என் மலர்

  நீங்கள் தேடியது "car bomb attack"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆப்கானிஸ்தான் நாட்டின் லோகார் மாகாணத்தில் இன்று நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் அம்மாகாண கவர்னர் மயிரிழையில் உயிர் தப்பினார். அவரது பாதுகாவலர் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். #Carbombattack #Afghanistan
  காபுல்:

  ஆப்கானிஸ்தான் நாட்டின் லோகார் மாகாண கவர்னரின் கார் பாதுகாப்பு வாகனங்களுடன் முஹம்மது அகா மாவட்டம் வழியாக இன்று சென்றுக் கொண்டிருந்தது.

  அப்போது தலிபான் பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த ஒருவன் நடத்திய கார்குண்டு தாக்குதலில் கவர்னரின் பாதுகாப்பு அதிகாரி உள்பட 8 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். பத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்.

  இந்த தாக்குதலில் கவர்னர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக சில ஊடகங்களும், காயங்களுடன் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக வேறுசில ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன. #Carbombattack #Afghanistan 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சோமாலியா நாட்டில் அரசு அலுவலகம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது. #Somaliaexplosion #Mogadishuexplosion
  மொகடிஷு:

  சோமாலியா நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள ஹாவ்லே வாடாக் மாவட்டத்தில் உள்ள அம்மாவட்ட தலைமை நிர்வாக அலுவலகத்தின் மீது நேற்று வேகமாக வந்த ஒரு கார் மோதி வெடித்துச் சிதறியது.

  இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். 6 குழந்தைகள் உள்பட 14 பேர் படுகாயமடைந்தனர் என முதல் கட்டமாக தகவல் வெளியானது.

  கார் குண்டு வெடித்து சிதறிய வேகத்தில் அருகாமையில் இருந்த ஒரு பள்ளிக்கூட கட்டிடம் இடிந்து தரைமட்டம் ஆனது. ஒரு மசூதியின் மேற்கூரை மற்றும் சில வீடுகள் கடுமையாக சேதமடைந்தன.

  இந்நிலையில், கார் குண்டு தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது என மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர். #Somaliaexplosion #Mogadishuexplosion
  ×