என் மலர்

  நீங்கள் தேடியது "Militants Attack"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பயங்கரவாத செயல்களை வேரறுக்க வேண்டும் என மணிப்பூர் சம்பவம் மீண்டும் உறுதிப்படுத்துகிறது என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
  புதுடெல்லி:

  மணிப்பூர் மாநிலம் சுராசந்த்பூர் மாவட்டம் தேஹங் அருகே அசாம் ரைபிள் படையினர்  சென்ற வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் நேற்று திடீர் தாக்குதல் நடத்தினர்.

  இந்த தாக்குதலில் அசாம் ரைபிள் படையின் கட்டளை அதிகாரி விப்லவ் திரிபாதி, அவரது மனைவி, 8 வயது மகன் மற்றும் 4 வீரர்கள் என மொத்தம் 7 பேர் கொல்லப்பட்டனர். 4 பேர் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவத்திற்கு இதுவரை எந்த ஒரு  பயங்கரவாத  அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

  இந்நிலையில், மணிப்பூரில் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.

  இதுதொடர்பாக, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், மணிப்பூரில் அசாம் ரைபிள்ஸ் கான்வாய் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் நமது வீரர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் பலியாகியுள்ளனர். இந்த சம்பவம் கண்டிக்கத்தக்கது. அனைத்து வடிவங்களிலும் வெளிப்படக்கூடிய பயங்கரவாத செயல்களை வேரறுக்க வேண்டும் என இந்த சம்பவம் மீண்டும் உறுதிப்படுத்துகிறது என தெரிவித்துள்ளார்.

  இதேபோல், பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், மணிப்பூரில் அசாம் ரைபிள்ஸ் படையினர் மீது  பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை வண்மையாகக் கண்டிக்கிறேன். இதில் உயிரிழந்த வீரர்களுக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன். அவர்களின் குடும்பத்தாருக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார். 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காஷ்மீர் பகுதியில் குறிப்பாக, ஸ்ரீநகரில் பயங்கரவாதிகள் தாக்குதல் அதிகரித்து வருகிறது. கடந்த 2 மாதத்தில் 10-க்கும் மேற்பட்ட என்கவுண்டர்கள் நடைபெற்றுள்ளன.
  ஸ்ரீநகர்:

  ஜம்மு காஷ்மீரின் படாமல்லு பகுதியில் பயங்கரவாதிகள் நேற்று இரவு திடீரென தாக்குதல் நடத்தினர். அப்பகுதியில் எஸ்டி காலனியில் வசித்து வந்த போலீஸ் கான்ஸ்டபிள் தவுசிப் அகமது என்பவரை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.

  அவரது வீட்டின் அருகே நடந்த இத்தாக்குதலில் படுகாயம் அடைந்த அவர், மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார்.

  இதையடுத்து, பாதுகாப்புப் படையினர் அப்பகுதியை சுற்றி வளைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.  

  பயங்கரவாதிகளால் போலீஸ் கான்ஸ்டபிள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், இது கோழைத்தனமான தாக்குதல் என கண்டனம் தெரிவித்துள்ளன.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் மசூதிகளில் இன்று ஜும்மா தொழுகை நடைபெற்றபோது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் தலைமை இமாம் உள்பட இருவர் உயிரிழந்தனர்.
  இஸ்லாமாபாத்:

  ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் உள்ள புறநகர் பகுதியான பகிட்டா கோட் பகுதியில் உள்ள தக்வா மசூதியில் இன்று பகல் ஜூம்மா எனப்படும் வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகை நடைபெற்றது.

  சுமார் 1.20 மணியளவில் இந்த மசூதிக்குள் பலத்த சப்தத்துடன் சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் ஆப்கானிஸ்தான் நாட்டில் மிகவும் பிரசித்திபெற்ற இஸ்லாமிய போதகரான ’இமாம்’ மவுலவி சமியுல்லா ரைஹான் என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தார். 16 பேர் காயமடைந்தனர்.  இதேபோல், பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் மாகாணத்தின் தலைநகரான குவெட்டாவுக்கு உட்பட்ட பஷ்துனாபாத் பகுதியில் உள்ள ரெஹ்மானியா மசூதியிலும் இன்று ஜும்மா தொழுகையின்போது குண்டு வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தனர். பத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்.

  இவ்விரு தாக்குதல்களிலும் படுகாயமடைந்த சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அருணாச்சலப்பிரதேசம் மாநிலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் என்பிபி கட்சி எம்.எல்.ஏ.வான திரோங் அபோ உள்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
  இடாநகர்:

  அருணாச்சலப்பிரதேசம் மாநிலத்தின் தேசிய மக்கள் கட்சியின் எம்.எல்.ஏ.வாக பதவி வகித்து வந்தவர் திரோங் அபோ.

  இந்நிலையில், மேற்கு கோன்சா பகுதியில் உள்ள திரப் மாவட்டத்தில் இன்று பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் என்.பி.பி. கட்சி எம்.எல்.ஏ.வான திரோங் அபோ உள்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

  இந்த தாக்குதல் சம்பவத்துக்கு மேகாலயா மாநில முதல் மந்திரி கன்ராட் சங்மா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

  அருணாசலப்பிரதேசத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றதில்லை. எம்.எல்.ஏ மீதான தாக்குதல் குறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது என மாநில உள்துறை மந்திரி தெரிவித்துள்ளார். 

  அருணாசலப்பிரதேசத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் மேற்கு கோன்சா பகுதியில் போட்டியிட்டவர் திரோங் அபோ என்பதும், 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாகிஸ்தானின் குவாதர் நகரில் நட்சத்திர ஓட்டலில் புகுந்து தாக்குதல் நடத்திய 3 பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர் என போலீசார் தெரிவித்தனர்.
  இஸ்லாமாபாத்:

  பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் எல்லையையொட்டி அமைந்துள்ளது. இங்குள்ள துறைமுக நகரான குவாதருக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம்.

  இந்த குவாதர் துறைமுகத்துக்கு அருகே உள்ள 5 நட்சத்திர ஓட்டல் ஒன்றுக்கு நேற்று மாலை சுமார் 4.45 மணியளவில் பயங்கர ஆயுதங்களுடன் 3 பயங்கரவாதிகள் திடீரென நுழைந்தனர். இதைப் பார்த்த ஓட்டல் காவலாளி அவர்களை தடுக்க முயன்றார். உடனே பயங்கரவாதிகள் அந்த காவலாளியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.  அதன்பின், ஓட்டலில் தங்கியிருந்தவர்கள் மீது பயங்கரவாதிகள் அங்கு துப்பாக்கிச்சூடு நடத்த முயன்றனர்.

  தகவலறிந்து வந்த போலீசார், பயங்கரவாத தடுப்பு பிரிவினர் ஓட்டலில் நுழைந்த பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றனர். இந்த பயங்கரவாத சம்பவத்துக்கு பலூசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்றுள்ளது.இந்த தாக்குதல் சம்பவத்தால் குவாதர் நகர் முழுதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாகிஸ்தானின் கவாதர் பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பயங்கரவாதிகள் திடீரென நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
  இஸ்லாபாமாத்:

  பாகிஸ்தான் நாட்டின் குவாதர் நகரில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இன்று மாலை 4.50 மணியளவில் சில பயங்கரவாதிகள் திடீரென புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

  அவர்கள் ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தியதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. 

  இதுதொடர்பாக பாகிஸ்தான் காவல்துறையினர் கூறுகையில், ஐந்து நட்சத்திர விடுதியில் வெளிநாட்டினர் யாரும் இல்லை என தெரிவித்துள்ளனர். இதையடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

  குவாதர் நகரில் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள துறைமுகம் அருகே பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளனர். இந்திய பெருங்கடலையும் ஜின்ஜியாங் மாகாணத்தையும் இணைப்பதற்கான துறைமுகத்தை சீனா கட்டி வருவது குறிப்பிடத்தக்கது. 

  நட்சத்திர ஹோட்டலுக்குள் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தும் சத்தம் கேட்டதாகவும், ஹோட்டல்களில் தங்கியிருப்பவர்கள் அலறல் சத்தம் கேட்டதாகவும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளதாக டான் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காஷ்மீர் மாநிலம் முழுவதும் இருந்த பயங்கரவாதத்தை தற்போது 2 மாவட்டங்களுக்குள் அடக்கி இருப்பதாக பிரதமர் மோடி பேசியுள்ளார். #PMModi #BJP
  காந்திநகர்:

  பிரதமர் மோடி இன்று தனது சொந்த மாநிலமான குஜராத் மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரம் செய்தார்.

  இன்று காலை அம்ரேலி நகரில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு மோடி பேசினார். அவர் கூறியதாவது:-

  குஜராத் மாநிலம்தான் எனது அரசியல் வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்தது. இங்கு நான் கற்றுக் கொண்டது ஏராளம். அந்த படிப்பினை காரணமாகத் தான் பிரதமர் பதவியில் என்னால் திறம்பட செயல்பட முடிகிறது.

  2017-ம் ஆண்டு சீனாவுடன் டோக்லாம் எல்லைப் பகுதியில் திடீர் பிரச்சனை ஏற்பட்டது. குஜராத்தில் நான் கற்றுக் கொண்ட பாடம்தான் அந்த பிரச்சனையை தீர்க்க உதவியாக இருந்தது.

  இன்று இங்கு நீங்கள் திரண்டிருப்பது தேர்தல் பிரசார பேரணிக்காக அல்ல. நான் உங்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவே இந்த கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.

  குஜராத்தில் சர்தார் சரோவர் அணைக்கட்டு திட்டம் 40 ஆண்டுகளுக்கு முன்பே முடிக்கப்பட்டு இருக்க வேண்டும். அப்படி முடிக்கப்பட்டு இருந்தால் குஜராத் இன்று வளமான மாநிலமாக இப்போது இருப்பதை விட மிக சிறப்பாக இருந்து இருக்கும்.

  குஜராத்தில் சர்தார் வல்லபாய் படேலுக்கு நான் பிரமாண்ட சிலை அமைத்ததை சிலர் விமர்சனம் செய்கிறார்கள். வல்லபாய் பட்டேலுக்கு சிலை அமைத்ததன் மூலம் நான் நேருவுக்கு எந்த அவமரியாதையும் செய்யவில்லை. இதை அரசியல் ஆக்கக் கூடாது.

  காஷ்மீர் மாநிலத்தில் மிகப்பெரிய அளவில் பயங்கரவாதம் இருந்தது. அந்த மாநிலம் முழுவதும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டு இருந்தது.

  ஆனால் நாங்கள் வந்தபிறகு பயங்கரவாதத்தை கடுமையாக ஒடுக்கி இருக்கிறோம். அந்த மாநிலம் முழுவதும் இருந்த பயங்கரவாதத்தை தற்போது 2 மாவட்டங்களுக்குள் அடக்கி இருக்கிறோம்.

  கடந்த 5 ஆண்டுகளில் காஷ்மீரில் எந்த பெரிய குண்டு வெடிப்பும் நடக்கவில்லை என்பதை பொதுமக்கள் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.

  காஷ்மீரில் புல்வாமா பகுதியில் தாக்குதல் நடத்தியதற்கு நாம் சரியான பதிலடி கொடுத்து இருக்கிறோம். அப்படி பதிலடி கொடுத்த பிறகு பாகிஸ்தான் பணிந்ததை நீங்களே பார்த்தீர்கள்.

  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வெளிப்படையாகவே போனில் பேசி சமரசத்திற்கு தயாராக இருந்தேன் என்று கூறினார். இதற்கு முன்பு பாகிஸ்தான் தரப்பில் இருந்து இப்படி பேசப்பட்டது இல்லை. அத்தகைய வலுவான நிலையை நாம் உருவாக்கி இருக்கிறோம்.

  நாடு சுதந்திரம் அடைந்த பிறகு காங்கிரஸ் கட்சி, கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில்தான் மிக மோசமான தோல்வி தழுவியது. வரலாறு காணாத அளவுக்கு அந்த கட்சிக்கு வெற்றி எண்ணிக்கை வீழ்ச்சி அடைந்தது.

  என்றாலும் அவர்களுக்கு இன்னும் ஆசை விடவில்லை. இந்த தடவை மிக குறைவான இடங்களில் போட்டி போடும் காங்கிரசார் ஆளும் கட்சியாக மாற கனவு கண்டு கொண்டு இருக்கிறார்கள்.

  இவ்வாறு மோடி பேசினார். #PMModi #BJP
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜம்மு காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ராணுவ வீரர் உயிரிழந்தார். #MilitantsAttack
  ஸ்ரீநகர்:

  ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டத்தில் உள்ள வார்போரா பகுதியில் மொகமது ரபி யாடூ என்ற ராணுவ வீரரின் வீடு அமைந்துள்ளது.

  இன்று மாலை அந்த பகுதியில் மறைந்திருந்த பயங்கரவாதிகள் யாடூ வீட்டுக்குள் நுழைந்து துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் ராணுவ வீரர் மொகமது ரபி யாடூ படுகாயம் அடைந்தார்.

  உறவினர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். 

  ராணுவ வீரர் இறந்ததையடுத்து அந்தப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. பயங்கரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். #MilitantsAttack
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய கையெறி குண்டு வீச்சு தாக்குதலில் பாதுகாப்பு படைவீரர் ஒருவர் காயமடைந்தார். #JammuKashmir #MilitantsAttack
  ஸ்ரீநகர்:

  ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் இன்று ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

  அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் சிலர், பாதுகாப்பு படையினர் மீது கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

  இதில் பாதுகாப்பு படைவீரர் ஒருவர் படுகாயம் அடைந்தார். சக வீரர்கள் அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

  பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. அவர்களை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர்.

  இதேபோல், ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாராமுல்லாவில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்களில் ஒருவர் பலியானார் என ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். #JammuKashmir #MilitantsAttack
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தெற்கு காஷ்மீரில் உள்ள ரெஷிபோரா பகுதியில் இன்று பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் வாலிபர் ஒருவர் உயிரிழந்தார். #JammuKashmir #MilitantsAttack
  ஸ்ரீநகர்:

  ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டம், ரெஷிபோரா பகுதியில் வசித்து வந்தவர் மோஷின் வானி. இன்று தன்து வீட்டின் அருகே மோஷின் வானி நின்று கொண்டிருந்தார். அப்போது, துப்பாக்கிகளுடன் அங்கு வந்த பயங்கரவாதிகள் அவரை சுற்றி வளைத்து சரமாரியாக சுட்டனர்.

  இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். #JammuKashmir #MilitantsAttack
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பயங்கரவாதிகள் தாக்குதலை இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது என்று பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார். #PMModi

  காசியாபாத்:

  மத்திய தொழில் பாதுகாப்பு படையின் 50-வது ஆண்டு தொடக்க விழா உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் நடந்தது. அதில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

  அப்போது புல்வாமா மற்றும் உரியில் நடந்த தாக்குதல்களை குறிப்பிட்டு பேசிய அவர் பயங்கரவாதிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

  பெரும் பகை உணர்வு கொண்ட அண்டை நாட்டை (பாகிஸ்தானை) எதிர் கொள்வதில் மத்திய தொழில் பாதுகாப்பு படைகள் போன்றவைகளின் பங்கு மிக முக்கியமானது. அண்டை நாடு பெரும் பகை உணர்வுடன் இருந்தாலும், அவர்களால் நம்முடன் போரிடும் திறன் இல்லை.

  எனவே, எல்லை தாண்டும் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் சதி செயலில் ஈடுபடுகின்றனர். பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தும் இக்கட்டான சூழ்நிலையில் நாட்டின் பாதுகாப்பில் மத்திய தொழில் பாதுகாப்பு படை போன்ற நிறுவனங்கள் முக்கிய சவால்களை சந்திக்கின்றன.

  புல்வாமா மற்றும் உரியில் பயங்கரவாதிகள் தாக்குதல்களை நடத்தினர். இதுபோதும் என கருதுகிறேன். காலம் உள்ளவரை எங்களால் இதை பொறுத்துக் கொள்ள முடியாது. நாடு எப்போதும் கஷ்டங்களை தாங்கிக் கொண்டிருக்காது என பயங்கரவாதிகளை கடுமையாக எச்சரிக்கிறேன்.

  வி.ஐ.பி. கலாசாரம் சில நேரங்களில் நாட்டின் பாதுகாப்பு முறையில் தடையை ஏற்படுத்துகின்றன. எனவே அரசு கடும் நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டிய நிலை உள்ளது. ஒரு தனிப்பட்ட நபரை பாதுகாப்பது எளிது, ஆனால் எந்த ஒரு நிறுவனத்தையும் பாதுகாப்பது மிகவும் கடினம்.

  இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo