என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "படைவீரர்கள்"

    • அனைத்து ஆயுதப்படை பிரிவினருக்கும் இந்தத் திட்டம் பொருந்தும்.
    • பாதுகாப்புப் படைவீரர்ர்களே தேசத்தின் உண்மையான ஹீரோக்கள் என்றார் டிரம்ப்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுடன் உரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:

    அமெரிக்காவின் பாதுகாப்புப் படைகளில் பணியாற்றிவரும் 14.5 லட்சம் பேருக்கு இன்ப அதிர்ச்சியாக இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.60 லட்சம் சிறப்பு ஊக்கத்தொகையை அறிவித்துள்ளேன்.

    அமெரிக்கா சுதந்திரம் பெற்று ஒரு தேசமாக உருவான ஒரு ஆண்டாக 1776-ஐ நினைவு கூரும் வகையில் இந்தத் தொகை குறியீடாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    வாரியர் டிவிடெண்ட் என அழைக்கப்படும் இந்தத் திட்டம் தரைப்படை, கடற்படை, விமானப்படை, கடலோர காவல்படை மற்றும் விண்வெளி படை என அனைத்து ஆயுதப்படை பிரிவினருக்கும் பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    நாட்டின் தொடக்கத்தைக் கவுரவிக்கும் இந்தத் தொகைக்கு நமது வீரர்களைவிட தகுதியானவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது. அவர்களே தேசத்தின் உண்மையான ஹீரோக்கள் என புகழாரம் சூட்டினார்.

    இந்த திட்டத்திற்கான நிதி ஆதாரமானது அமெரிக்காவின் பொது பட்ஜெட்டிலிருந்து எடுக்கப்படாமல் பிற நாடுகள் மற்றும் வெளிநாட்டு இறக்குமதி பொருட்கள் மீது விதிக்கப்பட்ட அதிரடி வர்த்தக வரி மூலம் திரட்டப்பட்ட வருவாயிலிருந்து வழங்கப்படுகிறது.

    • மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர்-641 604 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
    • exweltup@tn.gov.in என்ற இணையதள முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

    திருபபூர் :

    ராணுவம், கடற்படை, விமானப்படை என முப்படைகளில் பணிபுரிந்து படைப்பணியில் இருந்து ஓய்வு பெற்ற அனைத்து முன்னாள் படைவீரர்களின் விவரங்களும், அவர்தம் விதவையர் விவரங்களும் அந்தந்த மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தில் கணினி மூலம் பதிவேற்றம் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அவ்வாறு திருப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் முன்னாள் படைவீரர்கள் மற்றும் விதவையர்களின் விவரங்களும் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தால் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

    இதுநாள் வரை தங்கள் விவரங்களை கணினியில் பதிவேற்றம் செய்யாமல் இருக்கும் முன்னாள் படைவீரர், அவர் தம் விதவையர்கள் உடனடியாக திருப்பூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு தங்களின் செல்போன் எண், ஆதார் எண், இமெயில் முகவரி ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும்.

    நேரிலோ அல்லது தபாலிலோ உதவி இயக்குனர் (பொறுப்பு), முன்னாள் படைவீரர் நல அலுவலகம், அறை எண்.523, 5-வது தளம், மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர்-641 604 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். 0421 2971127 என்ற தொலைபேசி எண்ணிலோ, exweltup@tn.gov.in என்ற இணையதள முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    • நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.
    • முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்கள் கலந்து கொண்டு பயனடையலாம்.

    தஞ்சாவூர்:

    முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நாளை ( செவ்வாய்க்கிழமை ) காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.

    முன்னாள் படை வீரர்கள், சார்ந்தோர்கள் 2 பிரதிகளில் மனுக்களை தங்கள் அடையாள அட்டையுடன் இணைந்து சமர்ப்பிக்க வேண்டும்.

    எனவே கூட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்கள் கலந்து கொண்டு பயனடையலாம்.

    மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் தீப க்ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

    ×