என் மலர்
இந்தியா

ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களில் ராணுவ வீரர்களுக்கு இலவச டிக்கெட்
- முன்பதிவு செய்யப்பட்டுள்ள டிக்கெட்டுகளுக்கு முழு பணத்தையும் திரும்ப பெற அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
- சலுகைகளை இந்த விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
புதுடெல்லி:
பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் தாக்கி அழித்தது.
இதனை தொடர்ந்து விடுமுறையில் உள்ள ராணுவ வீரர்கள் உடனடியாக பணிக்கு திரும்பவும் ஏற்கனவே பணியில் இருப்பவர்கள் சொந்த ஊருக்கு செல்லவும் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களில் முன்பதிவு செய்த ராணுவ மற்றும் ஆயுதப்படை வீரர்களுக்கு டிக்கெட்டுகளை இலவசமாக வழங்க அந்த நிறுவனங்கள் முன் வந்துள்ளன.
வருகிற 31-ந் தேதி வரை ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களில் முன்பதிவு செய்யப்பட்ட பாதுகாப்பு படை உள்ளிட்ட ஆயுதப்படை வீரர்களுக்கு இலவச பயண திட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டுள்ள டிக்கெட்டுகளுக்கு முழு பணத்தையும் திரும்ப பெற அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
ஜூன் 30-ந்தேதி வரை விமானங்களை மறு அட்டவணை படுத்தி சலுகைகளை இந்த விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளன.






