தலைமையில் டிரவைர்கள் சங்கம், வியாபாரிகள் சங்கத்தினர் கொடுத்த மனுவில், நாங்குநேரி சுங்கச்சாவடியில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படாமல் இருந்தது. ஆனால் தற்போது கட்டணம் வசூலிக்கப்படுவதால் அங்கிருந்து விலை பொருட்களை நெல்லைக்கு கொண்டு வரும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதனை கண்டித்து நாங்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளோம். ஆனாலும் நடவடிக்கை இல்லை. தற்போது கயத்தாறு சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சுங்கசாவடி வழியாக சென்ற போது கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே எங்களுக்கும் அவ்வாறு உள்ளூர் வாகனங்கள் செல்வதற்கு கட்டணத்தில் இருந்து விதிவிலக்கு அளிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

    • கைத்தறி நெசவுக்கு 200 யூனிட் இலவசம் என்பது 300 யூனிட்டாக உயர்த்தப்பட்டுள்ளது.
    • மார்ச் 1-ந்தேதி முன் தேதியிட்டு இந்த புதிய நடைமுறை அமல்படுத்தப்படுகிறது.

    சென்னை:

    விசைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சாரம் 700 யூனிட்டாக இருந்த நிலையில் 1,000 யூனிட்டாக உயர்த்தி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதேபோல் கைத்தறி நெசவுக்கு 200 யூனிட் இலவசம் என்பது 300 யூனிட்டாக உயர்த்தியும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

    மாநிலத்தில், விசைத்தறிக்கு 3 நிலையிலான மின்கட்டணம் ஒரே நிலையாக மாற்றம் செய்து, ஒரு யூனிட்டுக்கு 70 பைசா மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது.

    ஈரோடு இடைத்தேர்தல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு இப்போது வெளியிடப்பட்டுள்ளது. மார்ச் 1-ந்தேதி முன் தேதியிட்டு இந்த மின் கட்டண சலுகை அமல்படுத்தப்படுகிறது.

    • விவசாயிகள் முற்றுகையிட்டு தூக்கு போடும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • 40-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்காமல் தாமதப்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை வடக்கு பிரிவு மின்சார வாரியத்திற்கு உட்பட்ட இருகரை மெயின் ரோடு தெருவை சேர்ந்த விஜயகுமார் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்காமல் தாமதப்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.

    எனவே மின் ஊழியர்கள் உடனடியாக மின் இணைப்பை வழங்க வேண்டும் என வலியுறுத்தி இன்று அம்மாபேட்டை மின்வாரிய அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு தூக்கு போடும் நூதன போராட்டத்தில் ஈடுப ட்டனர்.

    விவசாய சங்க ஒன்றிய குழு தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார்.

    மாவட்ட துணைத்தலைவர் செந்தில்குமார், ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் முன்னிலை வகித்தனர்.

    இந்நிகழ்வில் மாவட்ட தலைவி தாமரைச்செல்வி, கைத்தறி சங்க மாவட்ட செயலாளர் ராஜாராமன், ஒன்றிய குழு நிர்வாகிகள் பழனிச்சாமி, கண்ணன், ரமேஷ் குமார், காமாட்சி, மணிகண்டன், செல்வம், திருநாவுக்கரசு, சின்ன ராஜா, ராமலிங்கம், ராஜமாணிக்கம் உத்ராவதி உள்பட 40-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • தற்போது உள்ளபடியே, 100 யூனிட் இலவச மின்சாரத்தை தொடா்ந்து வழங்க வேண்டும்.
    • மின் இணைப்பு வேண்டி, விண்ணப்பிக்கும் அனைவருக்கும் பாரபட்சமின்றி முறையாகவும் துரிதமாகவும் மின்இணைப்பு வழங்கவேண்டும்.

    திருப்பூர்:

    வீடுகளுக்கு வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் இலவச மின்சாரம் தொடா்ந்து வழங்க வேண்டும் என அனைத்து பொது தொழிலாளா் நல அமைப்பினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

    இது குறித்து அமைப்பின் பொது செயலாளா் ஈ.பி.சரவணன் திருப்பூர் மின்வாரிய அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    வீடுகளுக்கு வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் பெயரில் அனுப்பியுள்ள குறுச்செய்தியால் பொதுமக்கள் அதிா்ச்சியடைந்துள்ளனா். மேலும் இதில் கட்டண விகிதமும் மாற்றம் செய்யப்பட்டதாக வந்த தகவல்படி, கட்டணம் இரண்டரை மடங்கு கூடுதலாக செலுத்த வேண்டியுள்ளது. ஆகவே தற்போது உள்ளபடியே, 100 யூனிட் இலவச மின்சாரத்தை தொடா்ந்து வழங்க வேண்டும். மின் இணைப்பு வேண்டி, விண்ணப்பிக்கும் அனைவருக்கும் பாரபட்சமின்றி முறையாகவும் துரிதமாகவும் மின்இணைப்பு வழங்கவேண்டும். திருப்பூா் பகுதிகளிலுள்ள அனைத்து அலுவலகத்திற்கும் ஒரே மாதிரியான மின்வாரிய சட்ட விதிகளை பின்பற்ற வேண்டும் எனத்தெரிவிக்கப்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆம் ஆத்மி அரசாங்கம் பஞ்சாபின் வரலாற்றில் ஒரு புதிய முன்மாதிரியை அமைத்துள்ளது.
    • இன்று முதல் பஞ்சாபில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதத்திற்கு 300 யூனிட் இலவச மின்சாரம் கிடைக்கும்.

    பஞ்சாபில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின்போது ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றாக ஒவ்வொரு வீட்டிற்கும் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவித்தது.

    இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் ஜூலை 1-ம் தேதி முதல் ஒவ்வொரு வீட்டிற்கும் ஒவ்வொரு மாதமும் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அறிவித்தார். இது தற்போது பஞ்சாப் அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து முதல்வர் பகவந்த் மான் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    முந்தைய அரசாங்கங்கள் தேர்தல்களின் போது வாக்குறுதிகளை அளித்தன. வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் நேரத்தில் ஐந்து ஆண்டுகள் கடந்துவிடும். ஆனால் எங்கள் அரசாங்கம் பஞ்சாபின் வரலாற்றில் ஒரு புதிய முன்மாதிரியை அமைத்துள்ளது. இன்று பஞ்சாப் மக்களுக்கு அளிக்கப்பட்ட மற்றொரு உத்தரவாதத்தை நிறைவேற்றப்போகிறோம். இன்று முதல் பஞ்சாபில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதத்திற்கு 300 யூனிட் இலவச மின்சாரம் கிடைக்கும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு சற்றுமுன்பு ராஜஸ்தான் பாரதிய ஜனதா முதல் மந்திரி வசுந்தரா ராஜே கிராமப்புற விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவித்தார். #BJP #VasundharaRaje
    அஜ்மீர்:

    200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தான் மாநில சட்டசபைக்கு டிசம்பர் 7-ந்தேதி தேர்தல் நடக்கிறது.

    இதற்கான தேர்தல் தேதியை தேர்தல் கமி‌ஷன் நேற்று அறிவித்தது. இதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது.

    தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு சற்றுமுன்பு ராஜஸ்தான் பா.ஜனதா முதல்-மந்திரி வசுந்தராராஜே, “கிராமப்புற விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும்” என்று அறிவித்தார்.

    பிரதமர் நரேந்திரமோடி முன்னிலையில் அஜ்மீரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் இதை தெரிவித்தார்.



    விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பு ஆக்குவதே மோடியின் குறிக்கோளாக இருக்கிறது. இதன்படி கிராமப்புற விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும். இதற்கான பணிகள் தொடங்கிவிட்டன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வசுந்தராராஜே தேர்தல் தேதி தெரிவிப்பதற்கு 1 மணி நேரத்துக்கு முன்பு இலவச மின்சார திட்டத்தை வெளியிட்டார். தேர்தல் தேதி 3 மணியளவில் அறிவிக்கப்பட்டது. அவர் 2 மணிக்கு இதை தெரிவித்தார். 12 லட்சம் விவசாயிகள் பயன் அளிக்கும் வகையில் இலவச மின்சார திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    ராஜஸ்தான் மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள போராடுகிறது. காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் ஆர்வத்துடன் இருக்கிறது. அங்கு சமீபத்தில் நடந்த இடைத்தேர்தல்களில் ஆளும் பா.ஜனதா தோல்வியை தழுவியது.

    மக்களின் அதிருப்தியை சமாளிக்க முதல்-மந்திரி வசுந்தரா கடைசி நேரத்தில் இலவச திட்டங்களை அறிவிப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். #BJP #VasundharaRaje
    வசதியானவர்களுக்கு இலவச மின்சாரத்தை வழங்குவதை நிறுத்தி, அதன் மூலம் கிடைக்கும் தொகையை வைத்து புதிய மின் திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக தமிழக அரசு பரிசீலித்து வருகிறது.
    சென்னை:

    தமிழ்நாட்டில் 100 யூனிட் வரை மின்சாரம் இலவசமாகவும், 500 யூனிட்டுக்கு கீழ் மானிய விலையிலும் மின்வாரியம், மின்சாரம் வினியோகம் செய்கிறது.

    இதனால் ஆண்டுக்கு சராசரியாக 3600 கோடி ரூபாய் செலவாகிறது. இந்த தொகையை மின்வாரியத்துக்கு தமிழக அரசு மானியமாக வழங்குகிறது.

    மத்திய அரசு, ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டுவோருக்கு வீட்டு சமையல் கியாஸ் சிலிண்டர் மானியத்தை நிறுத்தி உள்ளது. அதே போல் நிதி நெருக்கடியில் உள்ள மின்வாரியம் வசதியானவர்களுக்கு 100 யூனிட் இலவச மின்சாரத்தை நிறுத்த ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

    இதுபற்றி மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    ஏழை மக்களுக்கு இலவசமாகவும், மானிய விலையிலும் மின்சாரம் வழங்குவதில் தவறில்லை. ஆனால் பல லட்ச ரூபாய் வருவாய் ஈட்டும் வசதி படைத்தவர்கள் உள்பட 2 கோடி வீடுகளுக்கு 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படுவதால் ஆண்டுக்கு 1650 கோடி ரூபாய்க்கு மேல் செலவு ஏற்படுகிறது.

    வசதியானவர்களுக்கு இலவச மின்சாரத்தை வழங்குவதை நிறுத்தினால் அதில் கிடைக்கும் தொகையை வைத்து புதிய மின் திட்டங்களை செயல்படுத்தலாம்.


    கடந்த 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் முதல்-அமைச்சராக ஜெயலலிதா பொறுப்பேற்ற போது கையெழுத்திட்ட 5 கோப்புகளில், 100 யூனிட் இலவச மின்சார திட்டமும் ஒன்று. எனவே இந்த திட்டத்தை நிறுத்த அரசு முடிவெடுக்காது.

    ஆனால் கியாஸ் மானியம் வேண்டாம் என பொது மக்கள் தாமாக முன் வந்து தெரிவிப்பது போல் 100 யூனிட் இலவச மின்சாரம் வேண்டாம் என மின்வாரியத்தில் கடிதம் வழங்கினால் அரசு அதை பரிசீலிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #TNGovernment #ElectricityBoard
    ×