search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    3 மாநிலங்களில் பாஜக முன்னிலை- நன்றி தெரிவித்து பிரதமர் மோடி டுவீட்
    X

    3 மாநிலங்களில் பாஜக முன்னிலை- நன்றி தெரிவித்து பிரதமர் மோடி டுவீட்

    • மூன்று மாநிலங்களிலும் பாஜக ஆட்சியை பிடிக்கும் சூழலில் உள்ளது.
    • தெலுங்கானாவுடனான எங்களின் பந்தம் பிரிக்க முடியாதது, மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவோம்.

    மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் கடந்த நவம்பர் 7ம் தேதி முதல் 30ம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக நடைபெற்றது.

    இந்நிலையில், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. மிசோரம் மாநிலத்தில் மட்டும் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது.

    இதில், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து பாஜக முன்னிலை வகித்து வருகிறது. இந்த மூன்று மாநிலங்களிலும் பாஜக ஆட்சியை பிடிக்கும் சூழலில் உள்ளது.

    இந்நிலையில், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்துகளையும், நன்றியும் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கூறப்பட்டிருப்பதாவது:-

    மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களின் தேர்தல் முடிவுகள், இந்திய மக்கள் நல்லாட்சி மற்றும் வளர்ச்சி அரசியலில் மட்டுமே நம்பிக்கை வைத்துள்ளனர் என்பதைக் காட்டுகிறது. அவர்களின் நம்பிக்கை பாஜகவின் மீது உள்ளது.

    இந்த அனைத்து மாநிலங்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும், குறிப்பாக தாய்மார்கள், சகோதரிகள், மகள்கள் மற்றும் நமது இளம் வாக்காளர்கள், பாஜக மீது தங்கள் அன்பையும் நம்பிக்கையையும் ஆசீர்வாதத்தையும் பொழிந்ததற்காக நான் மனதார நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    உங்கள் நலனுக்காக தொடர்ந்து அயராது பாடுபடுவோம் என்று உறுதியளிக்கிறேன்.

    இத்தருணத்தில், உழைக்கும் கட்சித் தொண்டர்கள் அனைவருக்கும் நன்றிகள். நீங்கள் அனைவரும் ஒரு அற்புதமான முன்மாதிரியை அமைத்துள்ளீர்கள். வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்குடன் நாங்கள் முன்னேறி வருகிறோம். நாம் நிறுத்தவோ சோர்வடையவோ வேண்டியதில்லை. இந்தியாவை வெற்றி பெறச் செய்ய வேண்டும். இன்று நாம் இணைந்து இந்த திசையில் ஒரு வலுவான அடியை எடுத்து வைத்துள்ளோம்.

    தெலுங்கானாவின் என் அன்பு சகோதரிகளே மற்றும் சகோதரர்களே, பாஜக மீது உங்கள் ஆதரவுக்கு நன்றி. கடந்த சில ஆண்டுகளாக, இந்த ஆதரவு அதிகரித்து வருகிறது. வரும் காலங்களிலும் இந்த போக்கு தொடரும்.

    தெலுங்கானாவுடனான எங்களின் பந்தம் பிரிக்க முடியாதது, மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவோம். ஒவ்வொரு பாஜக நிர்வாகியின் தீவிர முயற்சிகளையும் நான் பாராட்டுகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    Next Story
    ×