search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "delhi assembly"

    • அமலாக்கத்துறை தன்னை கைது செய்ய வாய்ப்புள்ளது என கெஜ்ரிவால் கூறிவருகிறார்.
    • அவர் நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உள்ளதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் மந்திரியாக அரவிந்த் கெஜ்ரிவால் பதவி வகித்து வருகிறார்.

    டெல்லியில் உள்ள 70 சட்டசபை தொகுதிகளில் ஆம் ஆத்மிக்கு 62 இடங்களும், பா.ஜ.க.வுக்கு 8 இடங்களும் உள்ளன.

    தனிப்பெரும்பான்மையுடன் ஆம் ஆத்மி ஆட்சி நடத்தி வந்தாலும் ஆட்சியைக் கவிழ்க்க பா.ஜ.க. முயற்சித்து வருகிறது என ஆம் ஆத்மி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.

    இதற்கிடையே டெல்லி மதுபான கொள்கை வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை தொடர்ந்து சம்மன் அனுப்பியது. இதுவரை 5 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத கெஜ்ரிவாலுக்கு 6-வது முறையாக சம்மன் அனுப்பி 19-ம் தேதி ஆஜராகுமாறு கூறியுள்ளது.

    இந்நிலையில், டெல்லி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உள்ளதாக கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் மீதான விவாதம் நாளை நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார்.

    அமலாக்கத்துறை தன்னை கைது செய்யலாம் என கெஜ்ரிவால் கூறிவரும் நிலையில் , நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உள்ளதாக அறிவித்துள்ளது டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள ஆம் ஆத்மி மந்திரிகளை பதவி நீக்கம் செய்யும்படி பாஜக வலியுறுத்தல்
    • அமளியில் ஈடுபட்ட பாஜக எம்எல்ஏக்கள் அவைக்காலவர்களால் வெளியேற்றப்பட்டனர்.

    புதுடெல்லி:

    டெல்லியில் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக பாஜகவுக்கும், ஆம் ஆத்மி கட்சிக்கும் இடையிலான வார்த்தைப்போர் தீவிரமடைந்துள்ளது. சட்டசபையில் இந்த விவகாரம் எதிரொலித்தது. அமளியில் ஈடுபட்ட பாஜக எம்எல்ஏக்கள் அவைக்காவலர்களால் வெளியேற்றப்பட்டனர். நேற்று விடிய விடிய இரு கட்சிகளின் உறுப்பினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டதால் சட்டசபை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    இரண்டாவது நாளாக இன்றும் சட்டசபையில் பாஜக எம்எல்ஏக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள ஆம் ஆத்மி மந்திரிகள் மணீஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின் ஆகியோரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என முழக்கங்கள் எழுப்பினர். பதிலுக்கு ஆம் ஆத்மி உறுப்பினர்களும் பாஜகவுக்கு எதிராக கோஷமிட்டனர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. இதனால் அடுத்தடுத்து அவை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் பாஜக எம்எல்ஏக்கள் அவைக்காலவர்களால் வெளியேற்றப்பட்டனர்.

    இதையடுத்து சட்டசபை வளாகத்தில் இரண்டாவது நாளாக இன்றும் பாஜக எம்எல்ஏக்கள் போராட்டத்தை தொடர உள்ளனர். 

    டெல்லி தலைமை செயலாளராக உள்ள அன்ஷு பிரகாஷை பதவியிலிருந்து நீக்கம் செய்ய வேண்டும் என அம்மாநில அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. #DelhiAssembly #AamAadmi
    புதுடெல்லி:

    டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசு பல்வேறு முக்கிய இடங்களில் சிசிடிவி கேமரா பொறுத்தும் திட்டத்தை கடந்த 2015-ம் ஆண்டு கொண்டு வந்தது. ஆனால், துணை நிலை ஆளுநரின் முட்டுக்கட்டை காரணமாக இந்த திட்டம் செயல்படுத்தப்படாமல் இருந்தது.

    சமீபத்தில் டெல்லியில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கே அதிகாரம் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்ததை தொடர்ந்து பல திட்டங்களை ஆம் ஆத்மி அரசு விரைவு படுத்தியுள்ளது. தூசி படிந்து கிடந்த சிசிடிவி திட்டத்துக்கு கடந்த வாரம் மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

    ஆனால், அம்மாநில தலைமை செயலாளராக உள்ள அன்ஷு பிரகாஷ் சிசிடிவி திட்டத்தின் மீதான கேபினட் ஒப்புதல் முடிவு மிக அவசரமானது என குறிப்பு அனுப்பினார். இதன் காரணமாக அன்ஷு பிரகாஷை தலைமை செயலாளர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என அம்மாநில சட்டசபையில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.

    சில மாதங்களுக்கு முன்னர் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் தன்னை தாக்கியதாக புகார் அளித்து அன்ஷு பிரகாஷ் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
    மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை போற்றும் வகையில் அவரது உருவப்படம் டெல்லி சட்டசபையில் இன்று திறந்து வைக்கப்பட்டது. #AbdulKalam
    புதுடெல்லி:

    மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை போற்றும் வகையில் அவரது உருவப்படம் டெல்லி சட்டசபையில் இன்று திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முதல்-மந்திரி கெஜ்ரிவால், சபாநாயகர், ராம் நிவாஸ் கோயல் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.

    லால்பகதூர் சாஸ்திரியின் உருவப்படமும் திறந்து வைக்கப்பட்டது. விழாவில் இரு தலைவர்களின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். #AbdulKalam
    ×