search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aam Aadmi"

    • இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ், ஆம் ஆத்மி தனித்தனியாக களம் காண்கிறது.
    • பெரும்பான்மைக்கு 46 இடங்கள் தேவையான நிலையில், அரியானாவில் 4 முனை போட்டி உருவாகியது.

    சண்டிகர்:

    அரியானா மாநிலத்தில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் உள்ள 90 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதாக ஆம் ஆத்மி கட்சி சமீபத்தில் அறிவித்துள்ளது.

    ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், எம்.பியுமான சஞ்சய் சிங், பஞ்சாப் முதல் மந்திரி பகவத் மான் ஆகியோர் கூட்டாக இந்த முடிவை அறிவித்தனர்.

    பெரும்பான்மைக்கு 46 இடங்கள் தேவையாக உள்ள நிலையில், அரியானாவில் 4 முனை போட்டி உருவாகியுள்ளது.

    கடந்த 2019-ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க. 40 இடங்களிலும், காங்கிரஸ் 31 இடங்களிலும் வென்றது. துஷ்யந்த் சவுதாலாவின் ஜேஜேபி கட்சி 10 இடங்களைக் கைப்பற்றியது. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் ஜேஜேபி கட்சி மற்றும் சுயேட்சைகள் ஆதரவுடன் பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்தது.

    வரும் சட்டசபைத் தேர்தலில் இந்தியா கூட்டணியின் உள்ள காங்கிரசும், ஆம் ஆதிமியும் தனித்தனியாக களம் காண்கிறது. பாஜக மற்றும் துஷ்யந்த் சவுதாலாவின் ஜேஜேபி கட்சி தனித்து போட்டியிடுகிறது.

    எனவே பா.ஜ.க, காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஜேஜேபி என 4 முனை போட்டி இந்த தேர்தலில் உருவாகியுள்ளது.

    இந்நிலையில், அரியானா மாநிலத்தின் பஞ்சகுலா பகுதியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் பங்கேற்றார். அப்போது அவர் இலவச மின்சாரம், இலவச கல்வி, இலவச மருத்துவம், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் பெண்களுக்கு மாதம் 1000 வழங்கப்படும் என்ற 5 வாக்குறுதிகளை வெளியிட்டார்.

    இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் ஏற்கனவே தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

    • யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் ஜேஜேபி கட்சி மற்றும் சுயேட்சைகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சியை பிடித்தது.
    • இந்தியா கூட்டணியின் உள்ள காங்கிரசும், ஆம் ஆதிமியும் தனித்தனியாக களம் காண்கிறது

    அரியானாவில் விரைவில் நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. முன்னதாக தனித்துக் களம் காண்பதாக காங்கிரஸ் அறிவித்திருந்ததைத் தொடர்ந்து ஆம் ஆத்மி இந்த முடிவை அறிவித்துள்ளது. ஆம் ஆத்மி மூத்த தலைவரும் எம்.பியுமான சஞ்சய் சிங், பஞ்சாப் முதலவர் பகவத் மான் கூட்டாக இந்த முடிவை அறிவித்துள்ளனர்.

     

    பெரும்பான்மைக்கு 46 இடங்கள் தேவையாக உள்ள நிலையில் அரியானாவில் 4 முனை போட்டி உருவாகியுள்ளது. கடைசியாக கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக 40 இடங்களிலும் காங்கிரஸ் 31 இடங்களிலும் வென்றது. துஷ்யந்த் சவுதாலாவின் ஜேஜேபி கட்சி 10 இடங்களை கைப்பற்றியது. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் ஜேஜேபி கட்சி மற்றும் சுயேட்சைகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சியை பிடித்தது.

    ஆனால் இடையிலேயே பாஜகாவுக்கான ஆதரவை ஜேஜேபி தலைவர் துஷ்யந்த் சவுதாலா முறித்துக்கொண்டார். சில சுயேச்சைகளும் பாஜகவுடனான ஆதரவை விலகிக் கொண்டு காங்கிரஸ் பக்கம் சாய்ந்துள்ளதால் தற்போது ஸ்திரத்தன்மை இலலாமல் அரியானாவில் பாஜக ஆட்சி தொடர்ந்து வருகிறது.

    இந்த நிலையில்தான் நடக்க உள்ள சட்டமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணியின் உள்ள காங்கிரசும், ஆம் ஆதிமியும் தனித்தனியாக களம் காண்கிறது. பாஜக ஆதரவை முறித்துக்கொண்ட துஷ்யந்த் சவுதாலாவின் ஜேஜேபி கட்சி யாருக்கும் ஆதரவு தெரிவிக்காமல் கடந்த தேர்தலைப் போல தனித்து போட்டியிடும் என்று தெரிகிறது. எனவே பாஜக - காங்கிரஸ் - ஆம்ஆத்மி-ஜேஜேபி ஆகிய நான்கு கட்சிகளின்  முனை போட்டி  இந்த சட்டமன்றத் தேர்தலில் உருவாகியுள்ளது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தனக்கு வழங்கப்பட்ட ஜாமீன் நிறுத்தி வைக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றார் கெஜ்ரிவால்.
    • சிபிஐ அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக திகார் சிறையில் வைத்து கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

    டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த மார்ச் 21 ஆம் தேதி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்திய மக்களவைத் தேர்தல் நடந்த இடைப்பட்ட காலத்தில் பிரச்சாரம் செய்வதற்காக உச்சநீதிமன்றத்தில் இடைக்கால ஜாமீன் பெற்று வெளியில் வந்த கெஜ்ரிவால் 21 நாட்கள் கழித்து இந்த மாத தொடக்கத்தில் மீண்டும் திகார் சிறைக்கு திரும்பினார்.

    இந்நிலையில் கெஜ்ரிவால் மீது சுமத்தப்பட்ட மற்றொரு குற்றச்சாட்டான கலால் கொள்கை முறைகேடு வழக்கு சம்பந்தமாக சிபிஐ அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக திகார் சிறையில் வைத்து கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இதற்கிடையில் கீழமை நீதிமன்றதில் கெஜ்ரிவாலுக்கு மீண்டும் ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில் அது அமலாக்கத்துறை டெல்லி உயர் நீதிமன்றத்தில் அளித்த மனுவால் நிறுத்திவைக்கப்பட்டது.

    தனக்கு வழங்கப்பட்ட ஜாமீன் நிறுத்தி வைக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றார் கெஜ்ரிவால். கெஜ்ரிவாலின் இந்த மனு மீதான விசாரணை இன்று நடந்த நிலையில், நீதிமன்றத்தில் வைத்தே கலால் கொள்கை வழக்கில் சிபிஐ கெஜ்ரிவாலை கைது செய்துள்ளது. இதனை அடுத்து உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் தடையை எதிர்த்து தான் அளித்த மனுவை கெஜ்ரிவால் வாபஸ் பெற்றுக்கொண்டார். மேலும் நீதிமன்றத்தில் தனது உடலில் ரத்த சர்க்கரை அளவு குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

    ஜாமீன் வழங்கப்பட்டு கெஜ்ரிவால் வெளியே வந்துவிடக்கூடாது என்ற நோக்கத்திலேயே பாஜக அரசு சிபிஐ அதிகாரிகளை ஏவி இந்த திடீர் கைதை அரங்கேற்றியுள்ளது என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது. கெஜ்ரிவால் விஷயத்தில் அடுத்தடுத்து பரபரப்பான வகையில் காட்சிகள் மாறி வரும் நிலையில் இந்த விவகாரத்தில் அடுத்து என்ன நடக்கும் என்பதே இப்போது அனைவரின் கேள்வியாக உள்ளது.  மேலும் ஜாமீன் கேட்டு புதிய மனு ஒன்றை கெஜ்ரிவால் தாக்கல் செய்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    • காந்தி நினைவிடத்தில் டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் மரியாதை செலுத்தினார்.
    • பாராளுமன்ற தேர்தலுக்கான கருத்துக் கணிப்புகள் அனைத்தும் போலியானவை என்றார்.

    புதுடெல்லி:

    டெல்லி அரசின் மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் முதல்-மந்திரி கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். அவருக்கு தேர்தல் பிரசாரம் செய்வதற்காக சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால ஜாமீன் வழங்கியது. இந்த ஜாமின் நேற்று முடிவடைந்தது.

    இதற்கிடையே, டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ஆம் ஆத்மி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், பாராளுமன்ற தேர்தலுக்கான கருத்துக் கணிப்புகள் அனைத்தும் போலியானவை. சர்வாதிகாரத்திற்கு எதிராகப் போராடுகிறேன். இந்த மாதிரியான சர்வாதிகாரத்தை நம் நாடு பொறுத்துக்கொள்ள முடியாது என்றார்.

    முன்னதாக, மகாத்மா காந்தி நினைவிடத்தில் டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மரியாதை செலுத்தினார். கெஜ்ரிவாலுடன் ஆம் ஆத்மி மந்திரிகள், நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    இந்நிலையில், டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் திகார் சிறையில் இன்று மாலை சரணடைந்தார்.

    • காந்தி நினைவிடத்தில் டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் மரியாதை செலுத்தினார்.
    • பாராளுமன்ற தேர்தலுக்கான கருத்துக் கணிப்புகள் அனைத்தும் போலியானவை என்றார்.

    புதுடெல்லி:

    டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ஆம் ஆத்மி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

    பாராளுமன்ற தேர்தலுக்கான கருத்துக் கணிப்புகள் நேற்று வெளியாகின. எழுத்துப்பூர்வமாக எடுத்துக் கொள்ளுங்கள், இந்த கருத்துக் கணிப்புகள் அனைத்தும் போலியானவை.

    ஒரு கருத்துக்கணிப்பு ராஜஸ்தானில் பா.ஜ.க.வுக்கு 33 இடங்களைக் கொடுத்தது. அங்கு 25 இடங்கள் மட்டுமே உள்ளன.

    உண்மையான பிரச்சனை என்னவென்றால் வாக்கு எண்ணிக்கைக்கு 3 நாளுக்கு முன் அவர்கள் ஏன் போலியான கருத்துக்கணிப்பைச் செய்யவேண்டும் என்பதுதான். இது தொடர்பாக பல கோட்பாடுகள் உள்ளன, அவற்றில் ஒன்று அவர்கள் இயந்திரங்களைக் கையாள முயற்சிக்கிறார்கள்.

    கெஜ்ரிவால் அனுபவம் வாய்ந்த திருடன் என்பதால் அவருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என நான் நம்புகிறேன் என்று பிரதமர் மோடி பேட்டியில் கூறினார்.

    நான் அனுபவம் வாய்ந்த திருடன் என்று வைத்துக் கொள்வோம். உங்களிடம் ஆதாரம் இல்லை, என்மீது எந்த மீட்டெடுப்பும் இல்லை, அதனால் எந்த ஆதாரமும் இல்லாமல் என்னை சிறையில் அடைத்தீர்களா? இவனை சிறையில் அடைத்தால் முடியும் என்று நாடு முழுக்க ஒரு செய்தியை கொடுத்தார்.

    ஒரு போலி வழக்கில் உங்கள் நிலைப்பாடு என்ன? யாரை வேண்டுமானாலும் கைதுசெய்து சிறையில் அடைப்பேன். நான் இந்த சர்வாதிகாரத்திற்கு எதிராகப் போராடுகிறேன். இந்த மாதிரியான சர்வாதிகாரத்தை நம் நாடு பொறுத்துக்கொள்ள முடியாது.

    அதிகாரம் சர்வாதிகாரமாக மாறும்போது சிறையும் பொறுப்பு என பகத்சிங் கூறினார். நாட்டை விடுவிக்க பகத்சிங் தூக்கிலிடப்பட்டார். இந்த முறை ஜெயிலுக்கு போகும்போது எப்போது வருவேன் என தெரியவில்லை. பகத் சிங் தூக்கிலிடப்பட்டார். நானும் தூக்குமேடை ஏற தயார் என தெரிவித்தார்.

    திகார் சிறையில் சரணடைவதற்கு முன் காந்தி நினைவிடத்தில் டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் மரியாதை செலுத்தினார். கெஜ்ரிவாலுடன் ஆம் ஆத்மி மந்திரிகள், நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    • "4 ஆம் தேதி அனைத்து எக்சிட் போல்களும் தவறானவை என்று நிரூபிக்கப்படும்"
    • நாளை மறுநாள் (ஜூன் 4) வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

    மக்களவைத் தேர்தலுக்கான ஏழு கட்ட வாக்குப்பதிவு நேற்று (ஜூன் 1) மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியிடப்பட்டன. பாஜக 400 இடங்கள் என்பதை இலக்காக கொண்டு தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணி 350 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என அனைத்து கருத்துக் கணிப்புகளும் தெரிவிக்கின்றன.

    கடந்த 2019 தேர்தலில் பாஜக 333 இடங்களை கூட்டணியாக பிடித்தது. தற்போது 20 இடங்கள் கூடுதலாக பிடிக்கும் என கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பாஜக கூட்டணியால் 200 இடங்களை தாண்ட முடியாது என இந்தியா கூட்டணி கட்சிகள் தெரிவித்த நிலையில் கருத்துக்கணிப்பை மீறி இந்தியா கூட்டணியே வெற்றி பெறும் என்று அதன் தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில் இந்தியா ஆம் ஆத்மி மூத்த தலைவரும் ஆம் ஆத்மி எம்.எல்.ஏவுமான சோம்நாத் பாரதி எக்ஸிட் போல்கள் அனைத்தும் பொய்யாகி இந்தியா கூட்டணியே ஆட்சி அமைக்கும் என்றும் அதைமீறி பாஜக வென்று பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்தால் தனது தலையை மொட்டையடித்து கொள்வதாக தெரிவித்துள்ளதார்.

    கருத்துக்கணிப்புகள் வெளியான பிறகு தனது எக்ஸ் பக்கதில் அவர், - மோடி மூன்றாவது முறையாக பிரதமர் ஆனால் நான் எனது தலையை மொட்டை அடித்துக்கொள்வேன். எனது வார்த்தையை குறித்து வைத்துக் கொள்ளுங்கள், 4 ஆம் தேதி அனைத்து எக்சிட் போல்களும் தவறானவை என்று நிரூபிக்கப்படும். பிரதமர் மோடி 3-வது முறையாக பிரதமர் ஆக மாட்டார். டெல்லியில் 7 சீட்களிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையில் நாளை மறுநாள் (ஜூன் 4) வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாவது குறிப்பிடத்தக்கது.  

    • தனது அரசியல் வாழ்க்கையை காப்பாற்றிக்கொள்ள பாஜகவில் சேருமாறு வறுப்புத்தப்பட்டதாகவும் கூறினார்
    • டெல்லி பாஜக ஊடகப்பிரிவுத் தலைவர் சங்கர் கபூர் , கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி அதிஷி மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் மீது அவதூறு வழக்குத் தொடர்ந்தார்.

    ஆம் ஆதிமி கட்சியின் முக்கிய தலைவரும் டெல்லியின் கல்வி அமைச்சருமான அதிசி, பாஜக குறித்து அவதூறாக பேசியாத தொடரப்பட்ட வழக்கில் வரும் ஜூன் 29 ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி டெல்லி உயர்நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

    ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 7 பேரை பாஜக ரூ.25 கோடிக்கு விலைக்கு வாங்க முயன்றதாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியிருந்தார். கடந்த ஏப்ரல் மாதம் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் டெல்லி அமைச்சர் அதிஷி பேசுகையில், தனக்கு நெருக்கமானவர்கள் மூலம் பாஜக தன்னை விலைக்கு வாங்க முயன்றதாகவும், தனது அரசியல் வாழ்க்கையை காப்பாற்றிக்கொள்ள பாஜகவில் சேருமாறு வறுப்புத்தப்பட்டதாகவும் கூறினார். இதற்கு மறுத்தால் ஒரு மாதத்துக்குள் அமலாக்கத்துறையை அனுப்பி கைது செய்துவிடுவோம் என்று பாஜக மிரட்டியதாக தெரிவித்திருந்தார்.

     

    இதைதொடர்ந்து டெல்லி பாஜக ஊடகப்பிரிவுத் தலைவர் சங்கர் கபூர் , கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி அதிஷி மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் மீது அவதூறு வழக்குத் தொடர்ந்தார். அதிஷி ஊடகத்தின் முன்னிலையிலும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

     

    இந்நிலையில்தான் அதிஷி ஜூன் 29 ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. முன்னதாக ஜூன்1 ஆம் தேதி கெஜ்ரிவாலின் ஜாமின் முடிய உள்ள நிலையில் அவரின் ஜாமீன் நீட்டிப்பு கோரிக்கை மனுவை உடனே விசாரிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் இன்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • டெல்லியில் மொத்தமுள்ள 7 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று நடந்து வருகிறது.
    • பயங்கரவாதத்திற்கு ஆதரவளித்து வருபவர்களின் தலையீட்டை இந்தியா சகித்துக்கொள்ளாது என்றார்.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் மொத்தமுள்ள 7 தொகுதிகள், அரியானாவில் மொத்தமுள்ள 10 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று நடந்து வருகிறது.

    6-வது கட்ட மக்களவை தேர்தலை முன்னிட்டு டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார்.

    அதன்பின் அவர் கூறுகையில், என்னுடைய தந்தை, மனைவி மற்றும் குழந்தைகளுடன் வந்து வாக்கு செலுத்தினேன். என்னுடைய தாயார் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் செல்ல முடியவில்லை. சர்வாதிகாரம், வேலைவாய்ப்பின்மை, பணவீக்கத்துக்கு எதிராக வாக்களித்து இருக்கிறேன். நீங்களும் சென்று வாக்கை செலுத்துங்கள் என தெரிவித்தார்.

    இதற்கிடையே, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் ஆட்சியின்போது மந்திரியாக இருந்த பவத் உசைன் எக்ஸ் சமூக ஊடகத்தில் வெளியிட்ட செய்தியில், வெறுப்பு மற்றும் பயங்கரவாதம் ஆகிய சக்திகளை அமைதி மற்றும் நல்லிணக்கம் ஆகியவை வீழ்த்தட்டும் என பதிவிட்டிருந்தார்.

    இந்நிலையில், இதற்கு அரவிந்த் கெஜ்ரிவால் பதிலளித்து கூறுகையில், சவுத்ரி அவர்களே, எங்களுடைய விவகாரங்களை கையாள்வதற்கு நானும், என்னுடைய நாட்டு மக்களும் முழு அளவில் திறன் படைத்தவர்களாக இருக்கிறோம். உங்களுடைய டுவிட் பதிவு தேவையற்றது. பாகிஸ்தானில் இப்போதுள்ள நிலைமையோ மிக மோசம். நீங்கள் உங்களுடைய நாட்டை கவனித்து கொள்ளுங்கள். இந்தியாவில் நடைபெறும் தேர்தல் எங்களுடைய உள்நாட்டு விவகாரம். பயங்கரவாதத்திற்கு பெரிய அளவில் ஆதரவு அளித்து வருபவர்களின் தலையீட்டை இந்தியா சகித்துக்கொள்ளாது என தெரிவித்தார்.

    • டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சி அலுவலகம் வந்தார்.
    • அங்கிருந்து கட்சி எம்.எல்.ஏ.க்கள், தொண்டர்களுடன் பா.ஜ.க. அலுவலகம் நோக்கிச் சென்றனர்.

    புதுடெல்லி:

    ஆம் ஆத்மி எம்.பி.யான ஸ்வாதி மலிவால் விவகாரத்தில் பிபவ் குமார் கைது செய்யப்பட்டார்.

    இதற்கிடையே, டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று வீடியோ வெளியிட்டு போராட்டம் அறிவித்தார். அதில், பிரதமருக்கு சொல்கிறேன். ஆத் ஆத்மி கட்சியினர் யாரை வேண்டுமானாலும் சிறையில் அடைக்கலாம். மனிஷ் சிசோடியா, சஞ்சய் சிங் என ஒவ்வொருவராக சிறையில் அடைக்கலாம். மே 19-ம் தேதி மதியம் 12 மணிக்கு ஆம் ஆத்மி கட்சி எம்.பி, எம்.எல்.ஏக்கள் ஒவ்வொருவரும் பா.ஜ.க. அலுவலகத்தை முற்றுகையிட போகிறோம். நீங்கள் விரும்பும் அனைவரையும் ஒரே இடத்தில் கைது செய்யலாம் என குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று காலை ஆம் ஆத்மி கட்சி அலுவலகம் வந்தார். அங்கிருந்து கட்சி எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள், தொண்டருடன் பா.ஜ.க. அலுவலகம் நோக்கிச் செல்ல தொடங்கினர்.

    சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள பாஜக அலுவலகம் நோக்கிச் சென்ற ஆம் ஆத்மி கட்சியினரை டெல்லி போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    பா.ஜ.க. அலுவலகம் உள்ள பகுதியில் டெல்லி போலீஸ் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஆம் ஆத்மி எம்.பி.யான ஸ்வாதி மாலிவால் விவகாரத்தில் பிபவ் குமார் கைது செய்யப்பட்டார்.
    • எங்களை அழிக்க பா.ஜ.க. மூன்று திட்டங்களை வகுத்துள்ளது என்றார் டெல்லி முதல் மந்திரி.

    புதுடெல்லி:

    ஆம் ஆத்மி எம்.பி.யான ஸ்வாதி மலிவால் விவகாரத்தில் பிபவ் குமார் கைது செய்யப்பட்டார்.

    இதற்கிடையே, டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று வீடியோ வெளியிட்டு போராட்டம் அறிவித்தார். அதில், பிரதமருக்கு சொல்கிறேன். ஆத் ஆத்மி கட்சியினர் யாரை வேண்டுமானாலும் சிறையில் அடைக்கலாம். மனிஷ் சிசோடியா, சஞ்சய் சிங் என ஒவ்வொருவராக சிறையில் அடைக்கலாம். மே 19-ம் தேதி மதியம் 12 மணிக்கு ஆம் ஆத்மி கட்சி எம்.பி, எம்.எல்.ஏக்கள் ஒவ்வொருவரும் பா.ஜ.க. அலுவலகத்தை முற்றுகையிட போகிறோம். நீங்கள் விரும்பும் அனைவரையும் ஒரே இடத்தில் கைது செய்யலாம் என குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில், ஆம்ஆத்மி கட்சி அலுவலகத்தில் தொண்டர்கள் மத்தியில் டெல்லி முதல் மந்திரியும், கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது:

    ஆம் ஆத்மி கட்சியின் வளர்ச்சியைப் பார்த்து பிரதமர் மோடி பயப்படுகிறார். ஆம் ஆத்மி கட்சியை அழிக்க பா.ஜ.க. முயற்சிக்கிறது. கட்சியை நசுக்க விரும்புகிறது.

    ஆம் ஆத்மி கட்சி வளர்ந்து வருவதாகவும், அவர்களது பணி உலகம் முழுவதும் விவாதிக்கப்படுவதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார். அவருக்கு தெரிந்த நபர்கள் எனக்கு தெரியும். அவர்கள் என்னிடம் இதை தெரிவித்தனர்.

    ஆம் ஆத்மி கட்சியை முற்றிலும் ஒழிக்க 'ஆபரேஷன் ஜாது' என்ற பெயரில் நடவடிக்கையை தொடங்கி உள்ளனர். ஆம் ஆத்மி கட்சியின் பெரிய தலைவர்கள் கைது செய்யப்படுவார்கள்.

    ஆம் ஆத்மி கட்சியின் வங்கி கணக்கு தேர்தலுக்கு பிறகு முடக்கப்படும். வங்கி கணக்குகள் முடக்கப்படும் என அமலாக்கத்துறை வக்கீல் ஏற்கனவே கோர்ட்டில் அறிக்கை அளித்துள்ளார். இப்போது எங்கள் கணக்கை முடக்கினால் எங்களுக்கு அனுதாபம் கிடைக்கும் என்று கூறினார்.

    வங்கி கணக்கு முடக்கம், அலுவலகத்துக்கு சீல், நாங்கள் வீதிக்கு கொண்டு வரப்படுவோம். இவைதான் பாரதிய ஜனதாவின் திட்டமாகும்.

    2015-ம் ஆண்டு நான் ஆட்சிக்கு வந்ததில் இருந்து எத்தனை குற்றச்சாட்டுகளை அவர்கள் (பா.ஜ.க.) எழுப்பினார்கள். இப்போது மதுபான கொள்கை ஊழல் நடந்ததாகச் சொல்கிறார்கள். ஊழல் நடந்ததா என்று மக்கள் கேட்கிறார்கள். பணம் எங்கே? மற்ற இடங்களில் சோதனை நடக்கும்போது நோட்டுகள், தங்கம் மீட்கப்படுகிறது. ஆனால் இங்கு எதுவும் கிடைக்கவில்லை. பாரதிய ஜனதாவினர் பொய் வழக்குகளைப் போட்டு கைதுசெய்தனர் என தெரிவித்தார்.

    • ஆம் ஆத்மி எம்.பி.யான ஸ்வாதி மாலிவால் விவகாரத்தில் பிபவ் குமார் கைது செய்யப்பட்டார்.
    • இதற்கிடையே, டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வீடியோ வெளியிட்டு போராட்டத்தை அறிவித்துள்ளார்.

    மும்பை:

    ஆம் ஆத்மி எம்.பி.யான ஸ்வாதி மலிவால் விவகாரத்தில் பிபவ் குமார் கைது செய்யப்பட்டார்.

    இதற்கிடையே, டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வீடியோ வெளியிட்டு போராட்டத்தை அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக கெஜ்ரிவால் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், பிரதமருக்கு சொல்கிறேன். ஆத் ஆத்மி கட்சியினர் யாரை வேண்டுமானாலும் சிறையில் அடைக்கலாம். மனிஷ் சிசோடியா, சஞ்சய் சிங் என ஒவ்வொருவராக சிறையில் அடைக்கலாம். மே 19-ம் தேதி மதியம் 12 மணிக்கு ஆம் ஆத்மி கட்சி எம்.பி, எம்.எல்.ஏக்கள் ஒவ்வொருவரும் பா.ஜ.க. அலுவலகத்தை முற்றுகையிட போகிறோம். நீங்கள் விரும்பும் அனைவரையும் ஒரே இடத்தில கைது செய்யலாம் என பதிவிட்டுள்ளார்.

    இந்நிலையில், சிவசேனா எம்.பி.யான சஞ்சய் ராவத் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ஆம் ஆத்மியின் பாஜக அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நான் வரவேற்கிறேன். ஜூன் 4-ம் தேதி ஆட்சி மாறப்போகிறது. இன்றும் எதிர்க்கட்சிகளை மிரட்டுவது டெல்லியில் மட்டுமல்ல, மும்பையிலும் நடக்கிறது என தெரிவித்தார்.

    • டெல்லியில் மே 25-ம் தேதி பாராளுமன்ற தேர்தலுக்கான 6-வது கட்ட வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
    • வடகிழக்கு டெல்லி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் கன்னையா குமார் களமிறங்குகிறார்.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் மே 25-ம் தேதி பாராளுமன்ற தேர்தலுக்கான 6-வது கட்ட வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

    வடகிழக்கு டெல்லி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் கன்னையா குமார் வேட்பாளராக களமிறங்கி உள்ளார். இதில் பா.ஜ.க. சார்பில் இரு முறை எம்.பியாக தேர்வு செய்யப்பட்ட மனோஜ் திவாரி போட்டியிடுகிறார்.

    இந்நிலையில், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த கன்னையா குமார் மீது நேற்று தாக்குதல் நடத்தப்பட்டது. இதுதொடர்பான

    வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.

    டெல்லி நியூ உஸ்மான்பூர் பகுதியில் உள்ள ஆம் ஆத்மி அலுவலகம் அருகே பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்களால் கன்னையா குமார் தாக்கப்பட்டதாக ஆம் ஆத்மி கவுன்சிலர் புகார் தெரிவித்தார்.

    அதில், சில நபர்கள் கன்னையா குமாருக்கு மாலை அணிவித்ததாகவும், அதன்பின் அவர்கள் கன்னையா மீது மையை பூசி அவரை தாக்க முயன்றதாகவும் கூறப்பட்டுள்ளது.

    இதுகுறித்து கன்னையா குமார் கூறுகையில், தாக்குதலின் பின்னணியில் பா.ஜ.க. வேட்பாளர் மனோஜ் திவாரி இருக்கிறார். தனது புகழ் அதிகரித்து வருவதால் விரக்தியில் இருக்கும் மனோஜ் திவாரி ரவுடிகளை அனுப்பி இதனை செய்துள்ளார் என தெரிவித்தார்.

    ×