என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "troops"

    • அனைத்து ஆயுதப்படை பிரிவினருக்கும் இந்தத் திட்டம் பொருந்தும்.
    • பாதுகாப்புப் படைவீரர்ர்களே தேசத்தின் உண்மையான ஹீரோக்கள் என்றார் டிரம்ப்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுடன் உரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:

    அமெரிக்காவின் பாதுகாப்புப் படைகளில் பணியாற்றிவரும் 14.5 லட்சம் பேருக்கு இன்ப அதிர்ச்சியாக இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.60 லட்சம் சிறப்பு ஊக்கத்தொகையை அறிவித்துள்ளேன்.

    அமெரிக்கா சுதந்திரம் பெற்று ஒரு தேசமாக உருவான ஒரு ஆண்டாக 1776-ஐ நினைவு கூரும் வகையில் இந்தத் தொகை குறியீடாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    வாரியர் டிவிடெண்ட் என அழைக்கப்படும் இந்தத் திட்டம் தரைப்படை, கடற்படை, விமானப்படை, கடலோர காவல்படை மற்றும் விண்வெளி படை என அனைத்து ஆயுதப்படை பிரிவினருக்கும் பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    நாட்டின் தொடக்கத்தைக் கவுரவிக்கும் இந்தத் தொகைக்கு நமது வீரர்களைவிட தகுதியானவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது. அவர்களே தேசத்தின் உண்மையான ஹீரோக்கள் என புகழாரம் சூட்டினார்.

    இந்த திட்டத்திற்கான நிதி ஆதாரமானது அமெரிக்காவின் பொது பட்ஜெட்டிலிருந்து எடுக்கப்படாமல் பிற நாடுகள் மற்றும் வெளிநாட்டு இறக்குமதி பொருட்கள் மீது விதிக்கப்பட்ட அதிரடி வர்த்தக வரி மூலம் திரட்டப்பட்ட வருவாயிலிருந்து வழங்கப்படுகிறது.

    • பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர்.
    • துப்பாக்கி சூட்டில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

    ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியை அடுத்த நெஹாமாவில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து, பாதுகாப்பு படையினர் அந்த பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். பாதுகாப்பு படையினரை பார்த்ததும், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர்.

    இதையடுத்து பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினர் மற்றும் பயங்கரவாதிகள் இடையே இன்று காலை முதல் துப்பாக்கி சூடு நடைபெற்று வருகிறது. ரயிஸ் அகமது மற்றும் ரெயாஸ் அகமது ஆகிய பயங்கரவாதிகள் புல்வாமா மாவடத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

    கடும் துப்பாக்கி சூட்டை தொடர்ந்து இவர்கள் மறைந்திருந்த வீட்டில் இருந்து தீப்பற்றி எரிவதும், வானில் கரும்புகை எழுவதுமான காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகி உள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தின் போது இருதரப்பிலும் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.

    முன்னதாக மே 7 ஆம் தேதி பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதில் ஒருவர் லஷ்கர் ஆதரவு பயங்கரவாத அமைப்பை சேர்ந்த பசித் தார் என்பது தெரியவந்தது. 


    குடியேறிகளை தடுப்பதாக கூறி எல்லைப்பகுதியில் 5 ஆயிரம் ராணுவத்தினரை குவித்து அதிபர் டொனால்ட் டிரம்ப் 'அரசியல் ஸ்டன்ட்’ அடிப்பதாக முன்னாள் அதிபர் ஒபாமா குற்றம்சாட்டியுள்ளார். #Obama #Mexicanborder #Trump #Trumppoliticalstunt #politicalstunt
    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபராக பொறுப்பு வகிக்கும் டொனால்ட் டிரம்ப் அந்நாட்டின் குடியுரிமை விவகாரங்களில் மிகவும் கறாராக உள்ளார். சட்டவிரோதமான குடியேற்றங்களை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார்.

    எல் சவடோர், ஹோன்டுராஸ், குவட்டெமலா ஆகிய லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து சுமார் 7 ஆயிரம் குடியேறிகள் அமெரிக்காவுக்குள் குடியேறுவதற்காக மெக்சிகோ நாட்டின் வழியாக வந்து கொண்டிருப்பதாக தெரிவித்த டிரம்ப், அவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைவதை தடுக்கும் வகையில் அமெரிக்கா - மெக்சிகோ எல்லப்பகுதியில் சுமார் 5 ஆயிரம் அமெரிக்க ராணுவ வீரர்களை அனுப்பி வைத்துள்ளார்.

    இந்நிலையில், டிரம்ப்பின் இந்த நடவடிக்கையை  'அரசியல் ஸ்டன்ட்’ என அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா குற்றம் சாட்டியுள்ளார்.

    ஜார்ஜியா மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய ஒபாமா, ‘அமெரிக்காவை நோக்கி அடைக்கலத்துக்காக வரும் ஏழை அகதிகளால் நாட்டின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டு விட்டதாக தற்போது அரசு கூறுகிறது.

    கைகளில் குழந்தைகளுடன் பலநூறு மைல்கள் நடந்துவரும் அவர்களை தடுத்து நிறுத்துவதற்காக நமது வீரம்மிக்க ராணுவத்தை அனுப்பி வைத்துள்ளனர். தங்கள் குடும்பத்தினருடன் இருக்க வேண்டிய நேரத்தில் நமது ராணுவத்தை சேர்ந்த வீரர்-வீராங்கணைகள் இவர்களின் அரசியல் ஸ்டன்ட்டுக்காக எல்லைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதுவா நாட்டுப்பற்று? இது நாட்டுப்பற்றில்லை. வெறும் அரசியல் ஸ்டன்ட் மட்டும்தான்.

    தேர்தல்கள் வரும் காலத்தில் இதுபோல் பேசுவதும், தேர்தலுக்கு பின்னர் இதை எல்லாம் மறந்து விடுவதும் இவர்களுக்கு சகஜமாகி விட்டது என்று ஒபாமா குறிப்பிட்டுள்ளார். #Obama #Mexicanborder #Trump #Trumppoliticalstunt #politicalstunt
    ×