என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜம்மு காஷ்மீர் என்கவுண்டர் - பந்திபோராவில் மேலும் 2 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றது ராணுவம்
    X

    ஜம்மு காஷ்மீர் என்கவுண்டர் - பந்திபோராவில் மேலும் 2 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றது ராணுவம்

    ஜம்மு காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் மேலும் 2 பயங்கரவாதிகளை ராணுவம் சுட்டுக் கொன்றது. #JKEncounter #JKMilitantsKilled #Infiltrators
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் கடந்த 9-ம் தேதி பயங்கரவாதிகள் ஊடுருவியது தெரியவந்தது. இதையடுத்து அங்கு தேடுதல் வேட்டையை ராணுவம் தீவிரப்படுத்தியது. பன்னார் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் முகாமிட்டிருப்பதாக தகவல் வந்ததையடுத்து அந்த பகுதியை ராணுவம் சுற்றி வளைத்தது. அதன்பின்னர் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படைகளுக்குமிடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது.

    இந்த சண்டையில் வியாழக்கிழமை 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஒரு ராணுவ வீரர் உயிரிழந்தார். நேற்று கடும் சண்டைக்குப் பிறகு, இரவு தேடுதல் வேட்டை நிறுத்திவைக்கப்பட்டது.

    இந்நிலையில் இன்று காலை மீண்டும் தேடுதல் வேட்டை தொடங்கியது. அப்போது நடந்த மோதலில் மேலும் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதன்மூலம் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து சண்டை நடைபெற்று வருவதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது. #JKEncounter #JKMilitantsKilled #Infiltrators
    Next Story
    ×