என் மலர்
நீங்கள் தேடியது "vote count"
- கடந்த 15 ஆண்டுகளாக டெல்லி மாநகராட்சி பாஜக வசம் இருந்தது.
- 250 வார்டுகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
கடந்த 4-ஆம் தேதி நடைபெற்ற டெல்லி மாநகராட்சிக்கான தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. மொத்தம் உள்ள 250 வார்டுகளில் பதிவான வாக்குகள் 42 வாக்கு எண்ணும் மையங்களில் நடைபெற்று வருகிறது. இந்த பணியை 68 கண்காணிப்பாளர்கள் கண்காணித்து வருகின்றனர்.
கடந்த 15 ஆண்டுகளாக டெல்லி மாநகராட்சி பாஜக வசம் இருந்தது. இந்நிலையில் இன்று நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில் காலை 10 மணி நிலவரப்படி ஆம் ஆத்மி 122 வார்டுகளில் முன்னிலையில் உள்ளது. பாஜக 113 வார்டுகளிலும், காங்கிரஸ் 10 வார்டுகளிலும் முன்னிலை வகிக்கின்றன.
பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு தனி பெரும்பான்மை பலம் கிடைக்க வாய்ப்பு இல்லை என்று இந்த மாத தொடக்கத்தில் தகவல்கள் வெளியானது.
இதையடுத்து மாநில கட்சிகளின் ஆதரவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்று பரபரப்பாக பேசப்பட்டது.
இதையடுத்து மாநில கட்சி தலைவர்களில் சிலர் கிங்மேக்கர்களாக மாற ஆசைப்பட்டு காய்களை நகர்த்தினார்கள். குறிப்பாக சந்திரபாபு நாயுடு கடந்த 2 வாரமாக மாநிலம் மாநிலமாக சென்று எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து பேசினார்.
ராகுல், மாயாவதி, அகிலேஷ் யாதவ், மம்தா பானர்ஜி, சரத்பவார், சீத்தாராம் யெச்சூரி, டி.ராஜா, அரவிந்த் கெஜ்ரிவால் என்று அவர் நிறைய பேரை சந்தித்து ஓரணியில் திரட்ட தீவிர முயற்சி செய்தார். காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைத்து விட வேண்டும் என்பது அவரது இலக்காக இருந்தது.
அதுபோல தெலுங்கானா முதல்-மந்திரி சந்திர சேகரராவும் மற்றொரு பக்கத்தில் காய்களை நகர்த்தினார். மம்தாபானர்ஜி, பினராயி விஜயன், நவீன் பட்நாயக், மு.க.ஸ்டாலின் ஆகியோரை சந்தித்து பேசினார்.

3-வது அணியை உருவாக்கி மாநில கட்சி தலைவர் ஒருவரை பிரதமர் ஆக்க வேண்டும் என்பது அவரது இலக்காக இருந்தது. அவரது ஆசையெல்லாம் மம்தாபானர்ஜியை பிரதமர் ஆக்கி விட வேண்டும் என்று கிங்மேக்கர் போல ஆசைப்பட்டார்.
இதற்கிடையே தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரும் கடந்த 2 தினங்களாக ஜெகன்மோகன் ரெட்டி, நவீன் பட்நாயக் ஆகியோரை தொடர்பு கொண்டு பேசி வந்தார். காங்கிரஸ் ஆட்சி அமைக்க அவர் கிங்மேக்கராக இருக்க வேண்டும் என்று நினைத்தார்.
ஆனால் அவரது இலக்கும் தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் மாநில கட்சி தலைவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி வைத்தியமாக மாறி உள்ளது.
மாநில கட்சி தலைவர்களில் 90 சதவீதம் பேர் தோல்வியை சந்தித்து உள்ளனர். எதிர்பார்த்த அளவுக்கு அவர்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை.
இதனால் கிங்மேக்கர்களின் ஆசை நிராசையாக மாறி போனது.
நாகர்கோவில்:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் நாகர் கோவிலில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் நடந்து முடிந்த பின்னர் தேர்தல் அதிகாரிகளின் செயல்பாடுகள் அதிகார வரம்பு மீறிய செயலாக உள்ளது என்று கோர்ட்டு கூறி உள்ளது. கடந்த 18-ந் தேதி ஓட்டுப்பதிவு நடந்து முடிந்த பிறகு தேர்தல் விதி முறைக்கு மாறாக வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ள அறைக்குள் அதிகாரிகள் சென்று வந்து உள்ளனர். சில ஆவணங்களையும் அவர்கள் எடுத்துச் சென்று உள்ளனர். இதுதொடர்பாக அந்த மாவட்ட கலெக்டர் மாற்றப்பட்டு உள்ளார். அதேபோல கோவையில் இருந்து தேனிக்கு கொண்டு வரப்பட்டு உள்ள விவிபேடு எந்திரங்களும் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. இது மாநில தேர்தல் அதிகாரி சரியாக நடந்து கொள்ளவில்லை என்பதை காட்டுகிறது.
எனவே வருகிற 23-ந்தேதி தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் போது ஓட்டு எண்ணிக்கையை கண்காணிக்க உயர்மட்ட அதிகாரி ஒருவரை மத்திய தேர்தல் கமிஷன் நியமிக்க வேண்டும்.
தேர்தல் முடிவுகளுக்கு பிறகு மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவேதான் சபாநாயகர், அ.தி.மு.க.வை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீசு அனுப்பி உள்ளார். தற்போது அந்த நோட்டீசுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்து உள்ளது. உள்ளாட்சி தேர்தலை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்த வேண்டும். ஆனால் மாநில அரசு மேலும் 3 மாத காலம் அவகாசம் கேட்டிருப்பது ஏற்கத்தக்கது அல்ல. உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்.
மத்தியில் மதசார்பற்ற அரசு அமைய வேண்டும் என்பதுதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் விருப்பம். ஓட்டு எண்ணிக்கை நடந்து முடிந்த பிறகு இது பற்றி முடிவு செய்யப்படும்.
தமிழகத்தில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதை தீர்ப்பதற்கு மாநில அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு பள்ளிகளில் பணிபுரியும் 1700 ஆசிரியர்களுக்கு அவர்கள் தகுதித் தேர்வில் வெற்றி பெற வில்லை என்பதற்காக சம்பளம் நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு சம்பளம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ளவர்கள் விடுதலை தொடர்பாக இதுவரையிலும் கவர்னர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உடனடியாக அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதுரை-திருவனந்தபுரம் இரட்டை ரெயில் பாதை பணிகள் மிகவும் மந்தமான நிலையில் நடந்து வருகிறது. அதனை விரைவுப்படுத்த வேண்டும். இந்தியா முழுவதும் எந்த மாநிலங்களை சேர்ந்தவர்களும் எங்கும் சென்றுவரலாம் என்ற நிலை உள்ளது. அதேசமயம் தமிழர்களின் வேலைவாய்ப்பை பாதிக்கும் எந்த நடவடிக்கைகளும் நடைபெறக்கூடாது இதற்கு மாநில அரசு உத்தரவாதம் வழங்க வேண்டும்.
புதுச்சேரி கவர்னர், புதுச்சேரி அரசுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் தவறு என்று ஐகோர்ட்டு கூறி உள்ளது. ஆனால் அதற்கு எதிராக மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருப்பது ஏற்கக்கூடியது அல்ல. புதுச்சேரி கவர்னர் உடனடியாக பதவி விலக வேண்டும். ஈரானில் இருந்து எண்ணை வாங்கக்கூடாது என்று அமெரிக்கா விதித்து உள்ள தடை இந்தியாவுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த தடையை நாம் ஏற்கக்கூடாது.
குமரி மாவட்டத்தில் தனியார் வன பாதுகாப்பு சட்டம் கடுமையான பாதிப்புகளை மக்களுக்கு உருவாக்கி உள்ளது. சொந்த நிலத்தில் மரங்களை வெட்டுவதற்கு கூட அவர்களால் முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. அதுபோல நிலம் விற்கவோ, வாங்கவோ கலெக்டர் அனுமதி வேண்டும். எனவே அந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.