என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Terrorists Dead"

    • பாதுகாப்பு படையினரை பார்த்ததும் பயங்கரவாதிகள் துப்பாகிச்சூடு நடத்தினர்.
    • தொடர்ந்து துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது.

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் பாதுகாப்பு படையினர் அங்கு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்குள்ள ஒரு கிராமத்தில் உள்ள வீட்டில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்ததை கண்டறிந்தனர். பாதுகாப்பு படையினரை பார்த்ததும் பயங்கரவாதிகள் துப்பாகிச்சூடு நடத்தினர். இதையடுத்து பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இரு தரப்பினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.

    இதில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் காயம் அடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதேபோல மற்றொரு பகுதியில் நடைபெற்ற என்கவுண்டரிலும் பாதுகாப்பு படை வீரர் உயிரிழந்தார். பயங்கரவாதிகள் தரப்பில் 4 பேர் கொல்லப்பட்டனர். தொடர்ந்து துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது.





    • குல்காம் மாவட்டத்தில் நடந்த இருவேறு தாக்குதலில் ராணுவத்தினர் 6 பயங்கரவாதிகளை சுட்டு கொன்றனர்.
    • இந்த சம்பவம் நடந்து 48 மணிநேரம் கூட ஆகாத சூழலில், ஜம்முவில் 4 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

    ஜம்மு காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தின் மச்சேதி பகுதியில் இந்திய ராணுவத்தின் வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அந்த தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் மரணம் அடைந்தனர். 6 பேர் காயமடைந்து உள்ளனர்.

    கத்துவா நகரில் இருந்து 150 கி.மீ. தொலைவில் பத்னோட்டா கிராமத்தில் ராணுவத்தின் ரோந்து பணியின்போது, இந்த தாக்குதல் நடந்துள்ளது. இதனை தொடர்ந்து கூடுதல் படையினர் அந்த பகுதியில் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    2 நாட்களுக்கு முன்பு, ஜம்மு மற்றும் காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் நடந்த இருவேறு தாக்குதலில் ராணுவத்தினர் 6 பயங்கரவாதிகளை சுட்டு கொன்றனர்.

    இந்த சம்பவம் நடந்து 48 மணிநேரம் கூட ஆகாத சூழலில், ஜம்முவில் ரோந்து சென்ற ராணுவ வீரர்களின் வாகனத்தின் மீது நடந்த பயங்கரவாத தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்து உள்ளதுடன், 6 ராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர்.

    • தீவிரவாதிகள் ராணுவ தளத்துக்குள் நுழைந்து தாக்குதல்.
    • தாக்குதலுக்கு ஜெய்ஷ் அல் பர்சன் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள ராணுவ தளம் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது.

    இந்த ராணுவ தளத்தின் சுவர் மீது வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட 2 கார்களை மோதி வெடிக்க வைத்தனர். சுற்றுச்சுவர் இடிந்த நிலையில் மற்ற தீவிரவாதிகள் ராணுவ தளத்துக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர்.

    காரில் நிரப்பப்பட்ட குண்டுகள் வெடித்ததில் 4 குழந்தைகள், 2 பெண்கள் உள்பட 12 பேர் பலியானார்கள். 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரிகளில் சேர்த்தனர்.

    ராணுவ தளத்துக்குள் புகுந்த தீவிரவாதிகளுடன் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். இதில் 6 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

    இதுகுறித்து ராணுவ தரப்பில் கூறும் போது, கார் குண்டு தாக்குதலுக்கு பிறகு ராணுவ தளத்தின் சுவர் உடைக்கப்பட்டு, பல தீவிரவாதிகள் உள்ளே நுழைய முயன்றனர், அவர்களில் 6 பேர் கொல்லப்பட்டனர். மீதமுள்ளவர்கள் சுற்றி வளைக்கப்பட்டு உள்ளனர்.

    அனைத்து பயங்கரவாதிகளும் அழிக்கப்படும் வரை நடவடிக்கை தொடரும் என்று தெரிவித்தது.

    இந்த தாக்குதல் சம்பவத்துக்கு கைபர் பக்துன்க்வா மாகாண முதலமைச்சர் அலி அமின் கந்தாபூர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

    இந்த நிலையில் இத்தாக்குதலுக்கு ஜெய்ஷ் அல் பர்சன் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த அமைப்பு தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தானின் பிரிவுகளில் ஒன்றாகும்.

    • குல்பூஷண் ஜாதவ் உளவு பார்த்ததாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியது.
    • ஆயுதம் மற்றும் மனித கடத்தல்காரராக பணியாற்றி வந்துள்ளார்.

    இஸ்லாமாபாத்:

    இந்திய கடற்படையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற குல்பூஷண் ஜாதவ் ஈரானின் சபாஹ ரில் ஒரு தொழிலை நடத்தி வந்தார்.

    கடந்த 2016-ம் ஆண்டு குல்பூஷண் ஜாதவை ஒரு கும்பல் கடத்தி சென்று ஈரான்-பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் பாகிஸ்தான் ராணுவத்திடம் ஒப்படைத்தது. குல்பூஷண் ஜாதவ் உளவு பார்த்ததாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியது.

    இதையடுத்து அவருக்கு 2017-ம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவ கோர்ட்டு மரண தண்டனை விதித்தது. இதை எதிர்த்து சர்வதேச கோர்ட்டில் இந்தியா வழக்கு தொடர்ந்தது.

    தண்டனையை மறுபரிசீலனை செய்ய சர்வதேச கோர்ட்டு உத்தரவிட்டதால் 2019-ம் ஆண்டு குல்பூஷண் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை நிறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் குல்பூஷண் ஜாதவை ஈரானில் இருந்து பாகிஸ்தானுக்கு கடத்திச் செல்ல உதவிய தீவிரவாதி முப்தி ஷா மிர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். பலுசிஸ்தானின் துர்பட் பகுதியில் முப்தி ஷா மிர்ரை மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பி சென்றனர்.

    ஜாமியத் உலமா அமைப்பு உறுப்பினரான முப்தி ஷா மிர், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐக்கு நெருக்கமாக இருந்துள்ளார். ஆயுதம் மற்றும் மனித கடத்தல்காரராக பணியாற்றி வந்துள்ளார்.

    குல்பூஷண் யாதவை ஜெய்ஷ் அல்-அதில் அமைப்பின் முல்லா உமர் இரானி தலைமையிலான குழு கடத்திச் சென்றது. பின்னர் அவர் முப்தி ஷா மிர் உள்பட பல இடைத்தரகர்கள் மூலம் பாகிஸ்தான் ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டார்.

    இதில் முப்தி ஷா மிர் முக்கிய பங்கு வகித்துள்ளார். ஏற்கனவே 2020-ம் ஆண்டு இரானியும் அவரது 2 மகன்களும் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பி டத்தக்கது.

    முப்தி ஷா மிர் கடந்த ஆண்டு 2 முறை கொலை முயற்சியில் இருந்து தப்பி இருந்தார். அவர் பலுசிஸ்தானில் தீவிரவாதத்தைப் பரப்புவதில் முக்கிய பங்கு வகித்து வந்துள்ளார்.

    ×