குஜராத்தில் பிடிபட்ட ஐ.எஸ். பயங்கரவாதி சென்னையில் சதி திட்டமா?

குஜராத்தில் தற்கொலை படை தாக்குதலிலும் ஈடுபட திட்டமிட்டது அம்பலமானது.கைதானவர்களில் முகமது நசரத் என்பவர் சென்னையில் குருவியாக வேலை பார்த்தது தெரிய வந்தது.
குஜராத்தில் பிடிபட்ட ஐ.எஸ். பயங்கரவாதி சென்னையில் சதி திட்டமா?
Published on

இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக கைது செய்யப்பட்டவர்களில் முக்கியமான நபர் சென்னையில் குருவியாக வேலை பார்த்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

இலங்கையில் இருந்து சென்னை வழியாக கடந்த 20-ந்தேதி அகமதாபத்திற்கு சென்ற ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய நான்கு பேரை குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். இவர்கள் குஜராத்தில் தற்கொலை படை தாக்குதலிலும் ஈடுபட திட்டமிட்டது அம்பலமானது.

இந்த நிலையில் தமிழகத்தில் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகிறார்கள். கைதானவர்களில் முகமது நசரத் என்பவர் சென்னையில் குருவியாக வேலை பார்த்தது தெரிய வந்தது.

சென்னையில் ஐ.எஸ். பயங்கரவாத சதி செயலுக்கு நஸ்ரத் திட்டமிட்டாரா? என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com