என் மலர்
இந்தியா

சிக்கிம் நிலச்சரிவில் சிக்கி 3 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு.. 6 பேர் மாயம்
- மேலும் நான்கு பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. மீதமுள்ள ஆறு பேரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
- அருணாச்சலப் பிரதேசத்தில் உலகிலேயே அதிக மழை பெய்துள்ளதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் கனமழையால் அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
சிக்கிமின் சத்தானில் உள்ள ராணுவ முகாமில் ஏற்பட்ட நிலச்சரிவில் மூன்று பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர் மற்றும் ஆறு பேர் காணாமல் போயுள்ளனர்.
பலத்த மழைக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக பாதுகாப்பு அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்தார்.
உடனடி மீட்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை மூன்று உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
மேலும் நான்கு பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. மீதமுள்ள ஆறு பேரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
சிக்கிமில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன.
டீஸ்டா நதி நீர் அபாய அளவைத் தாண்டி பாய்வதால் மாநிலத்தின் பல பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடக்கு சிக்கிமில் உள்ள தீங் மற்றும் சுங்தாங்கில் நிலச்சரிவுகள் காரணமாக பல சாலைகள் மூடப்பட்டுள்ளன.
இதற்கிடையில் அசாமில் உள்ள பல முக்கிய ஆறுகள் அபாய அளவைத் தாண்டி ஓடுவதால், 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மக்கள் வெள்ளத்தை எதிர்கொள்கின்றனர்.
தென்மேற்கு பருவமழை தொடங்கியதைத் தொடர்ந்து அருணாச்சலப் பிரதேசத்தில் உலகிலேயே அதிக மழை பெய்துள்ளதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.






