என் மலர்
நீங்கள் தேடியது "Prem Singh Tamang"
- முதலமைச்சர் கலந்துகொண்ட இசைப்போட்டியின் இறுதிப்போட்டியின்போது இந்த சம்பவம் நடந்தது.
- முதலமைச்சரின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் அவர் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்.
சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமாங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ரங்போ மைதானத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல்வர் பிரேம்சிங் தமாங்கிற்கு மூக்கில் திடீரென ரத்த கசிவு, உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டது. முதல்வர் கலந்துகொண்ட இசைப்போட்டியின் இறுதிப்போட்டியின்போது இந்த சம்பவம் நடந்தது.
இதையடுத்து அவர் உடனடியாக மருத்து சிகிச்சைக்காக கேங்டாக்கில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அவரது மூத்த மகனும் எம்.எல்.ஏ.வுமான ஆதித்யா தெரிவித்தார்.
இதுதொடர்பாக ஆதித்யா கூறுகையில்,
மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சைக்குப்பிறகு அவர் நன்றாக குணமடைந்து வருகிறார். அவருக்கு மூக்கில் ரத்தப்போக்கு ஏற்பட்ட வரலாறு இருந்தாலும், சாத்தியமான அபாயங்களைக் கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
முதல்வரின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது. அவர் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்.
மேலும் சிக்கல்கள் எதுவும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக அவர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார் என்று கூறினார்.
- இத்திட்டத்திற்காக ரூ.128 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
- 32,000 குடும்பத் தலைவிகளுக்கு முதல் தவணையாக ரூ.20,000 வழங்கப்பட்டது.
சிக்கிம் மாநிலத்தில் வேலைக்குச் செல்லாத குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.40,000 வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் பிரேம் சிங் தமங் நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்திற்காக ரூ.128 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் முதற்கட்டமாக 32,000 குடும்பத் தலைவிகளுக்கு முதல் தவணையாக ரூ.20,000 வழங்கப்பட்டது.
இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன் பெற அந்த பெண்கள் வேலைக்குச் செல்லாதவர்களாகவும், குழந்தையைப் பெற்றிருப்பதும் அவசியமாகும்.
- இத்திட்டத்தை முதல்-மந்திரி பிரேம் சிங் தமாங் தொடங்கிவைத்தார்.
- மரக்கன்றுகள் நடுவது, குழந்தை, பெற்றோர் மற்றும் இயற்கைக்கு இடையிலான பிணைப்பை வலுப்படுத்தும்.
காங்டாக் :
சிக்கிம் மாநிலத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் 100 மரக்கன்றுகள் நட அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
மரம் ஒன்றை நடுங்கள், பாரம்பரியம் ஒன்றை விட்டுச் செல்லுங்கள் என்ற இத்திட்டத்தை முதல்-மந்திரி பிரேம் சிங் தமாங் தொடங்கிவைத்தார்.
குழந்தைப் பிறப்பை நினைவுகூரும்விதமாக இவ்வாறு மரக்கன்றுகள் நடுவது, குழந்தை, பெற்றோர் மற்றும் இயற்கைக்கு இடையிலான பிணைப்பை வலுப்படுத்தும் என்று சிக்கிம் அதிகாரிகள் கூறுகின்றனர்.
திட்டத்தை தொடங்கிவைத்த முதல்-மந்திரி பிரேம் சிங் தமாங் கூறுகையில், 'ஒரு குழந்தை வளர வளர, அதற்காக நடப்பட்ட மரங்களும் வளர்வதைக் கவனிப்பது, பூமிக்கு ஒரு குழந்தையின் வருகையை வரவேற்கும், அதை கொண்டாடும் நல்லதொரு அடையாளம் ஆகும். இது போன்ற ஒரு பசுமை முயற்சி, இந்தியாவிலேயே முதல்முறையாக சிக்கிமில்தான் மேற்கொள்ளப்படுகிறது' என்றார்.
தொடக்க நிகழ்ச்சியின் அடையாளமாக, புதிதாக பெற்றோர் ஆன சில தம்பதியருக்கு மரக்கன்றுகளை முதல்-மந்திரி பிரேம் சிங் தமாங் வழங்கினார்.






