பாகிஸ்தானில் 22 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் அப்பகுதியில் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
பாகிஸ்தானில் 22 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
Published on

இஸ்லாமாபாத்:

ஆப்கானிஸ்தான் எல்லையையொட்டிய கைபர் பக்துன்கவா மாகாணத்தின் பன்னு மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட தெஹ்ரிக் - இ - தலிபான் இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாகிஸ்தான் பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவர்கள், தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. இதில், 22 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இதுதொடர்பாக, ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், ஆப்கானிஸ்தான் எல்லையையொட்டிய பன்னு மாவட்டத்தின் வடக்கு வஜிரிஸ்தான் பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளும் இடையே நடந்த சண்டையில் 22 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com