search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Militants"

    • மணியன்தீவு உள்ளிட்ட மீனவ கிராமங்களில் ‘சாகர் கவாச் ஆப்ரேஷன்’ பாதுகாப்பு ஒத்திகை இன்றும், நாளையும் நடக்கிறது.
    • போலீசார் 4 குழுக்களாக பிரிந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    கடலோர பகுதிகளில் பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்க கடலோர பாதுகாப்பு குழும போலீசாரால் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி ஆண்டுதோறும் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு 'சாகர் கவாச் ஆப்ரேஷன்' என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை தமிழகத்தின் கடலோர பகுதிகளில் இன்று தொடங்கியது.

    அதன்படி, நாகை மாவட்டம், வேதாரண்யம் கடலோர பகுதிகளான ஆறுகாட்டுத்துறை, வெள்ளப்பள்ளம், புஷ்பவனம், நாலுவேதபதி, கோடியக்கரை, மணியன்தீவு உள்ளிட்ட மீனவ கிராமங்களில் 'சாகர் கவாச் ஆப்ரேஷன்' பாதுகாப்பு ஒத்திகை இன்றும், நாளையும் நடக்கிறது.

    முதல் நாளான இன்று ஆறுகாட்டுத்துறை கடற்பகுதியில் வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழும டி.எஸ்.பி. சுந்தர் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் வரலட்சுமி, எஸ். எஸ்.ஐ.சசிகுமார் உள்பட 40-க்கும் மேற்பட்ட போலீசார் 4 குழுக்களாக பிரிந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    படகு மூலம் கடலுக்கு சென்று வழியில் தென்படும் மீனவர்களிடம் சந்தேகத்துக்கு இடமான நபர்கள் யாரேனும் தென்பட்டால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என முன்னெச்சரிக்கை விடுத்தனர்.

    • குஜராத்தில் தற்கொலை படை தாக்குதலிலும் ஈடுபட திட்டமிட்டது அம்பலமானது.
    • கைதானவர்களில் முகமது நசரத் என்பவர் சென்னையில் குருவியாக வேலை பார்த்தது தெரிய வந்தது.

    இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக கைது செய்யப்பட்டவர்களில் முக்கியமான நபர் சென்னையில் குருவியாக வேலை பார்த்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

    இலங்கையில் இருந்து சென்னை வழியாக கடந்த 20-ந்தேதி அகமதாபத்திற்கு சென்ற ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய நான்கு பேரை குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். இவர்கள் குஜராத்தில் தற்கொலை படை தாக்குதலிலும் ஈடுபட திட்டமிட்டது அம்பலமானது.

    இந்த நிலையில் தமிழகத்தில் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகிறார்கள். கைதானவர்களில் முகமது நசரத் என்பவர் சென்னையில் குருவியாக வேலை பார்த்தது தெரிய வந்தது.

    சென்னையில் ஐ.எஸ். பயங்கரவாத சதி செயலுக்கு நஸ்ரத் திட்டமிட்டாரா? என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • அகமதாபாத் விமான நிலையத்தில் பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசார் குவிக்கப்பட்டு உஷார்படுத்தப்பட்டனர்.
    • போலீசார் 4 பயங்கரவாதிகளிடமும் தொடர்ச்சியாக பல மணி நேரம் விசாரணை நடத்தினர்.

    நாடு முழுவதும் பயங்கரவாத செயல்களை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

    அந்த வகையில் குஜராத் மாநிலத்தில் செயல்பட்டு வரும் பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசாரும் பயங்கரவாத செயல்களை தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் குஜராத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் மிகப்பெரிய தாக்குதலுக்கு திட்டமிட்டிருப்பதாக பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசாருக்கு கடந்த 18-ந் தேதி அன்று தகவல் கிடைத்தது. ரெயில் அல்லது விமானம் மூலமாக குஜராத்துக்கு வந்து பயங்கரவாதிகள் அதிரடியாக தாக்குதல் நடத்துவதற்கு திட்டம் தீட்டி இருப்பதையும் போலீசார் கண்டுபிடித்தனர்.

    இதுதொடர்பாக போலீசார் மேற்கொண்ட ரகசிய விசாரணையில் இலங்கையில் இருந்து சென்னை வழியாக ஐ.எஸ். பயங்கரவாதிகள் 4 பேர் விமானத்தில் குஜராத்துக்கு வர இருப்பது உறுதியானது.

    இதன்படி நேற்று முன்தினம் அகமதாபாத் விமான நிலையத்தில் பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசார் குவிக்கப்பட்டு உஷார்படுத்தப்பட்டனர். போலீசார் எதிர்பார்த்த படியே இலங்கையில் இருந்து ஐ.எஸ். பயங்கரவாதிகள் 4 பேர் குஜராத் செல்வதற்கு டிக்கெட் எடுத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களது பெயர் முகமது நஸ்ரத், முகமது நப்ரான், முகமது ரஸ்தீன், முகமது பரீஸ் என்பதும் தெரிய வந்தது. அகமதாபாத் விமான நிலையத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 4 பேரும் வந்து இறங்கியதும் போலீசார் அவர்களை சுற்றி வளைத்து மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    உடனடியாக 4 பேரையும் பலத்த பாதுகாப்புடன் ரகசிய இடத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்பில் 4 பேரும் உறுப்பினர்களாக செயல்பட்டு வந்தது உறுதியானது.

    இலங்கையை சேர்ந்த 4 பயங்கரவாதிகளும் தமிழ் மட்டுமே பேசியுள்ளனர். வேறு மொழிகள் எதுவும் தெரியவில்லை. இதையடுத்து தமிழ் தெரிந்த போலீசாரை வைத்து 4 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 4 பேரும் குஜராத்தில் மிகப்பெரிய தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டியது அம்பலமானது.

    ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்பின் தலைவர்களில் ஒருவராக திகழும் அபுபக்கர் அல் பாக்தாதி என்பவரோடு இவர்கள் நெருங்கிய தொடர்பில் இருந்ததும், குஜராத்தில் தாக்குதல் நடத்துவதற்கு அவரது கட்டளைக்காக காத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. 4 பேரும் போலீசாரிடம் இதனை வாக்கு மூலமாக அளித்துள்ளனர்.

    இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் 4 பயங்கரவாதிகளிடமும் தொடர்ச்சியாக பல மணி நேரம் விசாரணை நடத்தினர். இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

    ஐ.எஸ்.பயங்கரவாதிகள் 4 பேரும் குஜராத்தில் பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களை கொல்ல சதி திட்டம் தீட்டியுள்ளனர். ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவரான அபுபக்கர் இது தொடர்பாக சில திட்டங்களை தீட்டி வைத்திருந்ததாகவும், 4 பேரும் கூறியுள்ளனர். குறிப்பிட்ட சில தலைவர்கள் மீது எப்போது எங்கு வைத்து தாக்குதல் நடத்த வேண்டும் என்பதை நீங்கள் குஜராத்துக்கு சென்று தங்கிய பிறகு சொல்கிறேன். அதுவரை காத்திருங்கள் என்றும் ஐ.எஸ். தலைவர் அபுபக்கர் 4 பேரிடமும் கூறி அனுப்பி வைத்து உள்ளார். ஆனால் அதற்குள் பயங்கரவாதிகள் 4 பேரும் போலீசில் சிக்கிக் கொண்டனர். பயங்கரவாத சதித் திட்டமும் முறியடிக்கப்பட்டு உள்ளது.

    இதையடுத்து 4 பேரிடமும் குஜராத்தில் ஆயுதங்கள் ஏதும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்பது பற்றிய விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. இதுதொடர்பாக அவர்கள் அளித்த தகவலின் பேரில் அகமதாபாத்தில் நானா சிலோடா நகரில் ரகசிய இடத்தில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. அங்கு சென்று போலீசார் சோதனை நடத்தினர். இதில் 3 துப்பாக்கிகள், 20 தோட்டாக்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இவைகள் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்டவை என்று குஜராத் டி.ஜி.பி. விகாஸ் சகாய் தெரிவித்துள்ளார்.

    துப்பாக்கி மற்றும் தோட்டாக்களில் பாகிஸ்தான் பழங்குடியினரின் முத்திரை உள்ளது. இதன் மூலம் இந்த தாக்குதல் சதி திட்டத்தின் பின்னணியில் பாகிஸ்தானுக்கு உள்ள தொடர்பு பற்றியும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு தலைவரான அபுபக்கரோடு இ-மெயில் மூலமாக 4 பேரும் உரையாடிய தகவல்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. அதில் தாக்குதலுக்கான நேரம் பற்றி பின்னர் தெரிவிக்கப்படும் என்பது பற்றிய தகவல்களும் இடம் பெற்றுள்ளன. குஜராத்தில் பா.ஜனதா தலைவர்கள் பங்கேற்கும் பொதுக் கூட்டங்களிலோ அல்லது அவர்கள் காரில் செல்லும்போதோ 4 பேரும் மனித வெடிகுண்டுகளாக மாறி நாட்டையே அச்சுறுத்தும் வகையில் மிகப்பெரிய தாக்குதலை அரங்கேற்றவும் சதித் திட்டம் தீட்டி செயல்பட்டுள்ளது அம்பலமாகி உள்ளது.

    குஜராத் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள முகமது நஸ்ரத், முகமது நப்ரான், முகமது ரஸ்தீன், முகமது பரீஸ் ஆகிய 4 பேரும் இலங்கையில் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்பு ஒன்றில் இணைந்தே முதலில் செயல்பட்டுள்ளனர்.

    2019-ம் ஆண்டு இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின் போது நடத்தப்பட்ட தாக்குதலை தொடர்ந்து அந்த அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து 4 பேரும் கடந்த பிப்ரவரி மாதம் ஐ.எஸ். பயங்கரவாத தலைவரான அபுபக்கரை சந்தித்து ஐ.எஸ்.அமைப்பில் உறுப்பினராக சேர்ந்து உள்ளனர்.

    குஜராத்தில் நாச வேலையில் ஈடுபடுவதற்காக அபுபக்கர் ரூ.4 லட்சம் பணத்தையும் அனுப்பி வைத்துள்ளார். இது முன் பணமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கைதான 4 பேரில் முகமது நஸ்ரத்திடம் பாகிஸ்தான் விசா இருந்துள்ளது. அதையும் போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர். இந்த விசாவை வைத்து நஸ்ரத் பாகிஸ்தான் சென்று வர திட்டமிட்டதும் தெரிய வந்துள்ளது.

    4 பயங்கரவாதிகள் மீதும் கூட்டு சதி, நாட்டுக்கு எதிராக போர் தொடுத்தல், ஆயுத தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட 4 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். பாராளுமன்றத் தேர்தல் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதற்குள் 4 பேர் நாச வேலைக்கு திட்டம் தீட்டியதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    இதை தொடர்ந்து கடைசி கட்டத் தேர்தல் நடைபெறும் இடங்களில் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.


    • பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் திடீரென பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
    • துப்பாக்கி சண்டையில் ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்தார்.

    பந்திபோரா:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திபோராவில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    அங்குள்ள சிந்திபந்தி கிராமத்தில் பாதுகாப்பு படையினர் வீடு வீடாக சென்று சோதனை நடத்தினர். அப்போது ஒரு வீட்டில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் திடீரென பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து பாதுகாப்பு படையினர் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு துப்பாக்கிச் சண்டை வெடித்தது. இந்த துப்பாக்கி சண்டையில் ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்தார்.

    இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, போலீசார் மற்றும் ராணுவத்தின் கூட்டுக் குழு பந்திபோராவில் சுற்றிவளைத்து பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதிகளை தேடும் நடவடிக்கையை மேற்கொண்டதாக தெரிவித்தார்.

    • பயங்கரவாதிகளின் மையமாக போர்னோ திகழ்கிறது
    • என் நண்பர்கள் 10 பேரின் பிணங்களை நான் கண்டேன்

    நைஜீரியா நாட்டின் வடக்கு பகுதியில் உள்ளது போர்னோ நகரம். பயங்கரவாதிகளின் மையமாக போர்னோ திகழ்கிறது.

    ஒரு தசாப்தத்திற்கும் மேலாக நைஜீரியா நாட்டில் நடைபெற்று வரும் உள்நாட்டு கிளர்ச்சியில் கடந்த வாரம் பொது மக்களில் 25 பேர் கொல்லப்பட்டனர்.

    இந்நிலையில் அங்குள்ள கொண்டூகா பகுதியில் உள்ள கவூரி கிராமத்தில் போகா ஹராம் பயங்கரவாதிகள், வயலில் வேலை செய்து கொண்டிருந்த 10-க்கும் மேற்பட்ட விவசாயிகளை தாக்கி, அவர்களின் தலைகளை வெட்டி கொன்றுள்ளனர்.

    "நேற்று காலை அவர்கள் துப்பாக்கிகளை ஏந்தியபடி மோட்டார் பைக்கில் வந்தார்கள். வயல் வேலையில் இருந்த விவசாயிகளின் பண்ணைகளை நாசம் செய்தார்கள். பிறகு அவர்களை கொன்றார்கள். கொடூரமாக கொல்லப்பட்டு தலை துண்டிக்கப்பட்ட என் நண்பர்கள் 10 பேரின் பிணங்களை நான் கண்டேன்" என அவர்களிடம் இருந்து தப்பிய ஒரு விவசாயி அபுபக்கர் மஸ்தா கூறினார்.

    இந்த கொடூர கொலைகளின் பின்னணியில் போகோ ஹராம் எனும் தீவிரவாத இயக்கம் உள்ளது. நைஜீரியாவில் 2,000 ஆண்டிலிருந்தே செயல்பட்டு வரும் இந்த தீவிரவாத அமைப்பினால் அந்நாட்டில் பல ஆயிரக்காணவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த வன்முறை இயக்கம் அண்டை நாடுகளான சாட் மற்றும் கேமரூன் பகுதிகளுக்கும் பரவியிருக்கிறது.

    ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் ஆப்பிரிக்க பிரிவான மேற்கு ஆப்பிரிக்காவின் ஐ.எஸ். (Islamic State of West Africa) எனும் அமைப்பும் அந்நாட்டில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

    இலங்கை குண்டு வெடிப்பில் வெளிநாட்டு தொடர்பு இருப்பதை இலங்கை அரசு உறுதி செய்துள்ளது.

    கொழும்பு:

    இலங்கையில் கடந்த மாதம் கிறிஸ்தவ தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் உள்ளிட்ட 8 இடங்களில் குண்டு வெடிப்பு நடந்தது. இதில் 253 பேர் உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

    இந்த குண்டு வெடிப்பை ஐ.எஸ். பயங்கரவாதிகள் இலங்கையில் செயல்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பு மூலம் நடத்தியதாக தகவல் வெளியானது. இதுகுறித்து புலனாய்வு துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் இலங்கையிலேயே ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த நிபுணர்கள் உதவியுடன் தயாரிக்கப்பட்டது என தெரிய வந்துள்ளது.

    தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டது சி4 ரக வெடிகுண்டுகள் என விசாரணை அதிகாரிகள் கருதினர். அவற்றை விடுதலைப்புலிகள் பயன்படுத்தி வந்தனர். ஆனால் தாக்குதலுக்கு பயன்படுத்திய வெடிகுண்டு சி4 ரகத்தை விட அதிக எரிசக்தி கொண்டது. எனவே இந்த வெடிகுண்டுகளை தயாரிக்க நிறைய ரசாயன பொருட்கள் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

     


    இந்த விவகாரத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஈடுபட்டு இருப்பதால் குண்டு வெடிப்பில் வெளிநாட்டு தொடர்பு இருப்பதை இலங்கை அரசு உறுதி செய்துள்ளது.

    ஷாங்ரிலா ஓட்டலில் நடந்த குண்டு வெடிப்பில் உயிரிழந்த தற்கொலை படை பயங்கரவாதிகளின் உடல்கள் கைப்பற்றப்பட்டு டி.என்.ஏ. பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் ஒருவரது உடல் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் ‌ஷக்ரான் காசிம் என கண்டறியப்பட்டுள்ளது.

    எனவே குண்டு வெடிப்பில் அவர் பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே குண்டு வெடிப்பு நடந்து ஒரு மாதம் நிறைவடைந்ததை இலங்கையில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கண்ணீருடன் துக்க தினமாக கடைபிடித்தனர். குண்டு வெடிப்பு நடந்த தேவாலயத்தின் முன்பு மெழுகுவர்த்தி ஏற்றி இறந்தவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

    இலங்கை தலைநகர் கொழும்புவில் ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களில் தொடர்பிருப்பதாக சந்தேகிக்கப்படும் 106 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். #SriLankabombings
    கொழும்பு:

    இந்தியாவின் அருகாமையில் உள்ள தீவுநாடான இலங்கையில் வாழும் சுமார் 21 லட்சம் மக்களில் புத்த மதத்தினர் அதிகமாக உள்ளனர். அதற்கடுத்தபடியாக இந்து மக்கள் பரவலாக வாழும் அந்நாட்டில் சுமார் 10 சதவீதம் அளவுக்கு இஸ்லாமியர்களும், 7 சதவீதம் அளவுக்கு கிறிஸ்தவர்களும் வாழ்கின்றனர்.

    இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் தினத்தன்று தலைநகர் கொழும்புவில் உள்ள 3 கிறிஸ்தவ தேவாலயங்கள், 3 ஓட்டல்கள் மற்றும் ஒரு குடியிருப்பு வளாகத்தில் அடுத்தடுத்து நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதல்களில் 253 பேர் உயிரிழந்தனர். சுமார் 400 பேர் காயமடைந்தனர்.

    இந்த தாக்குதலைத் தொடர்ந்து நாடு முழுவதும் பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கல்முனை சாய்ந்தமருது பகுதியில் பாதுகாப்பு படையினர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு தீவிரமாக சோதனையிட்டனர். அங்குள்ள ஒரு வீட்டில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், அந்த வீட்டை அதிரடிப் படை வீரர்கள் மற்றும் போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது பயங்கரவாதிகள் உள்ளே இருந்துகொண்டு துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். வீரர்களும் பதிலடி கொடுத்தனர்.

    இந்த சண்டையின்போது வீட்டினுள் திடீரென குண்டு வெடித்து சிதறியது. குண்டுவெடித்ததில் வீட்டிற்குள் இருந்த 4 மனித வெடிகுண்டு பயங்கரவாதிகள் உள்பட 15 பேர் பலியாகினர்.



    இந்த தாக்குதல்கள் தொடர்பாக போலீசார் இதுவரை 106 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
    அவ்வகையில், சுமார் 40 வயது மதிக்கத்தக்க தமிழ் ஆசிரியர் ஒருவரும் கைதாகியுள்ளார். அவரிடம் இருந்து 50 சிம் கார்டுகளை கைப்பற்றிய கல்பிட்டியா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இதேபோல், தடைசெய்யப்பட்ட தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பால் நடத்தப்பட்டு வரும் ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஒரு டாக்டரும் கைதானதாக இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. #SriLankabombings #Colombobombings #Easterbombings #Tamilmediumteacher
    இலங்கையை சேர்ந்த பெரிய தொழில் அதிபர் ஒருவரின் இரண்டு மகன்கள் பயங்கரவாதிகளாக மாறி நட்சத்திர ஓட்டல்களை தகர்த்துள்ளனர். #SriLankaBombings

    கொழும்பு:

    இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் தினத்தன்று தலைநகர் கொழும்பு மற்றும் மட்டகளப்பில் அடுத்தடுத்து 8 குண்டுகள் வெடித்தன.

    இதில் 3 தேவாலயங்கள், 3 சொகுசு நட்சத்திர ஓட்டல்கள் உள்பட 7 இடங்களில் மனித வெடிகுண்டுகள் மூலம் தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டு இருந்தது.

    இந்த தொடர் குண்டு வெடிப்புகளில் சிக்கி 359 பேர் பலியாகிவிட்டனர். 500-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்து பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

    இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. இலங்கையில் உள்ள தேசிய தவ்ஹீத் ஜமாஅத் இயக்கத்தின் துணையுடன் இந்த தாக்குதலை நடத்தியதாக ஐ.எஸ். பயங்கரவாதிகள் அறிவித்துள்ளனர். நியூசிலாந்தில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டதற்கு பழி வாங்குவதற்காக இலங்கையில் கிறிஸ்தவர்கள் மீது இந்த தாக்குதலை நடத்தியதாக ஐ.எஸ். பயங்கரவாதிகள் அமக் நியூஸ் ஏஜென்சி மூலம் அறிவித்துள்ளனர்.

    மேலும் 3 நட்சத்திர ஓட்டல்கள், 3 தேவாலயங்களில் தற்கொலை தாக்குதல் நடத்திய 7 மனித வெடிகுண்டுகள் நிற்கும் படத்தையும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் வெளியிட்டுள்ளனர். அந்த படத்தில் தேசிய தவ்ஹீத் ஜமாஅத் இயக்கத்தின் முகமது ஜக்ரன் என்ற ஜக்ரன் கஸ்மி என்பவன் தலைமையில் 7 தற்கொலை பயங்கரவாதிகள் நிற்பது தெரிய வந்துள்ளது.

    இந்த 7 பேரும்தான் கொழும்பு நகரை குறி வைத்து தகர்த்து இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த 7 பேருமே இலங்கையைச் சேர்ந்தவர்கள். இவர்களை பற்றிய தகவல்களை இலங்கை ராணுவமும், போலீசாரும் ஒருங்கிணைந்து சேகரித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த விசாரணைகளில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளன.


    7 மனித வெடிகுண்டு தற்கொலை பயங்கரவாதிகளில் 2 பேர் அண்ணன்-தம்பி ஆவார்கள். அவர்கள் இருவரும் இலங்கையில் மிகப் பெரிய கோடீஸ்வரரின் மகன்கள் என்று தெரிய வந்துள்ளது. அந்த கோடீஸ்வரர் கொழும்பில் வத்தல் மிளகாய் மொத்த வியாபாரம் செய்து வருகிறார்.

    அண்ணன்-தம்பி இருவருமே இஸ்லாமிய மத கொள்கைகளை தீவிரமாக கடைபிடித்து வந்தனர். சில மாதங்களுக்கு முன்பு அவர்களுக்கும், தேசிய தவ்ஹீத் ஜமாஅத் இயக்கத்தின் உறுப்பினர்கள் சிலருக்கும் தொடர்பு ஏற்பட்டது.

    இதையடுத்து அண்ணன்- தம்பி இருவரும் தேசிய தவ்ஹீத் ஜமாஅத் இயக்கத்தின் உறுப்பினர்களாக தங்களை பதிவு செய்துக் கொண்டனர். அதன் பிறகுதான் அவர்களுக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்பு ஏற்பட்டதாக தெரிகிறது. அந்த தொடர்பு கோடீஸ்வரர்களாக திகழ்ந்த அண்ணன்-தம்பி இருவரையும் பயங்கரவாதிகளாக மாற்றி விட்டது.

    அண்ணன்-தம்பி இருவரும் பயங்கரவாத இயக்கத்தினருடன் நெருங்கி பழகியது அவர்களது உறவினர்கள் யாருக்கும் தெரியவில்லை. அந்த அளவுக்கு மிக மிக ரகசியமாக அவர்கள் தங்கள் தொடர்பை வைத்து இருந்திருக்கிறார்கள்.

    நியூசிலாந்து நாட்டில் முஸ்லிம்கள் தாக்கப்பட்டதற்கு பழிவாங்க வேண்டும் என்று ஐ.எஸ். பயங்கரவாதிகள் அறிவித்த போது இவர்களும் அதை அறிந்துள்ளனர். தெற்கு ஆசிய நாடுகளில் ஏதாவது ஒன்றில் தாக்குதல் நடத்த வேண்டும் என்று ஐ.எஸ். பயங்கரவாதிகள் முயற்சி செய்தபோது அவர்களுக்கு இலங்கையில் உள்ள தேசிய தவ்ஹீத் ஜமாஅத் இயக்கம் ஆதரவாக இருந்துள்ளது.

    அதைத் தொடர்ந்துதான் இலங்கையில் கைவரிசை காட்ட ஐ.எஸ். பயங்கரவாதிகளின் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். அந்த சமயத்தில்தான் இந்த அண்ணன்-தம்பி இருவரும் தங்களை மனித வெடிகுண்டுகளாக மாற்ற சம்மதித்துள்ளனர்.

    இதற்காக அவர்கள் பயிற்சியும் எடுத்துள்ளனர். அது மட்டுமின்றி கொழும்பில் உள்ள நட்சத்திர ஓட்டல்களுக்கு சென்று ஒத்திகையிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    கடந்த சனிக்கிழமை அண்ணன்-தம்பி இருவரும் முதலில் சின்னமான் கிராண்ட் ஓட்டலுக்கு சென்றுள்ளனர். பிறகு சங்ரி-லா ஓட்டலுக்கு சென்றுள்ளனர். பணக்கார வீட்டு பிள்ளைகள் என்பதால் மிக எளிதாக அவர்களால் நட்சத்திர ஓட்டல்களுக்குள் செல்ல முடிந்தது.

    சின்னமான் கிராண்ட் ஓட்டலில் ஒருவரும், சங்ரி-லா ஓட்டலில் மற்றொருவரும் அறை எடுத்து சனிக்கிழமை தங்கி உள்ளனர். மறுநாள் காலை அவர்கள் இருவரும் தாங்கள் தங்கியிருந்த ஓட்டலில் மனித வெடிகுண்டுகளாக மாறி தாக்குதல் நடத்தினார்கள்.

    அண்ணன்-தம்பி பயங்கரவாதிகள் என்பது பற்றிய தகவல்களை உறுதி செய்துள்ள கொழும்பு போலீசார் அவர்களது பெயர் மற்றும் அவர்களது பெற்றோர் பெயரை வெளியிட மறுத்து விட்டனர். விசாரணை பாதிக்கக் கூடாது என்பதற்காக பயங்கரவாதிகள் அனைவரது பெயரையும் தொடர்ந்து ரகசியமாக வைத்துள்ளனர்.

    மற்ற 5 மனித வெடி குண்டு பயங்கரவாதிகள் பற்றிய தகவல்களையும் இலங்கை போலீசார் சேகரித்து உள்ளனர். அவர்கள் பற்றிய விவரமும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே ஐ.எஸ்.பங்கரவாத இயக்கம் கொழும்பில் தாக்குதல் நடத்திய தற்கொலை பயங்கரவாதிகளில் 3 பேர் அபுஉபைதா, அபுபாரா, அபு முக்தர் என்று அறிவித்துள்ளது.

    இந்த 3 பேரும்தான் சங்ரி-லா, சின்னமான் கிராண்ட், கிங்ஸ்பரி ஆகிய 3 சொகுசு நட்சத்திர ஓட்டல்களை தகர்த்தவர்கள் என்று அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்த 3 பேரில் 2 பேர்தான் கொழும்பு கோடீஸ்வரரின் மகன்கள் என்று கருதப்படுகிறது.

    அதுபோல கொழும்பு, நெகோம்பா, மட்டகளப்பு ஆகிய இடங்களில் உள்ள 3 தேவாலயங்களை தகர்த்தவர்கள் அபுஹம்சா, அபு கலில், அபுமுகமது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 7-வது மனித வெடிகுண்டாக செயல்பட்டவர் அபுஅப் துல்லா என்று தெரிய வந்துள்ளது.

    இவர் கொழும்பில் உள்ள இந்தியரின் ஓட்டலை தகர்ப்பதற்காக நுழைந்தார். அந்த சமயத்தில் கொழும்பில் குண்டு வெடித்து பரபரப்பு ஏற்பட்டு காட்டுத்தீயாக தகவல்கள் பரவி இருந்தது.

    அந்த சமயத்தில்தான் 7-வது மனித வெடிகுண்டு ஓட்டலுக்குள் நுழைய முயன்றது. ஆனால் அங்கு செய்யப்பட்டு இருந்த பலத்த பாதுகாப்பு காரணமாக அவரால் தாக்குதலை நடத்த இயலவில்லை. தன்னை சிலர் சந்தேகத்துடன் பார்ப்பதை அறிந்த அவர் அங்கிருந்து புறப்பட்டார்.

    கொழும்பு புறநகரில் ஒரு வீட்டுக்குள் அவர் சென்றார். அவரை பிடிக்க போலீசார் வீட்டுக்குள் புகுந்தபோது அவர் தனது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்க செய்து 3 போலீஸ்காரர்களை கொன்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    கொழும்பு, மட்டகளப்பில் நாசவேலையில் ஈடுபட்ட 7 மனித வெடிகுண்டு பயங்கரவாதிகளும் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் தலைவன் அபுபக்கிர்-அல்- பகததியை சந்தித்துள்ளனர். அந்த படம் தான் நேற்று அந்த அமக் நியூஸ் தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டுள்ளது.

    மேலும் 7 பயங்கரவாதிகளும் இருக்கும் வீடியோ காட்சிகளும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் அவர்கள் கொழும்பை தகர்க்க உறுதி மொழி எடுக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதன் மூலம் சர்வதேச அளவில் சதி திட்டம் தீட்டப்பட்டு இலங்கையில் ரத்த ஆறு ஓட விடப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. #SriLankaBombings

    ஜம்மு காஷ்மீரில் இன்று காலை நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். #JKEncounter
    சோபியான்:

    ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் கடந்த பிப்ரவரி 14ம் தேதி காஷ்மீரின்  நடத்தப்பட்ட தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் பலியாகினர். இதையடுத்து ஜம்மு காஷ்மீரின் எல்லைப்பகுதிகளிலும், பொது இடங்களிலும் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில்  பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக ராணுவத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து பாதுகாப்புப்படையினர் அப்பகுதிக்கு விரைந்தனர். அங்கு  பயங்கரவாதிகளுடன் நடத்தப்பட்ட துப்பாக்கி சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    துப்பாக்கி சண்டை முடிவடைந்த நிலையில், பயங்கரவாதிகளிடமிருந்து பயங்கரமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #JKEncounter 
    பயங்கரவாதிகளை ஒழித்த பிறகே ஓய்வு எடுப்பேன் என பிரதமர் மோடி கூறியுள்ளார். #PMModi #LoksabhaElections2019

    மும்பை:

    மராட்டிய மாநிலம் லத்தூரில் பா.ஜனதா- சிவசேனா கூட்டணியின் தேர்தல் பிரசார பொதுக் கூட்டம் இன்று நடந்தது. அதில் பிரதமர் நரேந்திர மோடியும், சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரேயும் கலந்து கொண்டனர்.

    அதில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:-

    காங்கிரசும் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் தேச விரோத எண்ணங்கள் மற்றும் செயல்பாட்டுடன் இருக்கின்றனர். சுதந்திரத்திற்கு முன்பு காங்கிரஸ் தலைவர்கள் புத்திசாலித் தனமாக செயல்பட்டு இருந்தால் பாகிஸ்தான் உருவாகி இருக்காது.

    தற்போது காங்கிரசின் தேர்தல் அறிக்கை பாகிஸ்தான் குரலாக ஒலிக்கிறது. காங்கிரசின் கூட்டணி கட்சியான தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் ஒமர் அப்துல்லா காஷ்மீருக்கு தனி பிரதமர், தனி ஜனாதிபதி வேண்டும் என்று பேசுகிறார்.


    இதில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணியான தேசியவாத காங்கிரசின் நிலை என்ன? காஷ்மீருக்கு தனி பிரதமர் வேண்டும் என காங்கிரசுடன் கூட்டணி அமைத்துள்ள மராட்டியத்தின் பலம் வாய்ந்த மனிதர் சரத்பவார் ஆதரிக்கிறாரா?

    அதே நேரத்தில் புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற கொள்கையில் பா.ஜனதா உள்ளது. பயங்கரவாதிகளின் மறை விடங்களில் புகுந்து அவர்கள் மற்ற நாடுகளில் இருந்தால் கூட அழிக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

    புல்வாமா தாக்குதலில் நமது ராணுவ வீரர்களின் வீரம் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன. காங்கிரசும், பாகிஸ்தானும் நமது வீரர்கள் பலத்துடன் இருக்கக் கூடாது. பயங்கரவாதம் பரவ வேண்டும் என விரும்புகின்றனர். என்னைப் பொறுத்தவரை பயங்கரவாதத்தையும், பயங்கரவாதிகளையும் வீழ்த்திய பிறகே ஓய்வெடுப்பேன்.

    நாட்டின் பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட அனைவரின் நலனில் அக்கறையுடன் பா.ஜனதா தேர்தல் அறிக்கை உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் நான் உங்களது (மக்களது) நம்பிக்கையை பெற்று இருக்கிறேன். தேர்தல் அறிக்கையில் புல்வாமா தாக்குதல் குறித்து எதுவும் கூறவில்லை.

    பாகிஸ்தான் மீது யார் விமான தாக்குதல் நடத்தினார்களோ அவர்களுக்கு முதல் முறையாக வாக்களிப்பவர்கள் தங்கள் ஓட்டுகளை அர்ப்பணியுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார். #PMModi #LoksabhaElections2019

    ஜம்மு காஷ்மீரில் இன்று காலை நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். #JKEncounter
    பத்காம்:

    ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் கடந்த மாதம் பிப்ரவரி 14ம் தேதி காஷ்மீரின்  நடத்தப்பட்ட தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் பலியாகினர். இதையடுத்து ஜம்மு காஷ்மீரின் எல்லைப்பகுதிகளிலும், பொது இடங்களிலும் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.



    இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் பத்காம் பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக ராணுவத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து பாதுகாப்புப்படையினர் அப்பகுதிக்கு விரைந்து பயங்கரவாதிகளை சுற்றி வளைத்தனர். அப்போது பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். சிறிது நேரம் நடந்த இந்த துப்பாக்கி சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    துப்பாக்கி சண்டை முடிவடைந்த நிலையில், 4 ராணுவ வீரர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  பயங்கரவாதிகளிடமிருந்து துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #JKEncounter 
    ஜம்மு காஷ்மீரில் இன்று காலை நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். #JKEncounter
    சோபியான்:

    ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் கடந்த மாதம் பிப்ரவரி 14ம் தேதி காஷ்மீரின்  நடத்தப்பட்ட தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் பலியாகினர். இதையடுத்து ஜம்மு காஷ்மீரின் எல்லைப்பகுதிகளிலும், பொது இடங்களிலும் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.



    இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் உள்ள கெல்லர் பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக ராணுவத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து பாதுகாப்புப்படையினர் அப்பகுதிக்கு விரைந்தனர். அங்கு  பயங்கரவாதிகளுடன் நடத்தப்பட்ட துப்பாக்கி சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    துப்பாக்கி சண்டை முடிவடைந்த நிலையில், பயங்கரவாதிகளிடமிருந்து பயங்கரமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #JKEncounter 
    ×