என் மலர்
நீங்கள் தேடியது "security force"
- ஆய்வு கூட்டம் கமிஷனர் தலைமையில் நடப்பதும் வழக்கம்.
- தலா ஒருவர் வீதம், 8 நிலையங்களுக்கு தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பூர் :
குற்ற சம்பவம், அதன் பின்னணி, அவற்றின் மீதான போலீசார் நடவடிக்கை என்ன, அரசியல் மற்றும் பிற அமைப்பினரின் நடவடிக்கை, சட்டம் - ஒழுங்கு நிலவரம் குறித்து நுண்ணறிவு பிரிவு (ஐ.எஸ்.,) போலீசார் கண்காணிப்பது வழக்கம். திருப்பூர் மாநகரில் பணியாற்றி வரும் ஐ.எஸ்., போலீசார், இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் மற்ற போலீசாரின் நடவடிக்கை, நிலைய எல்லைக்குள் நடக்கும் லாட்டரி, கஞ்சா, மதுவிற்பனை உள்ளிட்ட சட்டவிரோத செயல்கள், சட்டம் - ஒழுங்கு நிலவரம் உள்ளிட்டவை கண்காணித்து முன்கூட்டியே ஐ.எஸ்., போலீஸ் உதவி கமிஷனரிடம் தெரிவித்து பின்னர் கமிஷனருக்கு தகவல் செல்வது வழக்கம்.
இந்த பிரிவு முற்றிலும் கமிஷனரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. மாதந்தோறும் இரண்டு, மூன்று முறை பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் கமிஷனர் தலைமையில் நடப்பதும் வழக்கம்.இந்நிலையில் மாநகரில் உள்ள, 8 போலீஸ் நிலையங்களுக்கு தலா ஒரு ஐ.எஸ்., போலீசார் வீதம் பணியாற்றி வருகின்றனர்.
இன்னும் கண்காணிப்பை தீவிரப்படுத்தும் வகையில், தகவல்களை சேகரிக்கும் விதமாக கூடுதல் ஐ.எஸ்., போலீசார் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். தலா ஒருவர் வீதம், 8 நிலையங்களுக்கு தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளனர்.போலீசார் கூறுகையில், ஒருவர் வழக்கு, ஆர்ப்பாட்டம், போராட்டம் போன்றவற்றையும், மற்றொருவர், போலீஸ் நிலைய நிலவரங்கள், போலீஸ் ரோந்து வாகனங்கள் உள்ளிட்டவற்றையும் கண்காணிக்கும் வகையில் பணி நியமிக்கப்பட்டுள்ளனர்என்றனர்.

வறுமையில் வாடும் பப்புவா நியூகினியா நாட்டின் தலைநகரான போர்ட் மோரஸ்பியில், சமீபத்தில் ‘அபெக்’ என்று அழைக்கப்படுகிற ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங், அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் உள்ளிட்ட 21 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த உச்சி மாநாட்டின்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு துணையாக ஆஸ்திரேலியா, அமெரிக்கா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து பாதுகாப்பு படையினர் வந்திருந்தனர்.
இந்த நிலையில், உள்நாட்டு படையினருக்கும், போலீசாருக்கும் உரிய அலவன்சினை (படி) அந்த நாட்டு அரசு வழங்க வில்லை என கூறப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள், போர்ட் மோரஸ்பி நகரில் உள்ள அந்த நாட்டின் நாடாளுமன்ற கட்டிடத்துக்குள் அதிரடியாக நுழைந்து தாக்குதல் நடத்தினர். மேஜை, நாற்காலி, ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தெறிந்தனர். இந்த தாக்குதலை நூற்றுக்கணக்கானோர் நடத்தியதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
ஆலன் பேர்டு என்ற எம்.பி. கருத்து தெரிவிக்கையில், “நாடாளுமன்றத்துக்குள் ஆயுதப்படையினர், போலீசார், சிறை அதிகாரிகள் என அனைவரும் நுழைந்து கிடைத்ததையெல்லாம் அடித்து நொறுக்கினார்கள்” என கூறினார்.
இந்த தாக்குதல் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #PapuaNewGuinea #SecurityForces #ParliamentAttack
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளின் ஊடுருவலை தடுக்க பாதுகாப்பு படையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அதையும் மீறி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஊடுருவி தலைமறைவாக இருக்கும் பயங்கரவாதிகளை தேடி அழிக்கும் முயற்சியில் பாதுகாப்பு படை ஈடுபட்டுள்ளது.
இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் உள்ள சஃப்னாக்ரி பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலை அடுத்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
அப்போது பாதுகாப்பு படையினரிடம் இருந்து தப்புவதற்காக பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு பதிலடி கொடுத்து பாதுகாப்பு படையினரும் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேரம் நீடித்த இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #JammuKashmir #MillitantsGunnedDown
ஆப்கானிஸ்தானில் ஆளும் அரசை எதிர்த்து தலிபான் பயங்கரவாதிகள் போரிட்டு வருகின்றனர். நாட்டின் சில பகுதிகளை கைப்பற்றி போட்டி அரசு ஒன்றை நடத்தி வருகிறது.
ஆப்கானிஸ்தானின் கஜ்னி மாகாணத்தில் உள்ள சோதனைச்சாவடியில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் மீது தலிபான் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பாதுகாப்பு படையினர் பலியாகி உள்ளனர்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அந்த மாகாணத்தின் செய்தித்தொடர்பாளர் ஆரிப் நூரி, தலிபான்களின் இந்த தாக்குதலில் 13 பேர் பலியாகியுள்ளதாகவும், 4 பேர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறியுள்ளார்.
மேலும், பாதுகாப்பு படையினர் நடத்திய எதிர்தாக்குதலில் 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், 10 பேர் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளார். #Afghanistan #SecurityForce #TalibanAttack
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா நகரில் பாதுகாப்பு படையினர் மீது நவீன ரக துப்பாக்கி மூலம் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தாக்குதல்களை நடத்தினர். இந்த தாக்குதலுக்கு பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்தனர்.
பலமணி நேரங்கள் நீடித்த இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். அதில் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் தலைவர் மவுலானா மசூத் அலாரின் மருமகன் உஸ்மான் ஹைதர் என்பவனும் ஒருவன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்த பயன்படுத்தப்பட்ட நவீன ரக துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த துப்பாக்கிச்சூட்டில் மேலும் ஒரு பயங்கரவாதி பலியாகி இருக்கலாம் என கூறப்படும் நிலையில் அவனது உடலை தேடும் பணி நடைபெற்று வருகிறது. #JammuKashmir #MillitantGunnedDown
