என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "militants killed"

    • பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.
    • இதையடுத்து அவர்கள் அப்பகுதியில் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

    இஸ்லாமாபாத்:

    ஆப்கானிஸ்தான் எல்லையையொட்டிய கைபர் பக்துன்கவா மாகாணத்தின் பன்னு மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட தெஹ்ரிக் - இ - தலிபான் இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாகிஸ்தான் பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அவர்கள், தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. இதில், 22 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

    இதுதொடர்பாக, ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், ஆப்கானிஸ்தான் எல்லையையொட்டிய பன்னு மாவட்டத்தின் வடக்கு வஜிரிஸ்தான் பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளும் இடையே நடந்த சண்டையில் 22 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என தெரிவித்துள்ளது.

    • குப்வாரா கெரான் சர்வதேச எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது.
    • பயங்கரவாதிகள் ஊடுருவும் முயற்சி வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. சர்வதேச எல்லைக்கோடு பகுதியில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.

    கடந்த 7-ந் தேதி முதல் ஆபரேஷன் பிம்பிள் என்ற பெயரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் பாதுகாப்பு படை வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் குப்வாரா கெரான் சர்வதேச எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது எல்லையில் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகளை அவர்கள் தடுத்து நிறுத்தினார்கள். உடனே அவர்கள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து பதிலுக்கு நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 2 பயங்கரவாதிகளும் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

    இதன் மூலம் பயங்கரவாதிகள் ஊடுருவும் முயற்சி வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது. தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளை தேடி வருகின்றனர்.

    • நேற்று இரவு எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் சந்தேகத்திற்கிடமான நடமாட்டம் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து கூட்டு நடவடிக்கை தொடங்கப்பட்டது.
    • பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சியை முறியடிக்க தற்போது தேடுதல் நடவடிக்கை நடந்து வருகிறது.

    ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தின் மச்சில் செக்டாரில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டில் (எல்ஓசி) பாதுகாப்புப் படையினர் ஊடுருவல் முயற்சியை முறியடித்தபோது 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.

    நேற்று இரவு எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் சந்தேகத்திற்கிடமான சில நடமாட்டம் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து கூட்டு நடவடிக்கை தொடங்கப்பட்டது. அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

    இரு தரப்பிற்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் பாதுகாப்பு படையினரால் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

    இதையடுத்து கூடுதல் படையினர் அப்பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மேலும் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சியை முறியடிக்க தற்போது தேடுதல் நடவடிக்கை நடந்து வருகிறது.

    • பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டு கோடு பகுதி வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவ முயல்வதாக ரகசிய தகவல் கிடைத்தது.
    • 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் இன்று அதிகாலை சுட்டு கொன்றனர்.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலில் மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி மற்றும் அவரது கூட்டாளிகள் 2 பேர் என மொத்தம் 3 பயங்கரவாதிகளை நேற்று முன்தினம் இந்திய ராணுவம் சுட்டுக்கொன்றது. தொடர்ந்து அப்பகுதியில் தீவிர பாதுகாப்பு பணியில் ஜம்மு காஷ்மீர் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டு கோடு (எல்.ஓ.சி.) பகுதி வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவ முயல்வதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அப்பகுதியில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது, ஊடுருவ முயன்ற 2 பாகிஸ்தான் பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் இன்று அதிகாலை சுட்டு கொன்றனர். இதன் மூலம் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

    • பாகிஸ்தானில் 3 வெவ்வெறு சம்பவங்களில் 30 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
    • கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் அமைந்துள்ள லக்கி மார்வத் பகுதியில் 18 பயங்கரவாதிகள் பலியாகினர்.

    லாகூர்:

    பாகிஸ்தானில் 3 வெவ்வெறு சம்பவங்களில் 30 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என அந்நாட்டு ராணுவம் தெரிவித்தது.

    தடை செய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) அமைப்பைச் சேர்ந்த 10 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 3,000 கிராம் வெடிபொருட்கள், 11 டெட்டனேட்டர்கள், 22 அடி பாதுகாப்பு ஃப்யூஸ் கம்பி, தடைசெய்யப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டன என்று செய்திகள் கூறுகின்றன.

    பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்க்வா மாகாணம் பகுதியில் அமைந்துள்ள லக்கி மார்வத் மாவட்டத்தில் 18 பயங்கரவாதிகளும், கராக் மாவட்டத்தில் 8 பயங்கரவாதிகளும் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், லக்கி மார்வத் மாவட்டத்தில் நடந்த மோதலில் 6 பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் அடைந்தனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதுதொடர்பாக, பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட அறிவிப்பில், பயங்கரவாத தடுப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த சண்டையில் லக்கி மார்வத் மாவட்டத்தில் 18 பயங்கரவாதிகளும், கராக் மாவட்டத்தில் 8 பயங்கரவாதிகளும் சேர்த்து மொத்தம் 26 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர் என தெரிவித்துள்ளது.

    • பாகிஸ்தானில் பாதுகாப்புப் படைக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் நடந்தது.
    • இந்த மோதலில் பயங்கரவாதிகள் உள்பட 30 பேர் உயிரிழந்தனர்.

    லாகூர்:

    பாகிஸ்தானில் உள்ள பலூசிஸ்தான் மாகாணத்தில் பலூசிஸ்தான் விடுதலை ராணுவம் என்ற கிளர்ச்சிக்குழு, பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் குழுக்கள் பொதுமக்கள், போலீசார் உள்பட பல்வேறு தரப்பினரைக் குறிவைத்து அவ்வப்போது பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தி வருகின்றன.

    இந்நிலையில், அந்நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தின் கலாட் மாவட்டத்தின் மங்கோசார் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த பாதுகாப்புப் படையினர் தீவிர சோதனை நடத்தினர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர்.

    இருதரப்பிற்கும் இடையே நடந்த மோதலில் பாதுகாப்புப் படையினர் 18 பேர், பயங்கரவாதிகள் 12 பேர் என மொத்தம் 30 பேர் உயிரிழந்தனர். இந்த மோதலை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

    • பாகிஸ்தானில் பாதுகாப்புப்படை தாக்குதல் நடத்தியது.
    • இந்தத் தாக்குதலில் 12 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

    பெஷாவர்:

    பாகிஸ்தானின் வடமேற்கில் அமைந்துள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் வடக்கு வசிரிஸ்தானின் ஹசன் கெல் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் அங்கு பாதுகாப்புப் படையினர் சென்று சோதனை நடத்தினர். அப்பகுதியில் மறைந்திருந்த பயங்கரவாதிகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தினர்.

    இந்தத் தாக்குதலில் 12 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடகப் பிரிவு தெரிவித்தது. கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் மீட்கப்பட்டது என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    கா‌‌ஷ்மீரில் நடந்த துப்பாக்கி சண்டையில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
    ஸ்ரீநகர்:

    கா‌‌ஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டம் சோபோர் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்பு படையினர் அந்த இடத்தை முற்றுகையிட்டனர். தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது, ஓரிடத்தில் மறைந்திருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.

    சுதாரித்துக் கொண்ட பாதுகாப்பு படையினர், பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். இருதரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது.

    இதில், 2 பயங்கரவாதிகள் பலியானார்கள். அவர்களின் பெயர், எந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பதை கண்டறியும் பணி நடந்து வருகிறது. சம்பவ இடத்தில் ஆயுதங்களும், வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டன.
    ஆப்கானிஸ்தானில் தலீபான்களுக்கும், ஆப்கான் வீரர்களுக்கும் இடையே நிகழ்ந்த தாக்குதலில் 10 பயங்கரவாதிகள் பலியாகினர்.
    காபூல்:

    ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்த, தலீபான் பயங்கரவாதிகளின் பிரதிநிதிகளோடு அமெரிக்க அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறபோதும், தலீபான்களின் அட்டூழியம் குறைந்தபாடில்லை.

    தலீபான்களுக்கும், ஆப்கான் வீரர்களுக்கும் இடையே கடுமையான மோதல்கள் நடந்து வருகின்றன. பயங்கரவாதிகளை ஒடுக்கும் வகையில் அவர்களின் நிலைகளை குறிவைத்து, ராணுவ வீரர்கள் அதிரடி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் சாபூல் மாகாணத்தில் சாய்வாரா என்ற நகரில் உள்ள போலீஸ் சோதனை சாவடி மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். கையெறி குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் பயங்கரவாதிகள் கடும் தாக்குதலில் ஈடுபட்டனர்.

    எனினும் உடனடியாக சுதாரித்துக்கொண்ட போலீசார் மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் தங்களது துப்பாக்கிகளால் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுத்தனர். இருதரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச்சண்டை நடந்தது.

    இதில், 10 பயங்கரவாதிகள் பலியாகினர். அதே சமயம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 5 பேர் உயிர் இழந்தனர். 3 போலீஸ் அதிகாரிகள் படுகாயம் அடைந்தனர்.

    இதற்கிடையில் பால்க் மாகாணத்தின், பால்க் மாவட்டத்தில் உள்ள தலீபான் பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து, ராணுவ வீரர்கள் நடத்திய அதிரடி தாக்குதலில் அந்த இயக்கத்தின் முக்கிய தளபதி ஒருவர் உள்பட 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 
    ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அங்கு சென்ற பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அவர்களை கண்டதும் பயங்கரவாதிகள் துப்பாக்கிகளால் சுட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாதுகாப்பு படையினரும் துப்பாக்கியால் சுட்டனர்.



    இந்த சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ராணுவ வீரர் சந்தீப் வீர மரணம் அடைந்தார். மேலும் ஒருவர் இறந்துள்ளார் என பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
    பாகிஸ்தானின் குவாதர் நகரில் நட்சத்திர ஓட்டலில் புகுந்து தாக்குதல் நடத்திய 3 பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர் என போலீசார் தெரிவித்தனர்.
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் எல்லையையொட்டி அமைந்துள்ளது. இங்குள்ள துறைமுக நகரான குவாதருக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம்.

    இந்த குவாதர் துறைமுகத்துக்கு அருகே உள்ள 5 நட்சத்திர ஓட்டல் ஒன்றுக்கு நேற்று மாலை சுமார் 4.45 மணியளவில் பயங்கர ஆயுதங்களுடன் 3 பயங்கரவாதிகள் திடீரென நுழைந்தனர். இதைப் பார்த்த ஓட்டல் காவலாளி அவர்களை தடுக்க முயன்றார். உடனே பயங்கரவாதிகள் அந்த காவலாளியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.



    அதன்பின், ஓட்டலில் தங்கியிருந்தவர்கள் மீது பயங்கரவாதிகள் அங்கு துப்பாக்கிச்சூடு நடத்த முயன்றனர்.

    தகவலறிந்து வந்த போலீசார், பயங்கரவாத தடுப்பு பிரிவினர் ஓட்டலில் நுழைந்த பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றனர். இந்த பயங்கரவாத சம்பவத்துக்கு பலூசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்றுள்ளது.இந்த தாக்குதல் சம்பவத்தால் குவாதர் நகர் முழுதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 
    ஆப்கானிஸ்தான் நாட்டின் மூன்று மாகாணங்களில் பாதுகாப்பு படையினர் நடத்திய 24 மணிநேர தேடுதல் வேட்டையில் 64 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். #militantskilled #Afghanmilitants #Talibanskilled
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டு வடக்கு பகுதியில் தலிபான் பயங்கரவாதிகள் மற்றும் பல்வேறு சிறிய பயங்கரவாத குழுக்களின் ஆதிக்கம் சமீபகாலமாக மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது.

    பயங்கரவாதிகள் மீது ஈவிரக்கம் காட்டாமல் நடவடிக்கை எடுக்குமாறு அந்நாட்டின் ராணுவம் மற்றும் போலீசார் ஆகியோரை கொண்ட கூட்டுப்படைகளுக்கு அதிபர் அஷ்ரப் கானி உத்தரவிட்டுள்ளார்.

    பயங்கரவாதிகளின் பதுங்குமிடங்களை குறிவைத்து ராணுவம் மற்றும் போலீசார் அடங்கிய சிறப்பு பாதுகாப்பு படையினர் நாடு முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். தரை மார்க்கமாகவும் வான்வழியாகவும் பயங்கரவாதிகளின் பதுங்குமிடங்கள் மீது குண்டுகள் வீசப்படுகின்றன.

    இந்நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் கிழக்கு காஸ்னி மாகாணத்தில் 7 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். இதேபோல், டக்கார் மாகாணத்தில் 5 பயங்கரவாதிகளும், ஸாபுல் மாகாணத்தில் 28 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.

    கிழக்கு வர்டாக் மாகாணத்தில் 17 பயங்கரவாதிகளும், தெற்கு உருஸ்கான் மாகாணத்தில் 7 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. #militantskilled  #Afghanmilitants #Talibanskilled 
    ×