search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "soldiers killed"

    • ராணுவ வீரர்கள் 8 பேர் ஹெலிகாப்டர் ஒன்றில் நிவாரண பணி ஒன்றை மேற்கொள்வதற்காக புறப்பட்டு சென்றனர்.
    • ஜனாதிபதி கஸ்டாவோ பெட்ரோ அவருடைய எக்ஸ் சமூக ஊடக பதிவில் பகிர்ந்து உள்ளார்.

    கொலம்பியாவில் ஹெலிகாப்டர் விபத்தில் 8 ராணுவ வீரர்கள் உயிரழந்துள்ளனர். 

    வெனிசுலா நாட்டு எல்லையையொட்டிய பகுதியில், கொலம்பியா நாட்டை சேர்ந்த ராணுவ வீரர்கள் 8 பேர் ஹெலிகாப்டர் ஒன்றில் நிவாரண பணி ஒன்றை மேற்கொள்வதற்காக புறப்பட்டு சென்றனர்.

    அப்போது அந்த ஹெலிகாப்டர் குமரிபோ என்ற நகராட்சிக்கு உட்பட்ட கிராம பகுதியில் திடீரென விபத்தில் சிக்கியது. இதில், ஹெலிகாப்டரில் பயணித்த ஒருவரும் தப்பவில்லை. இந்த விபத்தில், ராணுவ வீரர்கள் 8 பேரும் உயிரிழந்து உள்ளனர்.

    இதனை அந்நாட்டின் ஜனாதிபதி கஸ்டாவோ பெட்ரோ அவருடைய எக்ஸ் சமூக ஊடக பதிவில் பகிர்ந்து உள்ளார். எனினும், விபத்து எப்போது நடந்தது போன்ற விவரங்களை வெளியிடவில்லை.

    • சிக்கிம் மாநிலம் பாக்யோங் மாவட்டத்தில் உள்ள சில்க் ரோட்டில் இந்த விபத்து நடந்துள்ளது.
    • ராணுவ வீரர்களும் மேற்கு வங்காளத்தில் உள்ள பினாகுரி பகுதியில் பணியில் இருந்தவர்கள் ஆவர்.

    மேற்கு வங்காள மாநிலம் பெடோங்கில் இருந்து சிக்கிமில் உள்ள ஜூலுக் நோக்கி இந்திய ராணுவ வீரர்கள் பயணித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக சாலையோர பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.

    இந்த கோர விபத்தில் சிக்கி அதில் பயணம் செய்த 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். சிக்கிம் மாநிலம் பாக்யோங் மாவட்டத்தில் உள்ள சில்க் ரோட்டில் இந்த விபத்து நடந்துள்ளது.

    உயிரிழந்தவர்களில் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஓட்டுநர் பிரதீப் படேல், மணிப்பூரைச் சேர்ந்த பீட்டர், அரியானாவைச் சேர்ந்த நாயக் குர்சேவ் சிங் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுபேதார் கே தங்கபாண்டி ஆகியோர் அடங்குவர் என்று இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    அனைத்து ராணுவ வீரர்களும் மேற்கு வங்காளத்தில் உள்ள பினாகுரி பகுதியில் பணியில் இருந்தவர்கள் ஆவர்.

    • குல்காம் மாவட்டத்தில் நடந்த இருவேறு தாக்குதலில் ராணுவத்தினர் 6 பயங்கரவாதிகளை சுட்டு கொன்றனர்.
    • இந்த சம்பவம் நடந்து 48 மணிநேரம் கூட ஆகாத சூழலில், ஜம்முவில் 4 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

    ஜம்மு காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தின் மச்சேதி பகுதியில் இந்திய ராணுவத்தின் வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அந்த தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் மரணம் அடைந்தனர். 6 பேர் காயமடைந்து உள்ளனர்.

    கத்துவா நகரில் இருந்து 150 கி.மீ. தொலைவில் பத்னோட்டா கிராமத்தில் ராணுவத்தின் ரோந்து பணியின்போது, இந்த தாக்குதல் நடந்துள்ளது. இதனை தொடர்ந்து கூடுதல் படையினர் அந்த பகுதியில் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    2 நாட்களுக்கு முன்பு, ஜம்மு மற்றும் காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் நடந்த இருவேறு தாக்குதலில் ராணுவத்தினர் 6 பயங்கரவாதிகளை சுட்டு கொன்றனர்.

    இந்த சம்பவம் நடந்து 48 மணிநேரம் கூட ஆகாத சூழலில், ஜம்முவில் ரோந்து சென்ற ராணுவ வீரர்களின் வாகனத்தின் மீது நடந்த பயங்கரவாத தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்து உள்ளதுடன், 6 ராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர்.

    • ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
    • தொடர்ந்து பாதுகாப்பு படையினர் உடனடியாக பதிலடியாக துப்பாக்கி சூடு நடத்தினர்.

    தென்மேற்கு பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் கெச் மாவட்டத்தின் புலேடா பகுதியில் பாதுகாப்புப் படையினர் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்றை பயன்படுத்தி ராணுவ வாகனத்தை வெடிக்க செய்தனர். இதில் ராணுவ வீரர்கள் 5 பேர் உயிரிழந்தனர்.

    இதனை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் உடனடியாக பதிலடியாக துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் நமது வீரர்கள் கொல்லப்பட்ட மூன்றரை மணி நேரத்துக்குள் தனது வாழ்க்கை வரலாறு படத்துக்காக மோடி கேமராவுக்கு போஸ் கொடுத்ததாக ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். #Modiposedcameras #RahulGandhi #Modiposed
    திருப்பதி:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆந்திர மாநிலம், திருப்பதி நகரில் இன்று மாலை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். 

    அப்போது அவர் கூறியதாவது:-

    தலைமைக்கான தகுதிகளில் முக்கியமான தகுதி கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவது என்னும் குறிப்புடன் எனது பேச்சை தொடங்குகிறேன். அவ்வகையில் ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிப்பது என மத்திய அரசு அளித்திருந்த அந்த வாக்குறுதியை மத்தியில் அமையப்போகும் காங்கிரஸ் அரசு நிச்சயமாக நிறைவேற்றும்.

    ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்படுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. நாங்கள் இந்த மாநிலத்தில் ஆட்சி செய்கிறோமா, இல்லையா? என்பது முக்கியமில்லை. ஆனால், இந்த நாட்டின் பிரதமரால் முன்னர் அளிக்கப்பட்ட வாக்குறுதியும் வெளியிடப்பட்ட அறிவிப்பும் இந்த நாட்டில் உள்ள நூறு கோடிக்கும் அதிகமான மக்களால் அளிக்கப்பட்ட வாக்குறுதியாக பார்க்க வேண்டும்.

    ஒரு பிரதமர் பேசுகிறார் என்றால் அந்த நாடே பேசுவதாக அர்த்தம் கொள்ள வேண்டும். எனவே, மத்தியில் நாங்கள் ஆட்சி அமைத்தவுடன் முதல் பணியாக இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படும். இதை காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியும் பலமுறை உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

    ‏மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டம், விவசாயிகளின் அனுமதியின்றி அவர்களின் விளைநிலங்களை கையகப்படுத்த கூடாது என்னும் சட்டம் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை நாங்கள் நிறைவேற்றி இருக்கிறோம்.

    ஆந்திராவுக்கு அடுத்த பத்தாண்டுகளுக்கு சிறப்பு அந்தஸ்து, ஒவ்வொரு இந்தியரின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய், 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு போன்ற நிறைவேறாத பொய் வாக்குறுதிகளை நாங்கள் அளிக்க மாட்டோம். விவசாயப் பொருட்களுக்கு உரிய விலை, மேக் இன் இந்தியா, ஸ்டிராட் அப் இந்தியா என பொய்மேல் பொய்யாக நாங்கள் சொல்ல மாட்டோம்.

    காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் நமது வீரர்கள் கொல்லப்பட்ட மூன்றரை மணி நேரத்துக்குள் தனது வாழ்க்கை வரலாறு படத்துக்காக மோடி கேமராவுக்கு போஸ் கொடுத்து கொண்டிருந்தார்.

    சமீபத்தில் நடந்த 5 மாநில தேர்தல்களின்போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பத்தே நாட்களில் விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி அளித்திருந்தேன். ஆனால், மத்தியபிரசேதம், சத்திஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் நாங்கள் ஆட்சி அமைத்த இரண்டே நாட்களில் 70 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான விவசாய கடன்களை தள்ளுபடி செய்தோம். 

    அதேபோல், ஆந்திர மக்கள் எங்கள் மீது வைத்துள்ள அன்புக்காக நிச்சயமாக சிறப்பு மாநில அந்தஸ்தை நாங்கள் அளித்தே தீருவோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #Modiposedcameras #RahulGandhi #Modiposed
    ஜம்மு காஷ்மீரின் நவ்ஷேரா பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் மேஜர் உள்பட 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். #MilitantsAttack
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை ஒட்டியுள்ளது நவ்ஷேரா பகுதி. இங்குள்ள லாம் பகுதியில் ராணுவ வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் சிலர், ராணுவ வீரர்களை குறிவைத்து வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ராணுவ மேஜர் உள்பட 2 வீரர்கள் பலியாகினர். பயங்கரவாதிகள் தாக்குதலை தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. #MilitantsAttack
    காபோன் நாட்டில் தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் நிகழ்த்திய அதிரடி தாக்குதலில் கிளர்ச்சி ராணுவ வீரர்கள் 2 பேர் கொல்லப்பட்டதன் மூலம் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி முறியடிக்கப்பட்டது. #Gabon #SoldierKilled
    லிப்ரவில்லே:

    மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காபோனில், அலி போங்கோ அதிபராக உள்ளார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இவருக்கு பக்கவாத நோய் ஏற்பட்டது. இதற்காக அவர் மொராக்கோ நாட்டில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த நிலையில், அதிபர் நாட்டில் இல்லாத சூழலை பயன்படுத்தி ஆட்சியை கவிழ்த்து, ராணுவ ஆட்சியை அமல்படுத்த ராணுவத்தில் ஒரு பிரிவினர் முடிவு செய்தனர். நேற்று முன்தினம் தலைநகர் லிப்ரவில்லேவில் உள்ள தேசிய வானொலி நிலையத்துக்குள் துப்பாக்கிகளுடன் புகுந்த கிளர்ச்சி ராணுவ வீரர்கள், அங்கிருந்தவர்களை சிறை பிடித்தனர்.

    அதனை தொடர்ந்து கிளர்ச்சி ராணுவ வீரர்களுக்கு தலைமை தாங்கிய ஓண்டோ ஒபியாங் கெல்லி என்பவர் நாட்டில், அதிபர் அலி போங்கோவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு ‘மறுசீரமைப்பு தேசிய சபை’யின் ஆட்சி அமல்படுத்தப்படுவதாக வானொலியில் அறிவித்தார். இதனால் நாடு முழுவதும் பெரும் பதற்றமான சூழல் உருவானது. இதையடுத்து தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் வானொலி நிலையத்தை சுற்றிவளைத்து தங்களின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர்.

    பின்னர் அவர்கள் வானொலி நிலையத்துக்குள் நுழைந்து அதிரடி தாக்குதல் நடத்தினர். இதில் கிளர்ச்சி ராணுவ வீரர்கள் 2 பேர் கொல்லப்பட்டனர். மேலும் ஓண்டோ ஒபியாங் கெல்லி உள்பட 5 வீரர்கள் கைது செய்யப்பட்டனர். இதன் மூலம் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது. 
    ×