search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gunfight"

    • பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் திடீரென பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
    • துப்பாக்கி சண்டையில் ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்தார்.

    பந்திபோரா:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திபோராவில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    அங்குள்ள சிந்திபந்தி கிராமத்தில் பாதுகாப்பு படையினர் வீடு வீடாக சென்று சோதனை நடத்தினர். அப்போது ஒரு வீட்டில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் திடீரென பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து பாதுகாப்பு படையினர் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு துப்பாக்கிச் சண்டை வெடித்தது. இந்த துப்பாக்கி சண்டையில் ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்தார்.

    இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, போலீசார் மற்றும் ராணுவத்தின் கூட்டுக் குழு பந்திபோராவில் சுற்றிவளைத்து பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதிகளை தேடும் நடவடிக்கையை மேற்கொண்டதாக தெரிவித்தார்.

    • அசாம் ரைஃபில் கேம்ப்-இல் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்.
    • நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரும் பணிகளில் காவல் துறை.

    மணிப்பூர் மாநிலத்தில் போலீசார் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவத்தில் மீண்டும் பதற்ற நிலை உருவாகி இருக்கிறது. காவல் துறையினரின் ரோந்து வாகனங்கள் மீது கிளர்ச்சியாளர்கள் திடீரென நடத்திய துப்பாக்கி சூட்டில் கமாண்டோ படை வீரர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் அசாம் ரைஃபில் கேம்ப்-இல் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து மொரெ நகரில் இரு வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. துப்பாக்கி சூடு மற்றும் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவங்களை தொடர்ந்து மணிப்பூரில் கூடுதலாக பாதுகாப்பு படையினர் விரைந்தனர். நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரும் பணிகளில் காவல் துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    இதன் காரணமாக இன்று பிற்பகல் 3.30 மணி முதலே கடுமையான துப்பாக்கி சூடு நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. மொரே பகுதியில் புதிய நுழைவு வாயில் மற்றும் சானோவ் கிராமத்தில் துப்பாக்கி சூடு தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

    ஜம்மு காஷ்மீரின் குல்காம் பகுதியில் நடைபெற்ற சண்டையில் 3 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். #JKEncounter #Kulgam
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டம் சவுகாமில் உள்ள ஒரு வீட்டில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு நேற்று இரவு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர், பயங்கரவாதிகள் இருந்த வீட்டை சுற்றி வளைத்தனர். இதையடுத்து இரு தரப்பினருக்குமிடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.

    இரவு முழுவதும் நீடித்த இந்த சண்டையில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 5 பயங்கரவாதிகள் அந்த வீட்டிற்குள் இருக்கலாம் என தெரியவந்துள்ளதால் தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.



    தீவிரவாதிகள் சுற்றி வளைக்கப்பட்டு தாக்குதல் நடைபெற்று வருவதால், பாரமுல்லா-காசிகந்த் பாதையில் ரெயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

    இதேபோல் ஜம்மு பிராந்தியத்தில் வியாழன் வெள்ளிக்கிழமைகளில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். #JKEncounter #Kulgam

    ×