காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் பாதுகாப்பு படையினர் கடும் துப்பாக்கி சண்டை

பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் திடீரென பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.துப்பாக்கி சண்டையில் ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்தார்.
காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் பாதுகாப்பு படையினர் கடும் துப்பாக்கி சண்டை
Published on

பந்திபோரா:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திபோராவில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அங்குள்ள சிந்திபந்தி கிராமத்தில் பாதுகாப்பு படையினர் வீடு வீடாக சென்று சோதனை நடத்தினர். அப்போது ஒரு வீட்டில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் திடீரென பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து பாதுகாப்பு படையினர் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு துப்பாக்கிச் சண்டை வெடித்தது. இந்த துப்பாக்கி சண்டையில் ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்தார்.

இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, போலீசார் மற்றும் ராணுவத்தின் கூட்டுக் குழு பந்திபோராவில் சுற்றிவளைத்து பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதிகளை தேடும் நடவடிக்கையை மேற்கொண்டதாக தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com