என் மலர்
சிக்கிம்
- சிக்கிமில் பெய்த கனமழையால் லாச்சென், லாச்சுங், சுங்தாங் பள்ளத்தாக்குகள் பாதிக்கப்பட்டன.
- இந்திய ராணுவம் தற்காலிக பாதையை அமைத்து, சுற்றுலாப் பயணியர் ஆற்றை கடக்க உதவினர்.
காங்டாக்:
வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால் லாச்சென், லாச்சுங் மற்றும் சுங்தாங் பள்ளத்தாக்குகள் பாதிக்கப்பட்டன. இதனால், வடக்கு சிக்கிம் மாவட்ட தலைநகரமான மங்கனில் இருந்து சுங்தாங் செல்லும் சாலை துண்டிக்கப்பட்டு, போக்குவரத்து பாதிப்பு அடைந்தது. நிலச்சரிவால் சுற்றுலா பயணிகள் தவித்தனர்.
தகவலறிந்து இந்திய ராணுவம் களமிறங்கியது. கனமழை மற்றும் சீரற்ற காலநிலைக்கு இடையிலும் தற்காலிக பாதையை அமைத்து சுற்றுலா பயணியர் ஆற்றைக் கடக்க உதவினர்.
நேற்று மாலை வரை 3,500 சுற்றுலா பயணியர் மீட்கப்பட்டுள்ளனர். மருத்துவ உதவி மையங்கள் அமைக்கப்பட்டு, வெளியேற்றப்பட்ட சுற்றுலா பயணியருக்கு தேவையான மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டன.
அடுத்த சில தினங்களுக்கு சிக்கிமில் கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
- பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலா வந்த சுமார் 500 பேர் சுங்தாங் பகுதியில் சிக்கி கொண்டனர்.
- இந்திய ராணுவ வீரர்கள் அங்கு விரைந்து சென்று 54 குழந்தைகள் உள்பட அனைவரையும் பத்திரமாகமீட்டனர்.
லாச்சுங்:
சிக்கிம் மாநிலத்தில் உள்ள லாச்சுங் மற்றும் லாச்சென் பள்ளத்தாக்கு பகுதி சிறந்த சுற்றுலா தளமாக திகழ்ந்து வருகிறது. தற்போது கோடை விடுமுறையையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக இப்பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. நிலச்சரிவும் ஏற்பட்டது. இதனால் ரோடுகள் சேதமாகி போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலா வந்த சுமார் 500 பேர் சுங்தாங் பகுதியில் சிக்கி கொண்டனர். இது பற்றி தகவல் அறிந்த இந்திய ராணுவ வீரர்கள் அங்கு விரைந்து சென்று 54 குழந்தைகள் உள்பட அனைவரையும் பத்திரமாகமீட்டனர்.
பின்னர் மீட்கப்பட்ட 500 பேரையும் தாங்கள் தங்கி இருந்த 3 ராணுவ முகாம்களுக்கு அழைத்துசென்று தங்க வைத்தனர். அவர்களுக்கு சூடான உணவு, காபி மற்றும் குளிரை தாங்கும் உடைகளை வழங்கப்பட்டது.
- சிக்கிம் மாநிலத்தின் மொத்த மக்கள்தொகை வெறும் 7 லட்சம்.
- இங்கு குழந்தை பிறப்பு விகிதம் 1.1 சதவீதமாக உள்ளது.
காங்டாக்:
சிக்கிம் மாநிலத்தின் மொத்த மக்கள்தொகை வெறும் 7 லட்சம் ஆகும். இதுதான் நாட்டிலேயே மிகவும் குறைவு. குழந்தை பிறப்பு விகிதம் 1.1 சதவீதமாக உள்ளது.
சிக்கிம் மாநிலத்தின் பூர்வகுடி சமூகங்களிடையே குழந்தை பிறப்பு விகிதம் குறைவாக இருப்பது குறித்து முதல் மந்திரி பிரேம்சிங் தமங் கடந்த ஜனவரி மாதம் கவலை தெரிவித்தார். குழந்தை பெற்றுக் கொள்வதை ஊக்கப்படுத்த ஊதிய உயர்வு அளிக்க உள்ளதாக அறிவித்தார்.
இந்நிலையில், இரு குழந்தைகளுக்கு மேல் வைத்துள்ள மாநில அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கும் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. 2 குழந்தைகள் வைத்திருந்தால் ஒரு முன்பணம் பெறலாம். 3 குழந்தைகள் வைத்திருந்தால் கூடுதல் ஊதிய உயர்வு பெறலாம்.
கணவன், மனைவி இருவருமே அரசு ஊழியர்களாக இருந்தால் ஒருவர் மட்டும் பெற்றுக்கொள்ளலாம். கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் முன்தேதியிட்டு இந்தச் சலுகை அமலுக்கு வருகிறது. ஆனால் குழந்தையை தத்தெடுப்பவர்களுக்கு இச்சலுகை கிடையாது.
- சிக்கிமின் நாதுலா என்ற பகுதியில் திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது.
- இந்தப் பனிச்சரிவில் சிக்கி 6 பேர் பலியாகினர்.
கேங்டாங்:
சிக்கிம் மாநிலத்தின் நாதுலா என்ற பகுதியில் இன்று திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 80-க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால் அங்கு மீட்பு பணிகள் துரிதகதியில் நடந்து வருகிறது.
தகவலறிந்த பேரிடர் மீட்புக்குழுவினர் அங்கு விரைந்து சென்றனர்.
இதுவரை 22 சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் விரைவாக நடந்து வருகின்றன. உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். பனிச்சரிவால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என பேரிடர் மீட்புக்குழு தெரிவித்துள்ளது.
- பெண்கள், குழந்தைகள் உள்பட 1000-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் சிக்கி கொண்டனர்.
- தேவையான வசதிகள் மற்றும் மருத்துவ உதவிகளை ராணுவ வீரர்கள் செய்து வருகின்றனர்.
சிக்கிம்:
கிழக்கு சிக்கிம் பகுதியில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிமூட்டம் நிலவுகிறது. இதனால் சிகாங்கு ஏரிப்பகுதியில் பெண்கள், குழந்தைகள் உள்பட 1000-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் சிக்கி கொண்டனர். அவர்களது வாகனங்களை அங்கிருந்து நகரத்தை முடியாமல் தவித்தனர்.
இதுபற்றி அறிந்த ராணுவ வீரர்கள் அவர்களை பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தேவையான வசதிகள் மற்றும் மருத்துவ உதவிகளை ராணுவ வீரர்கள் செய்து வருகின்றனர்.
- சிக்கிமில் இன்று அதிகாலை 4.15 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது.
- இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகியது.
கேங்டாங்:
சிக்கிம் மாநிலத்தில் உள்ள யுஸ்காம் நகரில் இன்று அதிகாலை 4.15 மணியளவில் மிதமான அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் வீட்டைவிட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் புகுந்தனர்.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருளிழப்புகள் மற்றும் பாதிப்பு உள்ளிட்ட விவரங்கள் உடனடியாக வெளிவரவில்லை.
- இத்திட்டத்தை முதல்-மந்திரி பிரேம் சிங் தமாங் தொடங்கிவைத்தார்.
- மரக்கன்றுகள் நடுவது, குழந்தை, பெற்றோர் மற்றும் இயற்கைக்கு இடையிலான பிணைப்பை வலுப்படுத்தும்.
காங்டாக் :
சிக்கிம் மாநிலத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் 100 மரக்கன்றுகள் நட அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
மரம் ஒன்றை நடுங்கள், பாரம்பரியம் ஒன்றை விட்டுச் செல்லுங்கள் என்ற இத்திட்டத்தை முதல்-மந்திரி பிரேம் சிங் தமாங் தொடங்கிவைத்தார்.
குழந்தைப் பிறப்பை நினைவுகூரும்விதமாக இவ்வாறு மரக்கன்றுகள் நடுவது, குழந்தை, பெற்றோர் மற்றும் இயற்கைக்கு இடையிலான பிணைப்பை வலுப்படுத்தும் என்று சிக்கிம் அதிகாரிகள் கூறுகின்றனர்.
திட்டத்தை தொடங்கிவைத்த முதல்-மந்திரி பிரேம் சிங் தமாங் கூறுகையில், 'ஒரு குழந்தை வளர வளர, அதற்காக நடப்பட்ட மரங்களும் வளர்வதைக் கவனிப்பது, பூமிக்கு ஒரு குழந்தையின் வருகையை வரவேற்கும், அதை கொண்டாடும் நல்லதொரு அடையாளம் ஆகும். இது போன்ற ஒரு பசுமை முயற்சி, இந்தியாவிலேயே முதல்முறையாக சிக்கிமில்தான் மேற்கொள்ளப்படுகிறது' என்றார்.
தொடக்க நிகழ்ச்சியின் அடையாளமாக, புதிதாக பெற்றோர் ஆன சில தம்பதியருக்கு மரக்கன்றுகளை முதல்-மந்திரி பிரேம் சிங் தமாங் வழங்கினார்.
- கட்டுப்பாட்டை இழந்த வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
- விபத்தில் காயம் அடைந்த 4 வீரர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சிக்கிம் மாநிலத்தில் ராணுவ வாகன விபத்தில் 16 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சாட்டன் என்ற இடத்தில் இருந்து தாங்கு என்ற இடத்திற்கு ராணுவ வாகனம் சென்று கொண்டிருந்தபோது, ஜீமா என்ற இடத்தில் வளைவில் திரும்ப முயன்றபோது, கட்டுப்பாட்டை இழந்த வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் வாகனத்தில் இருந்த ராணுவ வீரர்களில் 16 பேர் உயிரிழந்துள்ள நிலையில், காயம் அடைந்த 4 வீரர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- இந்திய இராணுவ வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சுற்றுலா பயனிகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
- காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சகிச்சை பெற்று வருகின்றனர்.
சிக்கிமில் உள்ள யுமதங் பள்ளத்தாக்கில் இன்று பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 74 சுற்றுலா பயணிகளை இந்திய இராணுவ வீரர்கள் மீட்டுள்ளனர்.
இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
நிலச்சரிவு குறித்து வெளியிட்ட அறிக்கையில், "யும்தாங் பள்ளத்தாக்கில் இருந்து 19 கி.மீ தொலைவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சுற்றுலா பயணிகள் சிக்கி தவித்துக் கொண்டிருப்பதாக தகவல் வெளியானது. இதையடுத்து, இந்திய இராணுவ வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சுற்றுலா பயனிகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
நிலச்சரிவில் சிக்கியவர்களை மரப்பலகை நடைபாதை, கயிறு, மனித சங்கிலி உருவாக்கி சுற்றுலா பயணிகளை மீட்டனர். மீட்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்று, உணவு அளிக்கப்பட்டது. மேலும் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சகிச்சை பெற்று வருகின்றனர்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
- காணாமல் போன சுற்றுலாப் பயணிகளை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
- பீகாரில் இருந்து சுற்றுலா பயணி ஒருவர் தனது மனைவி, மகன் மற்றும் மகளுடன் விடுமுறை கொண்டாட சிக்கிம் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிக்கிம் மாநிலத்தில் உள்ள ரிட் சூ பாலத்தின் விளிம்பில் நின்றுக் கொண்டு புகைப்படம் எடுக்க முயன்றபோது உள்ளூரைச் சேர்ந்த ஓட்டுனர் ஒருவரும், சுற்றுலா பயணி ஒருவரும் கால் இடறி அடுத்தடுத்து ஆற்றுக்குள் விழுந்தனர். இதில் இருவரும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர்.
இந்நிலையில், இந்திய திபெத்திய எல்லைக் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில், ஓட்டுனர் சடலமாக மீட்கப்பட்டார். மேலும், காணாமல் போன சுற்றுலாப் பயணிகளை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பீகாரில் இருந்து சுற்றுலா பயணி ஒருவர் தனது மனைவி, மகன் மற்றும் மகளுடன் விடுமுறை கொண்டாட சிக்கிம் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.