என் மலர்

  நீங்கள் தேடியது "JK Encounter"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் நடந்த சண்டையில் 3 பயங்கரவாதிகளை ராணுவம் சுட்டுக்கொன்றது. #PulwamaEncouter #JKEncounter
  ஸ்ரீநகர்:

  ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியில் ராணுவம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அவ்வகையில், புல்வாமா மாவட்டம் சர்னூ கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை மூலம் தகவல் கிடைத்துள்ளது.

  அதன் அடிப்படையில் இன்று காலை சர்னூ கிராமத்தை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். அப்போது பயங்கரவாதிகள் மறைந்திருந்து துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர்.  சிறிது நேரம் நீடித்த இந்த சண்டையில் 3 பயங்கரவாதிகளை ராணுவம் சுட்டுக் கொன்றது. ராணுவம் தரப்பில் ஏற்பட்ட சேத விவரம் குறித்து தகவல் வெளியாகவில்லை. தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. #PulwamaEncouter #JKEncounter
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜம்மு காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் மேலும் 2 பயங்கரவாதிகளை ராணுவம் சுட்டுக் கொன்றது. #JKEncounter #JKMilitantsKilled #Infiltrators
  ஸ்ரீநகர்:

  ஜம்மு காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் கடந்த 9-ம் தேதி பயங்கரவாதிகள் ஊடுருவியது தெரியவந்தது. இதையடுத்து அங்கு தேடுதல் வேட்டையை ராணுவம் தீவிரப்படுத்தியது. பன்னார் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் முகாமிட்டிருப்பதாக தகவல் வந்ததையடுத்து அந்த பகுதியை ராணுவம் சுற்றி வளைத்தது. அதன்பின்னர் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படைகளுக்குமிடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது.

  இந்த சண்டையில் வியாழக்கிழமை 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஒரு ராணுவ வீரர் உயிரிழந்தார். நேற்று கடும் சண்டைக்குப் பிறகு, இரவு தேடுதல் வேட்டை நிறுத்திவைக்கப்பட்டது.

  இந்நிலையில் இன்று காலை மீண்டும் தேடுதல் வேட்டை தொடங்கியது. அப்போது நடந்த மோதலில் மேலும் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதன்மூலம் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து சண்டை நடைபெற்று வருவதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது. #JKEncounter #JKMilitantsKilled #Infiltrators
  ×