என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயங்கரவாதிகள் சுட்டு கொலை"

    • பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.
    • இதையடுத்து அவர்கள் அப்பகுதியில் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

    இஸ்லாமாபாத்:

    ஆப்கானிஸ்தான் எல்லையையொட்டிய கைபர் பக்துன்கவா மாகாணத்தின் பன்னு மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட தெஹ்ரிக் - இ - தலிபான் இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாகிஸ்தான் பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அவர்கள், தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. இதில், 22 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

    இதுதொடர்பாக, ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், ஆப்கானிஸ்தான் எல்லையையொட்டிய பன்னு மாவட்டத்தின் வடக்கு வஜிரிஸ்தான் பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளும் இடையே நடந்த சண்டையில் 22 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என தெரிவித்துள்ளது.

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் நடந்த சண்டையில் 3 பயங்கரவாதிகளை ராணுவம் சுட்டுக்கொன்றது. #PulwamaEncouter #JKEncounter
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியில் ராணுவம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அவ்வகையில், புல்வாமா மாவட்டம் சர்னூ கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை மூலம் தகவல் கிடைத்துள்ளது.

    அதன் அடிப்படையில் இன்று காலை சர்னூ கிராமத்தை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். அப்போது பயங்கரவாதிகள் மறைந்திருந்து துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர்.



    சிறிது நேரம் நீடித்த இந்த சண்டையில் 3 பயங்கரவாதிகளை ராணுவம் சுட்டுக் கொன்றது. ராணுவம் தரப்பில் ஏற்பட்ட சேத விவரம் குறித்து தகவல் வெளியாகவில்லை. தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. #PulwamaEncouter #JKEncounter
    ஜம்மு காஷ்மீரின் குல்காம் பகுதியில் நடைபெற்ற சண்டையில் 3 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். #JKEncounter #Kulgam
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டம் சவுகாமில் உள்ள ஒரு வீட்டில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு நேற்று இரவு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர், பயங்கரவாதிகள் இருந்த வீட்டை சுற்றி வளைத்தனர். இதையடுத்து இரு தரப்பினருக்குமிடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.

    இரவு முழுவதும் நீடித்த இந்த சண்டையில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 5 பயங்கரவாதிகள் அந்த வீட்டிற்குள் இருக்கலாம் என தெரியவந்துள்ளதால் தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.



    தீவிரவாதிகள் சுற்றி வளைக்கப்பட்டு தாக்குதல் நடைபெற்று வருவதால், பாரமுல்லா-காசிகந்த் பாதையில் ரெயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

    இதேபோல் ஜம்மு பிராந்தியத்தில் வியாழன் வெள்ளிக்கிழமைகளில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். #JKEncounter #Kulgam

    ×